பணியிடங்களில் பாலியல் தொல்லை: 90 நாட்கள் சம்பள விடுமுறை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு உள்ளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளத்துடன் விடுப்பு:


மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொலைக்கு உட்பாட்டால், அவர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கமிட்டிகள், பாலியல் குறித்த விசாரணையை நடத்தும் காலத்தில், குற்றம் புரிந்தவர்கள் அச்சுறுத்தல்கள் விடுப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பரிந்துரையின்படி..


மேலும், இந்த விடுமுறை, விசாரணை கமிட்டியின் பரிந்துரையின்படி வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலத்திலிருந்து கழிக்கப்படாது எனவும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201717:47:40 IST Report Abuse
Balaji தங்களுக்கு ஆதரவாக சட்டங்கள் பல இருக்கிறது என்று தவறாக பயன்படுத்தாத வரை நல்லது தான்....... ஏற்கனவே வரதட்சணைக் கொடுமை என்று வரும் வழக்குகளில் முக்கால்வாசி பொய் வழக்காத்தான் இருக்கிறது என்று ஒரு சர்வே தெரிவிக்கிறதாம்.........
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
21-மார்-201716:27:20 IST Report Abuse
Siva ஆம்பளைங்க இப்பவாது முழிச்சிக்கங்க பெண்கள் பெண்கள் அப்படின்னு கும்மி அடிச்சிட்டு இருக்காதிங்க இதல்லாம் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் இல்ல.. ஆண்களை அடக்கி வைக்க, மிரட்ட போடப்பட்ட சட்டங்கள்....
Rate this:
Share this comment
Cancel
karthi - MADURAI,இந்தியா
21-மார்-201715:37:18 IST Report Abuse
karthi ரொம்ப நல்ல சட்டம் சார். வாழ்க ஜனநாயகம்.................
Rate this:
Share this comment
Cancel
Vadivu - Salem,இந்தியா
21-மார்-201714:13:29 IST Report Abuse
Vadivu இதான் துக்ளக் கோமாளி ஆட்சி
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
21-மார்-201713:28:21 IST Report Abuse
Sami பேசாம பெண்களை இனிமேல் வீட்டு வேலைகளை (அதாவது அடுப்படி வேலை, துணி துவைப்பது, காய்கறி சந்தை செல்வது, வீட்டு பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு போன்ற வேலைகளை) மட்டும் செய்ய சொல்லி கட்டாயமாக்கலாம். இதுபோன்ற வாழ்க்கைக்கு தேவையான அத்தியாய வசதி வேலைகளுக்கு எதுக்கு கல்வி மற்றும் பட்டங்கள். அவைகளையும் தடை செய்துவிடலாம். முட்டா மூதேவிகள் ஆட்சியில் இருப்பதாலும், ஒழுங்கா படிக்காம காசு கொடுத்தும், இடஒதுக்கீடு முறையிலும், பரிந்துரையின் பேரிலும் வேலைக்கு சேர்ந்த அரசு அலுவலர்கள் இருப்பதாலும் இப்படி பட்ட சட்டங்கள் வருவதில் ஆச்சரியம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
21-மார்-201712:40:22 IST Report Abuse
Syed Syed அவசியமற்ற சட்டம். பாலியல்களை தூண்டும் சட்டம். கொடுமை. அறிவில்லாத சட்டம்.. பாதுகாப்பு கொடுக்கணும். அல்லது பாலியலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை குடுக்கனுமே. பா
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201712:27:02 IST Report Abuse
Pasupathi Subbian பாலியல் தொந்தரவு கொடுப்பவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கவில்லையே. ஏற்கனவே பிரசவத்திருக்கு முன்னும் பின்னும் சம்பளத்துடன் விடுமுறை, மற்ற விடுமுறை, என்று அனுபவிக்கும் பெண்டிர்க்கு, இனி பாலியல் தொந்தரவு என்று 90 நாட்களுக்கு மேலும் சம்பளத்துடன் விடுமுறை விட்டால் , அதன் பலனே இல்லாமல் போய்விடும். பாலியல் குற்றசாட்டு எழுந்தால் உடனே 15 நாட்களுக்குள் அதை விசாரித்து, நடவடிக்கை எடுத்து, குற்றவாளிக்கு தண்டனையோ, அல்லது தற்காலிக விடுப்போ கொடுத்துவிட்டு, பாதிக்க பட்ட அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டியது அவசியம், அரசாங்க பணத்தை இப்படி வீணடிக்க கூடாது. இதை சம்பந்தப்பட்ட பணியாளர் நலத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் உணரவேண்டியது அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201712:25:34 IST Report Abuse
Venki அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனம்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-மார்-201711:56:41 IST Report Abuse
S.Baliah Seer இந்திய மக்கள் தொகையில் பெண்கள் கிட்டத்தட்ட சரிபாதி என்கிறார்கள். பெண்களுக்கென்று பள்ளி கல்லூரிகளை தனியாக இயக்கலாம். அவற்றில் பணிபுரிகிறவர்களையும் பெண்களாக நியமிக்கலாம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் 5 -ஆம் வகுப்பு சிறுமியோடு குடும்பம் நடத்துவதாக வயதான தலைமை ஆசிரியரின் மனைவியே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காலமிது. கோ எஜுகேஷன் நம் நாட்டுக்கு ஒத்துவராது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தனியாக அலுவலகங்கள் அமைத்து அவர்களின் சூப்பர்வைசர், மேல் அதிகாரி போன்றோர் பெண்களாக இருக்கும்படி அரசாணை போடலாம். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் இதனால் 70 சதவிகிதம் குறையும்.
Rate this:
Share this comment
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201717:56:09 IST Report Abuse
Balajiஇதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது...... ஆண் பெண்களை சார்ந்தும் பெண் ஆண்களை சார்ந்தும் நமது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது....... நீங்கள் சொல்வது போல செய்தால் பாலியல் வன்முறை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது...... இப்போது பெண்கள் தைரியமாக வெளியில் வந்து வேலை செய்கிறார்கள்...... அதனால் ஆண் மகனுக்கு கண்ணியமாக நடக்க வேண்டும் என்ற கட்டாயமிருக்கிறது....... அது வளர்ந்தால் தான் பெண்கள் சார்ந்து நடக்கும் குற்றங்கள் குறையும்...... மேலும் பெண்களும் சற்று நாகரீகத்துடனும் எவரையும் ஆணவத்தில் (பொதுவாக அனைத்து பெண்களையும் சொல்லவில்லை.... இதுபோன்று நடப்பதால் வன்முறைகள் நடக்கிறது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது என்பதால்) எடுத்தெறிந்து பேசாமல் கண்ணியமாக ஆண்களிடம் பழகவேண்டும்...........
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
21-மார்-201711:30:54 IST Report Abuse
Prabaharan ட்ரான்ஸ்பர் செய்யலாம். எதற்கு லீவு, சம்பளம்
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
21-மார்-201712:13:46 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>அரசு கஜானாலே காசுகொட்டிக்கிடக்குது அதனால் தான் , சீண்டும் ஆசாமிகளை கண்டிக்கலாம் அல்லாது வேறு இடத்துக்கே மாற்றலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்