மீனவர் கொலையை விசாரிக்க யாருக்கு அதிகாரம்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி| Dinamalar

மீனவர் கொலையை விசாரிக்க யாருக்கு அதிகாரம்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மீனவர் கொலையை விசாரிக்க யாருக்கு அதிகாரம்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
Share this video :
மீனவர் பிரச்னை மத்திய அரசுக்கு நோட்டீஸ்: ஐகோர்ட்

மதுரை: மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக விசாரிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜூ என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மீனவர் பிரிட்ஜோவை கொன்ற இலங்கை கடற்படை வீரர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அவரை இந்தியா கொண்டு வந்து தண்டிக்க வேண்டும். இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்தாலும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன், இந்திய கடல் எல்லையில், இத்தாலி கடற்படை வீரர்களால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு அந்நாடு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், பிரிட்ஜோவிற்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடாக மாநில அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு, பிரிட்ஜோ கொல்லப்பட்டதை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து விரிவாக விளக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.