வடாரண்யேஸ்வரர் கோவிலில் 31ல் பங்குனி பிரம்மோற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடாரண்யேஸ்வரர் கோவிலில் 31ல் பங்குனி பிரம்மோற்சவம்

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 31ம் தேதி, பங்குனி மாத பிரம்மோற்சவ விழா துவங்கி, அடுத்த மாதம், 12ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது.
இக்கோவிலின் நடப்பாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, வரும், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, வரும், 29ம் தேதி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 30ம் தேதி இரவு, மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது.
அடுத்த மாதம், 12ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா, அடுத்த மாதம், 6ம் தேதியும், 7ம் தேதி திருக்கல்யாணம், நடைபெறுகிறது.
மேலும், தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணைஆணையர் சிவாஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை