மார்கண்டேஸ்வரர் கோவிலில் சமய குரவர்கள் சிலை பிரதிஷ்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்கண்டேஸ்வரர் கோவிலில் சமய குரவர்கள் சிலை பிரதிஷ்டை

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை: மார்கண்டேஸ்வரர் கோவிலில், சமய குரவர்களின் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது.
ஊத்துக்கோட்டை வட்டம், மாம்பாக்கம் கிராமத்தில் உள்ளது மங்களாம்பிகை உடனாய மார்கண்டேஸ்வரர் கோவில். சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைத்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
பிரதோஷ விழா, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோவிலில், சமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியவர்களின் சிலை பிரதிஷ்டை விழா, நேற்று, காலை, 7:00 மணிக்கு நடந்தது. இதையொட்டி, வேள்வி பூஜைகள் மற்றும் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை