இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை: பொன்.ராதா| Dinamalar

இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை: பொன்.ராதா

Added : மார் 21, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
படகு, நடவடிக்கை, பொன்.ராதா

புதுடில்லி: ராமேஸ்வரம் மீனவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினர்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இரங்கல் தெரிவித்தார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது. சுடக்கூடாது என்பது ஒப்பந்தம். இதை மீறி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது கவலை தரும் விஷயம். துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான, ரூ.1,500 கோடி திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி, மாநில அரசு சார்பில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட வேண்டும். முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது. இதற்கு கால அவகாசம் வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார். வரும் மே மாதம் பிரதமர் இலங்கை செல்ல உள்ளார். அதற்கு முன்னர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
21-மார்-201716:11:12 IST Report Abuse
அப்பாவி பொய். ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நடக்கும்னு ரெண்டு வருடத்தை ஓட்டினார். இந்த படகை வச்சு எத்தனை வருஷம் ஓட்டுவரோ கடவுளுக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா
21-மார்-201714:50:27 IST Report Abuse
X. Rosario Rajkumar துரித நடவடிக்கைகள் எடுங்கள். படகுகள் நாசமாகிக் கொண்டே போகின்றன.
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
21-மார்-201714:22:13 IST Report Abuse
PRAVEEN அரசியல் வாதிகளின் உறுதிமொழிகளெல்லாம் ஓடும் நீரில் எழுதப்படுகின்றன. தமிழகத்தின் பிரதிநிதி என்று சொல்வதற்கே வெட்கமாயிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை