ரூபாய் நோட்டு வாபஸ்: அவகாசம் தராதது ஏன்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

ரூபாய் நோட்டு வாபஸ்: அவகாசம் தராதது ஏன்?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Added : மார் 21, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூபாய் நோட்டு வாபஸ், கால அவகாசம், சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விளக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு:

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த வருடம் 2016 நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கான கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ரூபாய் நோட்டு தடை: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி


ஒத்திவைப்பு:

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டு மாற்ற முடியாதவர்களுக்கு தனி சலுகை வழங்காதது ஏன்? ஏற்கனவே அறிவித்தபடி, மார்ச் 31 ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்? மார்ச் 31 வரையிலான கால அவகாசத்தை குறைத்தது ஏன்? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இங்குள்ளவர்களுக்கு ஏன் வாய்ப்பு தரப்பவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gsik - Chennai,ஐஸ்லாந்து
21-மார்-201718:30:15 IST Report Abuse
gsik சரியான கேள்வி. இதை தான் நாம் கேட்டோம் யாரும் பதில் சொல்லவில்லை இதற்க்கு. நாம் அரசாங்கத்தை தேர்ந்து எடுக்கிறோம் நம்மை ஆள்வதற்க்காக. ஆனால் அவர்கள் நமது நியாயமான கோரிக்கைகளை கூட கேட்க மறுக்கிறார்கள். RBI கவர்னர் எங்கிருக்கிறார் என்று கூட தெரிய வில்லை. இப்பொழுது கிட்ட தட்ட மூன்று மாதம் ஆகி விட்டது இன்னும் வந்த பணம் எவ்வளவு என்று தெரியவில்லை. டிஜிட்டல் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்னும் நோட்டு எண்ணுவது மனிதத்துவமாக இருக்கிறது. பொது மனிதன் எல்லா வற்றிற்கும் உச்ச நீதி மன்றம் செல்ல முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
gsik - Chennai,ஐஸ்லாந்து
21-மார்-201718:14:50 IST Report Abuse
gsik கிங் of குட் டைம்ஸ் மல்லையா தான் இவர். இவர் வங்கியில் மக்கள் பணத்தை வாங்கியது ரூபாய் 8191 கோடி. திருப்பி கொடுத்தது ரூபாய் 155 கோடி. இந்த கடன் UPA ஆட்சி காலத்தில் கொடுக்க பட்டது. பி ஜே பி ஆட்சி காலத்தில் இவர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு ஓடினார். இவர் ஓடிய அடுத்த நாளில் இருந்து நமது இன்றய அரசாங்கம் இவரை அங்கிருந்து கொண்டுவருவதற்கு ப்ரம்ம பயத்தனம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருபது வருடத்திற்குள் இவரை கொண்டு வந்து விடுவார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது. இங்கிருந்து ஓடும் போது தனது விமானம், சொகுஸு கார்கள், பங்களாக்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு ஓடினர் என்பது குறிப்பிட தக்கது. இவரது விமானத்தையும் பங்களாக்களையும் ஏலத்தில் விட்டார்கள் யாரும் இந்த அதிர்ஷட மிக்க சொத்தை வாங்க வரவில்லை என்பது குறிப்பிட தக்கது.
Rate this:
Share this comment
21-மார்-201718:28:59 IST Report Abuse
ரங்கன்இருபது வருஷம் ஆனாலும் பிடிபட மாட்டார்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201716:59:58 IST Report Abuse
Endrum Indian கனம் கோர்ட்டார் அவர்களே உங்கள் 4 .01 கோடி கோர்ட்டில் இருக்கும் கேசின் மீது கவனம் செலுத்தவும், இந்த மாதிரி கேசின் மீது கவனம் செலுத்த வேண்டாம். கறுப்புப்பணம் என்னும் போது தான் ஒருவனிடம் 2 .5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்திருக்கும், அதை ஏழைகளை வைத்து வங்கி வரிசையில் நிப்பாட்டிருப்பான். ஆகவே நீங்கள் கவலைப்படவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201716:53:40 IST Report Abuse
A. Sivakumar. இந்தியாவில் அதிக ஊழல் பண்ணியவர்களின் பெயர்களை கூகுளில் தேடினால் கட்சிப் பாகுபாடின்றி கிடைக்குது. சுரேஷ் கல்மாடி, ராசா-கனிமொழி வகையறா, பசி மகன், கேடி பிரதர்ஸ், மாயாவதி, லாலு, மதுக்கோடா, முலாயம், கருணாநிதி, சரத் பவார், பெரியம்மே, எட்டியூரப்பா, ராஜசேகர ரெட்டி, சாரதா சிட்ஃப்ண்ட் மற்றும் ரோஸ் வேல்லி புகழ் மம்தா என்று நீண்டுகொண்டே போகுது. பட்டியல் முடியுமா என்று பார்த்தால், கடைசிப் பாராவாக இன்னும் தொடரும் என்று போட்டிருக்குது. அரசு ஊழியர்கள் அதிகாரிகள் மட்டுமின்றி மக்களாகிய நாமும் நமக்குத் தெரிஞ்ச எல்லா வில்லங்கமும் பண்ணறோம். என்னைக் கேட்டால், அடுத்த இரு ஆண்டுகளில் இன்னொரு முறை கூட, அதி உயர் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் நடவடிக்கையை தாராளமாகச் செய்யலாம். இந்த லட்சணத்தில் நாடு இருப்பதைப் புரிஞ்சுக்காமல் கடுப்பேத்தாதீங்க யுவர் ஆனர்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-மார்-201715:46:50 IST Report Abuse
pattikkaattaan துபாயிலிருந்து எதோ புதுசா அடிச்ச 2000 ரூவா கள்ளநோட்டு கன்டைனர்ல வருதாம் ... ரெண்டுநாளா வலைபோட்டு சென்னையிலும், மும்பையிலும் தேடிட்டிருக்காங்க .. அப்ப 2000 ரூவா நோட்ட செல்லாதுன்னு தடா பன்னிருவங்களா?
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-மார்-201715:42:39 IST Report Abuse
Rajathiraja அரசு கொடுத்து கெடுத்த காலக்கெடு 31.03.2017. நீதிமன்றம் ஒத்திவைப்பு 11 .04 .2017 என்ன கொடுமையடா.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201714:39:00 IST Report Abuse
மலரின் மகள் இதனால் நான் பாதிக்கப் பட்டிருக்கிறேன். சட்டத்தால் அனுமதிக்கப் பட்ட இந்திய ரூபாய்களை எப்போதும் எங்கு சென்றாலும் வைத்திருப்பேன். இந்தியாவிலும், வெளி நாட்டிலும். இந்திய அரசின் குடிமக்களாக இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் வாழ்கிறோம். அதில் ஒரு ஒழுங்குமுறை வாழ்வு எங்களுக்கு உண்டு. திடிரென்று, ஒன்றே செய் நன்றே அதையும் இன்றே செய் என்பது சரி என்று நினைத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து பலருக்கு அநீதி செய்திருக்கிறார்கள். மாற்ற முடியாத பணத்தால் எனக்கு பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. தானமாக தந்திருக்கலாம். அந்த பல ஆயிரங்களை. யாருக்காவது உதவி இருக்கும். ஒருவருக்கும் பிரயோசனமில்லாததாக போய் விட்டது. இழப்புகளை தாராளமாக ஏற்கிறேன். ஆனால் மனதில் ஏமாற்றப் பட்டதாக ஓர் உணர்வு. கருப்பு பணத்தை ஒலிக்கிறேன் என்கிறார்கள். சரி முழு ஆதரவு. என்னுடைய பணத்தை செல்லாததாக்கியது ஏன்? அது உண்மையான உழைப்பில், மனதளவில் கூட ஏமாற்றால், உண்மையாக சம்பாதித்த பணம். அதை ஏன் அளித்தார்கள். அதற்காக சம்பந்தப் பட்ட எந்த அதிகாரியும் வருத்தப் பட்டதாக தெரியவில்லையே? எல்லோரும் மோடியை காய் காட்டுகிறார்கள். ஆனால் அது ஒரு கூட்டு நடவடிக்கை, அதன் தலைவராக மோடி. ஆகையால் அவர்கள் அனைவரும் தான் பொறுப்பு. குறைந்த பட்சம் மான் கி பாத் நிகழ்ச்சியிலாவது, ட்விட்டரிலாவது வருத்தம் தெரிவித்திருக்கலாம். செய்யவில்லை. பணிக்கு சேர்ந்த முதல் பொழுதில் மேலதிகாரிகளால், முதலாளிகளால் எக்ஸ்ப்ளோய்ட் செய்யப் பட்டோர்கள் மிகப் பலர். அதை போலத்தான் இந்த நிகழ்வு. மோடி அரசாங்கத்திற்கு ஆதரவு தருகிறேன். அனால் செய்தது முழுதும் சரி, அது ஒரு ஹீரோத்தனமான முடிவு என்று 56 இன்ச் மார்தட்டிக் கொள்கிறார்கள். தார்மீகமாக கூட தவறு என்பதை உணராதவர்களாக தெரிகிறார்கள். இயற்க்கை பேரழிவிலிருந்து பல்வேறு காரங்களுக்காக நஷ்ட ஈடு தஹருகிறார்கள். நாம் இழந்ததற்கு எங்கே நஷ்ட ஈடு. பழைய பணத்தை கணக்கு காண்பித்திருப்போர், அதை இந்த வருடம் செலுத்த வேண்டிய வரிக்கு செலுத்திக் கொள்ள பயன் படுத்திக்க கொள்ளலாம் என்றாவது சற்று ஆறுதல் தந்தார்களா? இல்லையே. மாற்ற இயலாத எனது பணம் அரசிற்கு சென்றதாக தானே அர்த்தம். அதை நான் செலுத்த வேண்டிய வரியில் கழித்துக் கொண்டால் என்ன? ஒரு சிறிய நிகழ்ச்சியை மனித வள மேம்பாட்டு பயிற்சியில் பொதுவாக சொல்ல்கிறார்கள். அதற்கான நமது எண்ணங்களை கேட்டகிறார்கள். அது: ஒரு கிராமத்து பகுதியில் தினமும் ரயில் செல்லும். இரண்டு தண்டவாளங்கள் ஒன்றுடன் ஒன்று இணைப்பு பெற்றவை. ஒரு க்ருய்ப்பிட்ட ட்ராக்கில் தான் வழக்கமாக ரயில் வந்து செல்லும். சிறார்களுக்கு அது தெரியும். ஒரு நாள் பல சிறார்கள் ரயில்தா வரும் தண்டவல்லத்திற்கிடையே விளையாடி கொண்டிருக்கிறார்கள். மற்றொரு தண்டவாளத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த ட்ராக்கில் என்றும் ரயில் வ்ருவதில்லை. ரயில் வருகிறதாம். கொஞ்ச நேரத்தில் ரயில் மோதி பல குழந்தைகள் இறக்கப் போவது திண்ணம். இந்த சூழலை மனதில் நிறுத்துங்கள். நீங்கள் இப்போது ட்ராக்கை மாற்றும் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். டிராக்கை மாற்றி ரயிலை மாற்றுப் பாதையில் செலுத்தி அந்த ஒரு சிறு பெண் குழந்தையை இழந்து பல சிறுவர்களை காப்பீர்களா அல்லது, ரயில் தன் போக்கில் சென்று பல குழந்தைகள் இறப்பதை அனுமதிப்பீர்களா? அனைவரும் சொல்வது, பல குழந்தைகளை காப்பதற்காக அந்த ஒரு பெண் குழந்தையை தியாகம் செய்து விடுவேன் என்பது தான். இதில் எனக்கு கொஞ்சம் கூட ஏற்பு கிடையாது. யாதொரு பாவமும் அறியாமல் பாதுகாப்பான இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த பெண் குழந்தையை ரயில் ஏற்றி கொள்வதற்கு எந்த விதி, தர்மம் உங்களை அனுமதித்தது. ரயில் வரும் என்று தெரிந்தே அங்கு விளையாடிய பல சிறுவர்கள் காப்பாற்ற படுகிறார்கள். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடையாது. தவறே செய்யாத பிள்ளைக்கு தண்டனை. வெளி நாட்டில் வாழும் நான் இந்திய திரும்பும் பொது தானே எனது பணத்தை நான் மாற்ற முடியும். அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டார்கள். அதே சமயம் சில நாட்கள் அவகாசத்தில் வாங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு வழிமுறைகள் மூலம் கருப்பு பணம் கல்லாய் பணம் வைத்தோர்க்குகள் அதை மாற்றிக் கொண்டு விட்டார்கள்? சுவிஸ் வங்கிகளில் இருக்கும் பணத்தை கொண்டு வரும் செயலாக சிலவற்றை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் அனைவருக்கும் 15 லட்சம் தருவதாக கூறியது என்னாயிற்று? காங்கிரஸ் காலத்திலேயே அதை கொண்டுவர முடியாது என்று அறிந்து தானே பல்வேறு திட்டங்களை தீட்டி, அந்த பணத்தை இந்திய நாட்டிக்கரு முதலீடாக பெற்றுக் கொள்ளும் முறையை கையாண்டு அதை உள்நாட்டிக்கரு கொண்டு வந்தாரகள். அது முடிந்த கதை. ஆக ஏமாற்றுவோருக்கு, உதவியவர்கள், நல்லவர்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது அனைத்து சாஸ்திரம், தர்மம், மனு நீதி, தார்மீகம், நன்னெறி முறிகளில் தவறு தான். அவர்களுக்கு இருக்கும் அளப்பரிய அதிகாரங்கள் மற்றும் சட்டத்தின் படி அது சரியாக தெரிந்தாலும், என்னை பொறுத்தவரை தவறு என்று தான் கொள்வேன். மோடியும், இன்றைய அரசாங்கமும் எனக்கு கடன் பட்டிருப்பதாகவே நான் கார்த்திக் கொண்டிருப்பேன். வேறு ஒன்றும் செய்ய இயலாது. நானென்பது, நாம் அனைவரும் தான். நாம் ஏமாளிகள் அல்ல, இருந்தாலும் நம் பணத்தை கட்டாயமாக இழக்கிறோம். நம்மை யாரும் ஏமாற்ற வில்லை, ஆனால் பணத்தை இளந்தம். இதற்கு என்ன என்று சொல்வது. பணத்தை பறி கொடுத்தோம் என்றா? அல்லது திருடு போயிற்று என்றா? வழிப்பறிக்கு கொடுத்து விட்டோம் என்றா? என் இளம் வயது எனக்கு விடை சொல்வதில்லை. சுகவனம் போன்ற பெரியோர்களுக்கு தெரிந்திருக்கும்.
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201716:47:49 IST Report Abuse
Kasimani BaskaranRBI அனுமதிப்பது ரூ 5000 . அதற்கு மேல் வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்வது சட்டத்துக்கு புறம்பாக... 25,000 வரை எடுத்துச்செல்லலாம் என இருப்பதாக சிலர் புரளியை கிளப்புகிறார்கள்... www.rbi.org.in/s/FAQView.aspx?Id=11 (section 19 ஐ பார்க்கவும்)...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201714:25:54 IST Report Abuse
Kasimani Baskaran பலர் ஏழைகளை வைத்து நோட்டுக்களை கமிஷன் வைத்து மாற்ற ஆரம்பித்தார்கள்... அதை அறிந்த அரசு உடனே நோட்டு மாற்றுவதை நிறுத்தியது...
Rate this:
Share this comment
Cancel
Vadivu - Salem,இந்தியா
21-மார்-201714:07:24 IST Report Abuse
Vadivu மோடி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் . அந்த புனிதரை கேள்வி கேக்கும் தகுதி எவனுக்கும் இல்லை . - இப்படிக்கு சொம்பு தேசநாசன், அக்கினி பினாத்தல் , ஊசிமணி உலக்கை
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201714:29:25 IST Report Abuse
Kasimani Baskaran"ஊசிமணி" - stop this nonsense .. If are hurt by the so called demonetization go bang your head to the rock - It does not mean you can write trash .....................
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
21-மார்-201714:59:49 IST Report Abuse
Shriramஏண்டிம்மா வடிவு என்ன ஏண்டிம்மா விட்டுட்ட?...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
21-மார்-201715:01:28 IST Report Abuse
Shriramவடிவு எங்கேடிம்மா மோஹனா ?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201714:03:22 IST Report Abuse
K.Sugavanam 5 மாநில தேர்தல்..தான் முக்கிய காரணம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை