ஊராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சோழவரம்: கிராம ஊராட்சிகளில், பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று, ஊராட்சிகளில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவரம் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், 20- ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
'மேலும், சீருடை, கையுறை, மழை கோர்ட், சோப்பு உள்ளிட்ட பணிக்கருவிகள் வழங்க வேண்டும்; பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்; அடையாள அட்டை வழங்க வேண்டும்; நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அரசு ஆணைப்படி 300- ரூபாய் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்