தேர்வில் காப்பி: உ.பி., மோசடி இது!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்வில் காப்பி: உ.பி., மோசடி இது!

Added : மார் 21, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தேர்வில் காப்பி, உ.பி., மாநிலம், மோசடி, பீஹார் மாநிலம், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு

லக்னோ: பள்ளி ஆண்டு இறுதி தேர்வில் ஒட்டு மொத்த மாணவர்களும் காப்பி அடித்து தேர்வு எழுதுவது, வட மாநிலங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில், உ.பி.,யில் நேற்று இதுபோன்ற ஒரு மோசடி நடந்துள்ளது.


ஆண்டுதோறும் நடக்கும் மோசடிபீஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், 2015ம் ஆண்டு நடந்த 10ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தேர்வு அறையின் சுவர் மீது ஏறி ஏராளமான பெற்றோர்களும், நண்பர்களும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ‛பிட்' களை அளித்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உ.பி., மாநிலம் மதுராவில், 2016ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும், 12ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில், 70 மாணவர்கள் ஒட்டு மொத்த காப்பி அடித்ததற்காவும், தேர்வு அறைக்கு வெளியே இருந்தவர்களின் உதவியை கேட்டு பெற்றதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டது.

உ.பி., மாநிலம் பாலியா மாவட்டத்தில், நேற்று 10ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வின் போது ஒரு தேர்வு அறையில், ஒட்டு மொத்த மாணவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி தேர்வு எழுதியதும், சிலர் தேர்வு அறைக்கு வெளியே சென்று, பாட புத்தகங்களை பார்த்து காப்பி அடித்து எழுதியது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. இதுதவிர கேள்வித்தாளில் இருந்த கேள்விகளுக்கான விடைகள் ஒரு எழுதப்பட்டு அதன் கார்பன் காப்பிகளும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அவற்றை பார்த்து, மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளது. இதே போன்ற மோசடி மதுரா நகரில் உள்ள ராதா கோபால் மேல் நிலைப்பள்ளியிலும் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Suresh - Charlotte,இந்தியா
21-மார்-201722:10:06 IST Report Abuse
C Suresh இதன் மூலம் மறுத்தவர் ஆனவர்கள் . அவர்களுக்கு உதவிய கூட்டத்துக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201720:42:23 IST Report Abuse
balakrishnan இப்படித்தான் நீட் தேர்வும் நடக்கும், இளிச்சவாய் தமிழன் தான், இப்படி தேர்வு எழுதி தான் நாட்டின் உயர் பதவிகளை பெறுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
21-மார்-201719:42:03 IST Report Abuse
kundalakesi இதை எப்படி கிள்ளி ஏறிய முடியும். மத்திய அரசு ஒதுக்கீடு , பின் இம்மாதிரி பதுக்கீடு, காப்பியடியீடு என்று அனுமதித்தி கொண்டு போனால் ஒருநாள் சதக்கீடு வரும். .
Rate this:
Share this comment
Cancel
அமுதவாணன் - chennai,இந்தியா
21-மார்-201716:42:02 IST Report Abuse
அமுதவாணன் இப்படிதான் உபி, மபி, பீகார், போன்ற வடநாட்டவர்கள் IAS , IPS ஆகுகிறார்கள். இதுதான் திராவிட அரசுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள வேறுபாடு. அனைத்து மத்திய தேர்வு நடித்து உள்ளது, நீட் தேர்வும் இப்படிதான் நடக்கும். கேட்டால் நமக்கு திறமை இல்லை என்று ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்புகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201714:50:15 IST Report Abuse
A. Sivakumar. சென்ற மாதம் தென்னக ரயில்வேயில் (தமிழகம் மற்றும் கேரளா உள்ளடக்கியது) ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு எழுதப்படிக்கவே தெரியாத பீகாரிகள் 276 காலியிடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றியதும் இப்படித்தான் நடந்திருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201714:49:11 IST Report Abuse
A. Sivakumar. தபால்துறை தேர்வில் ஹரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 25க்கு 24 மதிப்பெண்கள் இப்படித்தான் வாங்கியிருப்பாங்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை