பணி நிரந்தரம் கேட்டு மீனவர்கள் முற்றுகை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி தனியார் நிறுவன ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, காட்டுபள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் அமைய இடம் கொடுத்த மீனவர்கள், 140 பேருக்கு பணி வழங்கப்பட்டது. இவர்கள், பணி நிரந்தரம் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால், தனியார் நிறுவனம் இதுவரை, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிக்கிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், 140 பேரும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். தனியார் நிறுவனம் மற்றும் ஊழியர்களுடன், 2012ல், மாவட்ட நிர்வாகம், பேச்சு நடத்தியது.
ஆனால், இதுவரை ஊழியர்கள் யாரும் பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே, தனியார் நிறுவனத்திற்கு இடம் அளித்த மீனவர்கள், 140 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கக்கோரி, ஊழியர்கள் குடும்பத்துடன் நேற்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்