கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை| Dinamalar

கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
கோவையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் குறித்து தகவல் தர மறுப்பதாக அவரது உறவினர்கள் காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016ம் வருடம் கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில், நேற்று(மார்ச் 20) இரவு கேகே நகரில் சையது அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் துப்பாக்கி முனையில் அழைத்து சென்றனர். இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது. இதனையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் கமிஷனர் கூறுகையில், விசாரணைக்காக போலீசார் அவர்களை அழைத்து சென்றுள்ளனர். விரைவில் இதுபற்றி முடிவு தெரியவரும் எனக்கூறினார். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ள பகுதியில் கலெக்டர் அலுவலகமும் அமைந்துள்ளதால், போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்பட்டன.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.