சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுஷ்மா, ராமேஸ்வரம் மீனவர்கள், சந்திப்பு

புதுடில்லி: டில்லி சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினார்கள்.

கடந்த மார்ச் 6ம் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்கள், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். இதனையடுத்து மீனவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் பிரிட்ஜோ குடும்பத்தினர் விமானம் மூலம் டில்லி சென்றனர். இன்று(மார்ச்21) மத்திய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்துவதை தடுக்கவும், இலங்கை வசமுள்ள தமிழக படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் சுஷ்மா-மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
21-மார்-201716:12:15 IST Report Abuse
குரங்கு குப்பன் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்அதிமுக MP & MLA எங்கே போனார்கள்
Rate this:
Share this comment
Cancel
அபிமன்யு - chennai,இந்தியா
21-மார்-201715:42:20 IST Report Abuse
அபிமன்யு ஐயா... velimalaya .. தெரிஞ்சுதான் எழுதறீங்களா...மீனவர் பிரச்சனைக்கு மதிய அமைச்சரை பார்க்காம வேற எவரை பார்ப்பாங்க.. சிங்கள ராணுவம் நம் மீனவனை சுட்டத்துக்கு பதிலடி கொடுக்க தமிழக ராணுவம் என்று எதுவும் கிடையாது..மதிய பிஜேபி அரசுதான் தூக்கத்திலிருந்து எழ வேண்டும்... அவங்கள எழுப்ப தான் மீனவர்கள் அங்கே போய் இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - trichy,இந்தியா
21-மார்-201714:57:26 IST Report Abuse
Rajasekar மத்திய அரசு பாராமுகம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது என்று மத்திய அமைச்சருக்கு ஞாபகப்படுத்துங்கள்.
Rate this:
Share this comment
kumar - chennai,இந்தியா
21-மார்-201716:04:25 IST Report Abuse
kumarஉங்களை போன்ற ஆட்களால் தான் தமிழகத்திற்கே தலைகுனிவு, மத்திய அரசு எப்போதும் யாரையும் பிரித்து பார்த்தது இல்லை...முதலில் நாம் இது போன்று பிரித்து பேசுவதை விட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
velimalaya - Chennai,இந்தியா
21-மார்-201713:52:51 IST Report Abuse
velimalaya எல்லாமாய் மத்திய அரசுதான் செயினும். இங்க கழகங்கள் என்ன லெட்டர் போடமட்டும் தான் செய்வார்களா ?.. ஓட்டு மட்டும் கலகங்களுக்கு ?....புரிந்தால் சரி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை