காயின்களை விழுங்கிய ஆமை இறந்தது| Dinamalar

காயின்களை விழுங்கிய ஆமை இறந்தது

Added : மார் 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காயின், விழுங்கிய, ஆமை, இறந்தது

பாங்காக் : இரண்டு வாரங்களுக்கு முன் தாய்லாந்தில், 5 கிலோ எடையுள்ள சுமார் 1000 காயின்களை விழுங்கிய ஆமைக்கு ஆபரேஷன் நடந்தது. அப்போது அதன் வயிற்றில் இருந்து 915 காயின்களை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அது அகற்றப்பட்டது.
25 வயதான அந்த கடல் ஆமைக்கு கடந்த ஞாயிறு அன்று இரண்டாவது தடவையாக ஆபரேஷன் நடந்தது. அதன்பின் அந்த ஆமை கோமா நிலைக்கு சென்றுவிட்டது. அது இன்று இறந்து விட்டது. ஏராளமான காயின்களை அது விழுங்கியிருந்ததால் அதன் மெட்டல், ஆமையின் ரத்தத்தை விஷமாக மாற்றி விட்டதாகவும் அதனால் அது இறந்து விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


நல்ல காலம் வரவேண்டும் ;

ஓம்சின் என்று பெயரிடப்பட்ட இந்த பெண் ஆமை தாய்லாந்தில் உள்ள சோன்புரி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வாழ்ந்து வந்தது. அந்த குளத்துக்கு வரும் பொதுமக்கள், தங்களுக்கு நல்ல காலம் வரவேண்டும் என்பதற்காக குளத்திற்குள் காயின்களை வீசுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட காயின்களை தான் இந்த ஆமை விழுங்கி இருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
24-மார்-201700:15:46 IST Report Abuse
கதிரழகன், SSLC காயின்? தமிழ் வார்த்தை காசு இல்ல நாணயம் சொல்ல கூடாதா?
Rate this:
Share this comment
Cancel
parthiban T - Periyakulam,இந்தியா
21-மார்-201716:29:41 IST Report Abuse
parthiban T ஆனால் இங்கு பணம் விழுங்கிய பல ஆமைகள் உயிரோடு இருக்கின்றனவே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை