பணிக்கு திரும்ப டாக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

பணிக்கு திரும்ப டாக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பணிக்கு திரும்ப டாக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

மும்பை: பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என டாக்டர்களுக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் டாக்டர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதிலும் 4 ஆயிரம் டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். டாக்டர்களின் போராட்டம் 2வது நாளாக நீடிக்கும்நிலையில், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் எனக்கூறி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணியில் உள்ள டாக்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை