செம்மரக்கட்டைகள் பதுக்கியவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரக்கட்டைகள் பதுக்கியவன் கைது

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோழவரம்: சோழவரம் அடுத்த, நாகத்தம்மன் நகரில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கடந்த, 18ம் தேதி இரவு, போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு பூட்டி கிடந்த வீட்டில், சோதனை செய்த போது, மூன்று டன் செம்மரக்கட்டைகளை சோழவரம் போலீசார் பறிமுதல் செய்து, கும்மிடிப்பூண்டி வன துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் முகம்மது ஷபாப் உத்தரவின் பேரில், வனச்சரகர் மாணிக்கவாசகம் தலைமையில் வன துறையினர் செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செங்குன்றம் அடுத்த, மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த, செல்லப்பா மகன் நரேந்திரகுமார், 26, என்பவன் மேற்கண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து செம்மரக்கட்டைகளை பதுக்கியது தெரிந்தது.
அதை தொடர்ந்து, நேற்று வன துறை அதிகாரிகள், நரேந்திரகுமாரை கைது செய்தனர்.
நரேந்திர குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, பதுக்கி வைத்திருந்ததை தெரிவித்துள்ளார். சலீமை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை