தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி., முதல்வர்| Dinamalar

தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி., முதல்வர்

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (87)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நான்கு மணிநேரம், உறக்கம், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யாநாத்

லக்னோ: உ.பி., முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்ய நாத் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் பழக்கம் உள்ளவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


தியானத்தில் ஈடுபாடு:

தினம் நான்கு மணி நேர தூக்கம் போக மீதி நேரத்தில் பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபட்டுவருகிறார். இதனால் இவர் லோக்சபா எம்.பி., க்கள் மத்தியில் அதிக சுறுசுறுப்பானவர் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.


284 கேள்விகள்:

யோகி ஆதித்யாநாத் பார்லிமென்ட் கூட்டங்களில் இதுவரை 284 கேள்விகளை கேட்டுள்ளார் எனத் தெரிகிறது. 56 விவதாங்களிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். மற்ற எம்.பி., க்கள், பார்லி.,யில் சராசரியாக 180 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்போர்ட்ஸ் மேன்:

யோகி ஆதித்யாநாத், 17 நிறுவனங்களுக்கு தலைவராக இருந்து, நிர்வாக அனுபவங்கள் பெற்றவர். இவர் நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டில் சிறந்து விளங்குபவர் எனத் தெரிய வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muralikrishnan.G - chennai,இந்தியா
21-மார்-201722:10:03 IST Report Abuse
Muralikrishnan.G நான் இரண்டு மணி நேரம் மாத்திரமே தூங்குகிறேன்.ஆனால் CM ஆக முடியல
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
21-மார்-201716:01:38 IST Report Abuse
Ravichandran ஹிந்து மாதத்தில் வாழ்வியல் முறையில் அபாரமான நம்பிக்கையும் ஆழ்ந்த அறிவூ உடையவர். சிறந்த நிர்வாகியாக அனைத்து மக்களிடமும் புகழ் பெறுவார்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201715:18:53 IST Report Abuse
மலரின் மகள் எண்ணிக்கையை விட, செய்த செயல்களின் நற்பலன்களாலேயே ஒருவரின் தரம் நிர்ணயிக்கப் பட வேண்டும். ஆயிரம் மிதிவண்டிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கலாம் ஆனால் ஒரு சொகுசு காருக்கு ஈடாகுமா? எத்தனை செய்தார் என்பதை விட எதை செய்தார் என்பதே முக்கியம். சுறு சுறுப்பானவர் என்றும், நிர்வாக பக்குவம் உள்ளவர் என்றும், சம்சார வாழ்வில் விருப்பம் என்பதை விட, சொந்த விஷயங்களில் பற்றை நீக்கி, நாட்டு நலன் மற்றும் இந்து மாதத்தில் பற்றுள்ளவர் என்றும் தெரிய பாடுகிறார். நாட்டிக்கரு நல்லது செய்வதன் மூலம் இந்து மதத்திற்கும் நல்ல பெயரையும் சிறப்பையும் செய்யலாம் என்று நம்பும் சிலரில் இவர் முக்கியமானவராக தெரிகிறார். நல்லது செய்யட்டும். ஊழல் செய்ய மாட்டார் அதற்கு அவசியம் இவருக்கு இல்லை. பொருள் தேட இவர் அரசியலுக்கு வரவில்லை.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201715:02:35 IST Report Abuse
PRABHU இவர் எத்தனை மணிநேரம் தூங்கினால் நமக்கென்ன .....மக்களுக்கு எதாவது செய்தால் சரி.....மோடி பிரதமர் ஆனபோது இப்பிடித்தான் சொன்னீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
21-மார்-201714:49:03 IST Report Abuse
X. Rosario Rajkumar தினமும் ஆறு அல்லது ஏழு மணி நேரம் தூங்குங்கள் . இல்லையேல் இரத்த கொதிப்பு வந்து விடும் .
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
21-மார்-201714:46:33 IST Report Abuse
Power Punch மரியாதைக்குரிய up முதல்வர் மேல் எதனை கிரிமினல் வழக்குகள் ரேகிச்டேர் ஆகி இருக்கின்றன என்று தெரியுமா.. எதனை வழக்குகள் FIR போட்ட நிலையில் இருக்கின்றந என்று தெரியுமா.. அவைகள் என்ன குற்றம் சம்பந்தப்பட்டது என்று தெரியுமா ..இவ்வளவு பிஸியா இருந்தவர் எப்படி அதிக நேரம் தூங்க முடியும்..
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-201714:42:24 IST Report Abuse
இந்தியன் kumar 26 வயதில் இருந்து தொடர்ந்து எம்பீயாகி இருந்து வருகிறார் , இவரது நல்ல செயற்பாட்டினால் தான் மக்கள் இவரை தொடர்ந்து தேர்ந்து எடுத்து வருகின்றனர் , எளிய மனிதர் அணைத்து உயிர்களின் மீதும் அன்பு காட்டுபவர் , இஸ்லாமிய குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அவரியே தன்னுடைய உதவியாளராக வைத்திருப்பவர் கண்டிப்பாக உபி மக்களுக்கு நன்மை செய்வார் , அப்படி செய்யும் பொது மக்களின் மனதில் இன்னும் செல்வாக்கு உயரும் , அடுத்த பிரதமருக்கான வாய்ப்பும் பிரகாசமாய் இருக்கும் , நல்லவர்கள் பொறுப்புக்கு வருவது மிக்க நல்லது , வாழ்க பாரதம் இந்தியன் குமார்.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
21-மார்-201713:24:05 IST Report Abuse
Prabaharan நல்லவராக இருப்பது நல்லது. 33 க்ரிமினல்களுக்கு எதற்காக டிக்கட் கொடுத்தார்கள். வேறு ஆட்கள் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201712:53:29 IST Report Abuse
Nallavan Nallavan மக்களுக்குப் பதினாறு மணிநேரம் ஒருத்தரு உழைக்கிறாரு .... அவரு அம்பத்தாறு இஞ்சு மார்புக்கு சொந்தக்காரரு .... அவர் சார்ந்த கட்சி முதல்வர் இவரு .... இவங்க ரெண்டு பெரு மட்டுமே போதுமே .... இந்தியாவை வல்லரசு ஆக்காம விட மாட்டாங்க போலிருக்கே ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201712:47:21 IST Report Abuse
Srinivasan Kannaiya யோகிகள் இறைவனை நினைத்து கொண்டு இருப்பதால் தூக்கம் வராது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை