24 அடி அகல சாலை வேண்டும் ஜெயா நகர் வாசிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 அடி அகல சாலை வேண்டும் ஜெயா நகர் வாசிகள் கோரிக்கை

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்: ஜெயா நகர் வாசிகள், 24 அடி சாலை கேட்டு, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்டது ஜெயா நகர். உழவர் சந்தை அருகில் இருந்து, இந்த பகுதிக்கு, 30 ஆண்டுகளாக சாலை வசதி இருந்தது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், இந்த பாதையை மறைத்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
இதனால், இச்சாலையில் வசிக்கும், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் என, பலரும் பாதித்தனர்.
சாலை தடுப்பு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயா நகர் பொதுநல சங்கத்தினர் ஆட்சியர், கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
கடந்த மாதம், வட்டாட்சியர் வந்து, இருசக்கர வாகனம் செல்லும் வகையில் தடுப்புகளை அகற்றினார். எங்களுக்கு, 24 அடி அகலத்தில் சாலையில் தடையை அகற்றி தர வேண்டும், என, பகுதிவாசிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை ஏற்ற ஆட்சியர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை