'பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் தெரிவியுங்கள்'| Dinamalar

'பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் தெரிவியுங்கள்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
'பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் தெரிவியுங்கள்'

பொன்னேரி: ''பாலியல் தொந்தரவுகள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் அவசர தொலைபேசிகள் மூலம் புகார் தெரிவியுங்கள்'' என, பள்ளி மாணவியர்களிடம், பெண் ஆய்வாளர் அறிவுரை வழங்கினார்.
மீஞ்சூர் அருகே, 14 வயது சிறுமியை, வலுகட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டதில், சிறுமி உடல் நலம் பாதித்து, மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழிப்புணர்வு
இது போன்று பள்ளிக்கு செல்லும் மாணவியர் மற்றும் பெண் குழந்தைகள் பல்வேறு வகைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில், பள்ளி மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று, ஏலியம்பேடு, சின்னகாவணம், காட்டாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரிடம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி பேசியதாவது:
பள்ளி வளாகத்திலோ, வெளியிடங்களிலோ உங்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால், தைரியமாக எங்களிடம் தெரிவியுங்கள்.

நடவடிக்கை
இதற்காக நீங்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டாம். அலைபேசி எண். 9498197798 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் போதும். பாலியல் தொந்தரவு தருபவர்கள் மீது கடுமையான சட்டமான போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரேனும் உங்களிடம் வம்பு செய்தால், தைரியமாக திருப்பி தாக்குங்கள். தெரிந்த, தெரியாத நபர்கள் வழக்கத்திற்கு மாறாக பாலியல் செய்கைகளுடன் பழகினால், அவர்களிடம் இருந்து தள்ளியிருங்கள்.
அதிக தொந்தரவு இருந்தால், பெற்றோரிடம் தெரிவியுங்கள். உங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம். தைரியமாக செயல்படுங்கள். நன்கு படித்து முன்னேறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெளியிடங்களில் என்ன மாதிரியான பாலியல் தொந்தரவு இருக்கும். அதில் இருந்து எவ்வாறு தங்களை காப்பாற்றி கொள்வது என்பது குறித்தும், பள்ளி மாணவியரின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.