விவசாயிகளுக்கு 'பவர் டிரில்லர்' மானிய விலையில் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு 'பவர் டிரில்லர்' மானிய விலையில் வினியோகம்

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவசாயிகளுக்கு 'பவர் டிரில்லர்' மானிய விலையில் வினியோகம்

திருத்தணி: விவசாயிகளுக்கு 'பவர் டிரில்லர்' இயந்திரம், 50 சதவீதம் மானிய விலையில், திருத்தணி வேளாண் துறையினர் வழங்கி வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியத்தில், நெல், வேர்க்கடலை மற்றும் காய்கறி போன்ற பல்வேறு வகையான பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில், பவர் டிரில்லர் மற்றும் ரோட்டோவிட்டர் (சுழல் கலப்பை) போன்ற இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று, திருத்தணி வேளாண் அலுவலகத்தில், வி.கே.ஆர்.புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசுராஜூ என்பவருக்கு, 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பவர் டிரில்லர் இயந்திரம் வழங்கப்பட்டது.
இந்த இயந்திரத்தை, வேளாண் உதவி இயக்குனர் பிரசாத், விவசாயிக்கு வழங்கி பேசியதாவது:
இந்த பவர் டிரில்லர் வாங்கிய, 1.30 லட்சம் ரூபாய் விலையில், 65 ஆயிரம் ரூபாய் அரசு மானியம், அந்த விவசாயிக்கு தரப்படுகிறது. இந்த 50 சதவீத மானியம் விவசாயின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக சென்றுவிடும்.
இதே போல் பவர் டிரில்லர், ரோட்டோவிட்டர் போன்ற கருவிகள் விவசாயிகள், 50 சதவீதம் மானியம் பெறுவதற்கு, நிலத்தின் சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போட் போட்டோ, ரேஷன் கார்டு மற்றும் இயந்திரம் வாங்குவதற்கு வரைவு காசோலை ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பித்து, அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது திருத்தணி உதவி வேளான் இயக்குனர் அலுவலகத்தில் கொடுக்கலாம்.
மேலும் 94445 53719 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். தேவைப்படும் விவசாயிகள் அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை