எவரெஸ்ட்டை எட்டியதாக ‛கப்சா‛: கண்டுபிடிக்க ‛ஜி.பி.எஸ்.,' அறிமுகம்| Dinamalar

எவரெஸ்ட்டை எட்டியதாக ‛கப்சா‛: கண்டுபிடிக்க ‛ஜி.பி.எஸ்.,' அறிமுகம்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எவரெஸ்ட்டை எட்டியதாக   ‛கப்சா‛ 
கண்டுபிடிக்க  ‛ஜி.பி.எஸ்.,'

காத்மாண்டு: எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட்டதாக சில மலையேறும் வீரர்கள் பொய்யான தகவல்களை கூறுவதை தடுக்க, ஜி.பி.எஸ்., கருவியை பயன்படுத்த நேபாள அரசின் சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.
உலகத்தின் மிக உயரமான சிகரமான (29035 அடி) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை செய்வது மலையேறும் வீரர்களுக்கு கனவாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்கள் நேபாளம் வந்து, அங்குள்ள பேஸ் கேம்ப்பில் இருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறுகின்றனர்.


பொய்யான தகவல்:


இவர்களில் பலர், தாங்கள் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட்டதாக பொய்யான புகைப்படங்களை ஆதாரமாக காட்டி, ஏமாற்றுகின்றனர். கடந்த ஆண்டு இவ்வாறு ஏமாற்றிய இந்திய தம்பதிக்கு, அடுத்த 10 ஆண்டுகள் எவரெஸ்ட் சிகரம் ஏற தடைவிதிக்கப்பட்டது.


சோதனை ஓட்டம்:


இந்நிலையில், இதுபோன்ற பொய்யான தகவல்களை தடுக்கவும், மலையேறும் வீரர்கள் திசை மாறி செல்லாமல் இருப்பதற்காகவும் ஜி.பி.எஸ்., கருவியை அறிமுகப்படுத்த நேபாள அரசின் சுற்றுலா துறை முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அத்துறை அதிகாரி துர்கா தத்தா தாகல் கூறுகையில், ‛சோதனை ஓட்டமாக இந்த ஆண்டு மலையேற வரும் வீரர்கள் சிலரிடம் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி உள்ளோம். எதிர்பார்த்த அளவில் பலன்கிடைத்தால், அடுத்த ஆண்டு முதல் இத்திட்டம் கட்டாயமாக்கப்படும்,' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அபிமன்யு - chennai,இந்தியா
21-மார்-201715:36:50 IST Report Abuse
அபிமன்யு பிஜேபி கப்ஸா மாதிரி இருக்கு.. இந்தியா மூன்றே வருஷத்தில் முன்னேறி விட்டதுன்னு சொல்றாங்களே .. அது மாதிரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை