sri lanka navy arrest 10 rameswaram fishermen | ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படை, tamil fishermen, srilanka navy

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். டில்லியில் இன்று தமிழக மீனவர்கள், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயல் மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 10பேர் கைது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
21-மார்-201716:39:49 IST Report Abuse
vnatarajan இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் பிடிப்பதும் பிறகு விடுவிப்பதும் இதை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டில் சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக போர்க்கொடி தூக்குவதும் ஒரு விளையாட்டாகவே போய்விட்டது. இதுபற்றி மக்களுக்கு உள்ள சில சந்தேகங்களை தினமலர் மத்திய அரசிடம் ஒரு வெள்ளை அறிக்கையை விட சொல்லவேண்டும் 1 .. கச்சத்தீவை இலங்கையிடம் தாரைவார்த்து கொடுத்த ஆவணங்கள் என்ன? 2 அதிலுள்ள முக்கியமான ஷரத்துக்கள் என்ன? 3 . உரிமை இல்லாவிட்டால் எல்லையை தாண்டும்போது நமது கடல் ராணுவம் அவர்களை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? 4 . 1974 ல் போடப்பட்ட எக்ரிமெண்டை கான்செல் செய்துவிட்டு புதிய எக்ரிமென்ட் போடமுடியுமா. 5 இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது 1947 ல் யார்வசம் கச்ச தீவு இருந்தது 6 . தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல் மத்திய அரசு இலங்கையினிடம் தீவை கொடுத்தது சட்டப்படி செல்லுமா.?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201712:40:23 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லை தாண்டி போகாதே என்று எத்தனை தடவை சொன்னாலும் ...இந்த மீனவர்கள் கேட்பதே இல்லை... அப்பறம் குத்துது கொடையது என்றால் என்ன செய்வது...
Rate this:
Share this comment
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201716:36:43 IST Report Abuse
A. Sivakumar.நம்ம நாட்டு எல்லைக்குள் இருக்கும்போது நல்லா இருக்கிற படகு, அவங்க எல்லைக்குள்ளே போனதும்தான் பழுதாகி நிக்குதாம். இப்படிப் பண்ணிப் பண்ணியே அவனை சூடேத்துனால், சுடாமல் என்ன செய்வான்?...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-மார்-201711:29:19 IST Report Abuse
S.Baliah Seer தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது என்ற செய்தி தொடர்கதையாகி உள்ளது. இதிலிருந்து நம் மீனவர்கள் அடுத்த நாட்டு எல்லையில் மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை என்ற உண்மை புரிகிறது. கேட்டால் அங்குதான் அதிக மீன்கள் கிடைக்கிறது என்கிறார்கள் நம் மீனவர்கள். ஆக தவறுதலாக நம் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு செல்லவில்லை என்பதும் , நிறைய மீனை பிடிக்க வேண்டும் என்ற உந்தலிலும்தான் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்த விஷயத்தில் நாம் நம் மத்திய அரசை நொந்துகொள்வதில் அர்த்தம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
21-மார்-201710:48:50 IST Report Abuse
Stalin அங்கே செல்வது வீண் நமக்கான ஆட்சி அதிகாரத்தை நாம் தமிழருக்கு அளிக்க அவர்களின் ஆட்சி அறிக்கைகையை படித்து தெளிந்தபின் ஆதரவு தெரிவியுங்கள் ....சே
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
21-மார்-201710:23:07 IST Report Abuse
Ganesh Tarun அடுத்த நாட்டின் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் மீன் பிடிக்க செல்வது குற்றம் தான்.
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
21-மார்-201711:51:39 IST Report Abuse
Jaya Prakashஅவர்கள் எல்லை ஏறக்குறைய 22 கிலோமீட்டர்தான் (எல்லா நாட்டுக்கும் அது பொருந்தும்) ...... அதற்குள் போனால் மட்டுமே அவர்கள் கைது செய்ய முடியும்..... ஆனால் அவர்கள் இந்திய எல்லையை விட்டு 100 கிலோமீட்டர் தாண்டுனாலும் கைது செஇகிறார்கள்.... அது இன்டர்நேஷனல் கடல் (எல்லோர்க்கும் சொந்தம்).... அவர்கள் கடத்தலோ.... ஆயுத கடத்தலோ செய்யாதவரை.... வெறும் மீன் பிடிப்போரை கைது செய்ய அதிகாரம் இல்லை.... அரசியல் கருத்து அல்ல..... இந்திய அரசின் மெத்தனம்தான் இதற்கு காரணம்.......
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
21-மார்-201710:17:40 IST Report Abuse
தாமரை இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடந்தால் நமது மீனவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். இவர்கள் பெரும்பாலும் இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் சென்று மீன் பிடிப்பதாலேயே இப்பிரச்சினை வருகிறது. பேச்சுவார்த்தை நடக்கக்கூடாது என்றே மீனவர்கள் அவர்களது எல்லையில் மீன்பிடித்து கைதாகியுள்ளனர் என்று தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
21-மார்-201710:14:04 IST Report Abuse
Jaya Prakash இது ஒரு சென்சிடிவ் மேட்டர்.... இலங்கை மீனவர்களை சிறை பிடிப்பது ... அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக்குது... இதற்கு காரணம் மீனவர்கள் அல்ல.... ஆனால் முந்தய காலத்தில் மீன் பிடிக்க செல்லும் போர்வையில் அவர்கள் செய்த காரியமே.... இன்று இலங்கை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை... பால் எது கள் எது என்று கண்டுகொள்ளமுடியவில்லை.... சட்டப்படி பார்த்தால் அவர்களின் நாட்டின் கடல் பரப்பு உரிமை 22 கிலோ மீட்டர்தான்.. (12 nautical mile என்று கடல் பாஷையில் சொல்வார்கள்) ..... ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கிட்டத்தட்ட 240 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.... அதனால் சட்டப்படி இந்திய மீனவர் (நான் தமிழ் மீனவர் என்று சொல்ல விரும்பவில்லை) மீனவர் 200 கிலோ மீட்டர் வரை தாராளமா போய் மீன் பிடிக்கலாம்.... ஏனா அது இன்டர்நேஷனல் கடல் பரப்பு .... அதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது..... ஆனால் இலங்கை அவர்களை அங்கேதான் பிடிக்குது.... நேற்று நடந்த தவறுக்கு இன்று மீனவர்கள் அனுபவிகிறார்கள்.... சட்டப்படி அவர்களுக்கு அந்த 200 கிலோமீட்டர் பரப்பில் மீன் பிடிக்க உரிமை உண்டு.... அதே நேரத்தில் இலங்கை கரை ஒர காவல்படைக்கும் அவர்களை சோதனை செய்ய உரிமை உண்டு.... ஆனால் ஆய்தமோ அல்லது எந்த வித சந்தேகமான விஷயம் தெரியவில்லை என்றால் .... அவர்களுக்கு கைது செய்யும் உரிமை இல்லை.... இந்திய அரசாங்கம் மெத்தனமாக இருக்கிறனால் இந்த பிரச்சனை..... இதற்கு தீர்வு உண்டு.... விமானம் ஏறும்போது நம்மளை செக் பண்றங்களே..... அதே மாதிரி ஒவொரு படகு கிளம்பும்போது காவல்துறை அதை செக் பண்ண வேண்டும்.... மேட்டர் ஓவர்... இது ஒரு பெரிய காரியம் அல்ல..... ஆனால் நடைபடுத்துவது யாரு?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
21-மார்-201709:57:04 IST Report Abuse
anand நானும் போட் வாங்கி மீன் பிடி தொழில் செய்யலாம் என நினைக்கிறன் ஆனால் உள்நாட்டு மக்கள் செய்ய கூடாதாம்...ஏன் என எனக்கு புரியவில்லை..
Rate this:
Share this comment
Cancel
Anvardeen - chennai,இந்தியா
21-மார்-201708:33:26 IST Report Abuse
Anvardeen மீனவர்களே நீங்கள் அதிர்ச்சி அடைவதெல்லாம் இருக்கட்டும் முதலில் நீங்கள் ஏன் அந்நிய நாட்டுக்குள் சென்று மீன் பிடிக்கிறீர்கள் மற்ற நாட்டு மீனவர்கள் உங்கள் படுத்தியில் வந்து பிடித்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா உங்களுக்கு எப்படி வாழ்வாதாரமோ அப்படி தானே அந்நிய நாட்டு மீனவர்களுக்கும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை