ஏரியை சீர்படுத்த அனுமதி தாருங்கள் ஆட்சியரிடம் மகளிர் குழுவினர் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை சீர்படுத்த அனுமதி தாருங்கள் ஆட்சியரிடம் மகளிர் குழுவினர் மனு

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஏரியை சீர்படுத்த அனுமதி தாருங்கள் ஆட்சியரிடம் மகளிர் குழுவினர் மனு

திருவள்ளூர்: திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை, மகளிர் குழுவினர் ஏற்று நடத்த அனுமதி வேண்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈஸா பெரிய ஏரி, 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 5,000 குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மழை காலத்திலும், ஏரி நீர், வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், குடியிருப்புவாசிகள் பரிதவித்து வருகின்றனர்.
இதுபோன்ற சமயத்தில், குடியிருப்புவாசிகள் வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்களும் சேதமடைந்து விடுகின்றன.
இதையடுத்து, இந்த ஏரியினை சீர்படுத்த மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள், முடிவு செய்து உள்ளனர். ஏரியினை மனித சக்தி மற்றும் ஜே.சி.பி., போன்றவற்றுடன் தூர்வாரி, ஆழப்படுத்த முடிவு செய்து உள்ளோம்.
இப்பணியினை, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரியினை சீர்படுத்த, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், என, அப்பகுதி மகளிர் குழுவினர் நேற்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை