பால சுவரில் வளரும் செடிகள் நெடுஞ்சாலை துறை மெத்தனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பால சுவரில் வளரும் செடிகள் நெடுஞ்சாலை துறை மெத்தனம்

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பால சுவரில் வளரும் செடிகள் நெடுஞ்சாலை துறை மெத்தனம்

ஊத்துக்கோட்டை: போக்குவரத்து அதிகமுள்ள சாலையின் பால சுவரில் வளர்ந்து வரும் செடிகளால், அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இனியும் மெத்தனமாக இருக்காமல், விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து, ஊத்துக்கோட்டை வரை, 26 கி.மீ., தொலைவு உள்ளது. இந்த மாநில நெடுஞ்சாலையில், தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வாகனங்கள் செல்கின்றன.
திருவள்ளூரில் இருந்து, சத்தியவேடு, சூளூர்பேட்டை, வரதயபாளையம், தடா, ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், ஒதப்பை கிராமத்தை ஒட்டி, சாய்கங்கை கால்வாய் மேல், பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் செடிகள் வளர்ந்து வருகின்றன.
மேலும் அதிகளவில் செடிகள் வளர்ந்தால், பாலத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மெத்தனமின்றி உடனடியாக செயல்பட்டு ஒதப்பை கிராமத்தை ஒட்டி, சாய்கங்கை கால்வாய் பால பக்கவாட்டு சுவரில் வளர்ந்து வரும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை