Ban aimed at electronics in cabins of some US-bound flights | அமெரிக்க விமானங்களில் லேப்டாப்களுக்கு தடை| Dinamalar

அமெரிக்க விமானங்களில் லேப்டாப்களுக்கு தடை

Added : மார் 21, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமெரிக்க விமானங்கள், லேப்டாப்களுக்கு தடை, Ban   electronics,  cabins, US-bound flights

வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து 8 நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் லேப்டாப், ஐபாட் மற்றும் மின்னணு சாதனங்கள் எடுத்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.


10 விமான நிலையங்கள்:

தடை தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவிலிருந்து 10 சர்வதேச விமான நிலையங்களுக்கு தடையில்லாமல் செல்லும் விமானங்களில் லேப்டாப், ஐபாட், கேமராக்கள் மற்றும் சில மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் கெய்ரோ, ஜோர்டானின் அம்மான், குவைத்தின் குவாத் சிட்டி, மொராக்கோவின் கசபாலான்கா, கத்தாரின் தோகா, சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா, துருக்கியின் இஸ்தான்புல், ஐக்கிய அரசு எமிரேட்சின் அபுதாபி மற்றும் துபாய் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்களில் தடை தொடரும். இந்த தடைக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மறுப்பு:

மற்றொரு அதிகாரி கூறுகையில், இந்த தடை 9 விமான நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். தடை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த தடை குறித்து அமெரிக்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ராயல் ஜோர்டானியன் விமான நிறுவனம் வெளியிட்ட செய்தி: மொபைல் போன், மருத்துவ சாதனங்களுக்கு இந்த தடையிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நியூயார்க், சிக்காகோ, டெட்ராய்ட் மற்றும் மான்ட்ரியல் நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் இந்த தடை நீடிக்கும் . இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
21-மார்-201718:59:46 IST Report Abuse
மஸ்தான் கனி அமெரிக்காவிற்கு அடிமையாக இருந்த நாடுகள் இனி தங்களது நாட்டின் நலனைப் பற்றி சிந்திக்க துவங்குவார்கள். ஆயுதங்கள் வாங்குவதை இனியாவது இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
21-மார்-201716:30:20 IST Report Abuse
தமிழன் காரணம் என்னவெனில் லித்தியம் பேட்டரிகளை எளிதாக வெடிக்க வைக்க முடியும். இந்த நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் இந்த விமான நிலையங்களின் வழியாகப் பயணம் செய்ய முடியாது என நினைக்கிறேன். ஆக, அமெரிக்க சேவை அளிக்கும் இந்த நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201715:52:30 IST Report Abuse
மலரின் மகள் இது ஒரு சாதாரண வழக்கமான நடவடிக்கை ஆக தெரிகிறது. அமெரிக்காவில் குடிமை சோதனை செய்வதற்கு அங்கு நீண்ட நேரங்கள் காத்திருக்க வேண்டும். உலகின் சில க்ருய்ப்பிட்ட விமான நிலையங்களில் அமெரிக்காவின் அதிகாரிகள் அங்கு அலுவலகம் அமைத்து அமெரிக்காவில் செய்கின்ற அனைத்து சோதனைகளையும் அங்கேயே செய்து விடுகிறார்கள். ஜென்டிலாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் சென்று நீண்ட நேரம் அவர்கள் அநாகரிகமாக நடத்துவதை பொறுமையாக சகித்து கொள்வதை விட, அபுதாபி போன்ற விமான நிலையங்களில் கவுரவமாக சோதனைகள் அனைத்தையும் செய்து முடித்து விட்டு அமெரிக்காவில் இறங்கும் போது உள்நாட்டு விமானத்தில் உள்ளூர் வாசிகள் செல்வது போல சாதாரணமாக செல்ல வகை செய்யப் பட்டு அது பறிச்சாத்தியமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சேவையை பல நாட்டு விமான நிலையங்களுக்கும் விரிவு படுத்திக்க கொண்டிருக்கிறார்கள். அதில் திரட்டப் பட்ட தகவல்கள் அடிப்படையில் அவர்கள் அவ்வப்போது சில பல மாற்றங்களை செய்து பின்னாளில் அதை நிரந்தர ஏற்பாடாக செய்வது வழக்கம். ரியாத்தில் ஜித்தாவில் மேற்படி சேவைகள் இன்னும் துவங்கப் படவில்லை, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு ஏற்கப்பட்ட நிலையில் தான் இருக்கிறது என்று அறிகிறேன். இது அவர்களின் நடைமுறையின் ஒரு முறை தான்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201715:43:01 IST Report Abuse
மலரின் மகள் அரபு தேசங்கள், முஸ்லீம் தேசங்கள் தான் அவை அனைத்தும். அதிபதியின் தேர்தல் அறிவிப்பு நடை முறை படுத்தப் படுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
SRH - Mumbai ,இந்தியா
21-மார்-201715:13:09 IST Report Abuse
SRH எல்லாமே பச்சைகள் நாடு,,அத கவனிக்கவும்,, அவர்கள் பாதுகாப்பிற்கு 100 கண்டிஷன் போடுவார்கள்,, இஷ்டப்பட்டா போ .. இல்லேன்னா சும்மா இருங்கடா .. வந்துட்டானுவ அமெரிக்காவை திட்ட ? அவன் எவ்வளவு பாதிக்கப்பட்டான் இராட்டை கோபுர தாக்குதலில்.. அப்போ நீங்க எங்கடா போனீங்க ,, வந்துட்டானுவ
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201714:11:04 IST Report Abuse
K.Sugavanam onboard computers ????????????
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
21-மார்-201713:46:06 IST Report Abuse
chails ahamad பொதுவாக வளைகுடா நாடுகளில் குறிப்பாக கத்தார் மிகவும் பாதுகாப்பான , அமைதியான நாடாகும், இங்கு வசிக்கும் குடிமக்களும் , பணியின் நிமித்தமாக வசிப்பவர்களும் எவ்வித நெருக்கடிகளும் இன்றி , மன நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களாகும் , கத்தார் வரும் அமெரிக்க விமானங்களில் தற்போதைய தடை தேவையற்ற ஒன்றே என்பதை அனைவருமே அறிவார்கள் என்பது உண்மையாகும், பொதுவாக வல்லரசு நாடுகளில் அதிலும் தற்போதைய அமெரிக்கா நாட்டிற்கு தனது ஆயுத பிழைப்புகள் நடந்திடவும், பிற நாட்டில் தலையிடவும் காரணங்கள் தேடுவதற்காகவே தற்போதைய தடை நடவடிக்கைகள் என தோன்றுகின்றது. சாதாரணமாக உள்ள முந்தைய விமான பாதுகாப்பு நடவடிக்கைகளே போதுமானது என்ற நிலையில், விமான பயணிகளிடம் பீதியை கிளப்பவே தேவையற்ற நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்வதாக கருத வேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
21-மார்-201713:40:20 IST Report Abuse
Karuppu Samy USA காரனுக்கு டர்ர்ர்ர் ஆரம்பிச்சுடுச்சு...labtop batteryயை வச்சு வெடிக்க வைக்க / தீப்பற்ற வைக்க முடியும் என்பதே இதன் உள்நோக்கம்.
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-மார்-201717:18:17 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்Karuppu Samy - mrt,சிங்கப்பூர் :- குருமுட்டை ....விவசாயிகளின் போராட்டம் பற்றிய எனது பதிவுக்கு நீ பதில் ( மிரட்டல் தொனியில் ) கொடுத்திருந்தாயே .. அதற்கு பதில் தந்திருக்கிறேன்.. அந்த பக்கத்தில் படித்து பார்.....
Rate this:
Share this comment
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
21-மார்-201719:02:53 IST Report Abuse
Karuppu Samyஎன்னய்யா நீ... இங்க வந்து வாந்தி எடுக்கிறே? சாதியை பின்னுக்கு போடும் நீயெல்லாம் பழைய நூற்றாண்டு ஆளுக-யா....
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-மார்-201722:10:27 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்உடனே ஜாதியை ஏன் இழுக்கிறாய். நீ சொல்கிறாயே விவசாயம் விவசாயம் என்று ..அதை குல தொழிலாக கொண்டவர்கள் நாங்கள் .. நியாயமும் உழைப்பும் கண்ணியமும் தான் எண்களின் அடையாளம். வந்து எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு வாரம் இருந்து பயிற்சி எடுத்துக்கொண்டு போ ..கண்ணியம் பண்பாடு வீரம் உழைப்பு எல்லாவற்றிற்கும் பெயர் பெட்ரா கொங்கு மண் எங்களுடையது.....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201713:03:14 IST Report Abuse
Nallavan Nallavan கண்டிப்பாக விமானத்தின் தகவல் தொடர்பு பாதிக்கப்படும் என்பதற்காக அல்ல .... சுமார் ஐந்து வருடங்களாக அந்தப் பிரச்னை இல்லை .... டெஸ்டினேஷன் நாடுகளை பார்த்தால் உண்மைப் பின்னணி விளங்குகிறது ....
Rate this:
Share this comment
Cancel
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
21-மார்-201712:51:42 IST Report Abuse
V .வெங்கடேஷ் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... எதற்காக அமெரிக்கா இப்படி மிரள்கிறது என்று தெரியவில்லையே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை