100 நாள் வேலை கேட்டு மனு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை கேட்டு மனு

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்: காஞ்சிப்பாடி ஊராட்சியில், 100 நாள் வேலை கேட்டு, தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த, 100 நாள் திட்ட பணியாளர்கள், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், எங்கள் கிராமத்தில், ஆறு மாதமாக ஒரு வேலைக்கு மட்டுமே, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், அனைவருக்கும் வேலை வழங்க, ஊராட்சி நிர்வாகத்தில் இயலவில்லை. இதனால், வேலையில்லாமல், நாங்கள் சிரமப்படுகிறோம்.
ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளில் வேலை செய்ய, ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதி கேட்டும், அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், தனித் தனி பணிகளுக்கு, நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை