ஆர்.கே.நகரில் புதிய சங்கங்கள்: எடுபடுமா தினகரனின் ஐடியா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் புதிய சங்கங்கள்: எடுபடுமா தினகரனின் ஐடியா

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்.கே.நகர், புதிய சங்கங்கள், தினகரனின் ஐடியா

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் லெட்டர் பேடு இயக்கமாக இருந்தாலும் கூட்டிகிட்டு வாங்க. அவங்களை எனக்கு ஆதரவு கொடுப்பது போல, அறிக்கை மட்டும் விடச் சொல்லுங்க. அவங்களுக்கு தேவையானதை கொடுத்துடலாம் என்று, கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் அ.தி.மு.க.,வின் நியமன துனைப் பொதுச் செயலர் தினகரன்.


முளைக்கும் சங்கங்கள்:

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் லெட்டர் பேடு சங்க நிர்வாகிகளைத் தேடி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனராம். பத்து ஓட்டு இருந்தால் கூட போதும். லெட்டர் பேடு சங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரிக்கிறோம் என்று மட்டும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று, சொல்லி, சங்கங்களை வளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அ.தி.மு.க., மூத்த தலைவர்களின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சிலர், சமூக அமைப்புகள் பெயரில், திடீர் லெட்டர் பேடு அச்சடிக்கத் துவங்கி உள்ளனர். அவர்களெல்லாம் விரைவில் தினகரனை சந்தித்து, ஆதரவளிக்கக்கூடுமாம். இப்படி நூற்றுக்கணக்கான சங்கங்களும், பொது நல அமைப்புகளும் தனக்கு ஆதரவளிப்பது போல, செய்திகள் வர வர, அது தொகுதிக்குள் தன்னுடைய இமேஜை உயர்த்தும் என்றும், எதிர்ப்பாக இருப்போரின் மன நிலையை மாற்றும் என்றும் தினகரன் கணக்குப் போட்டே, இப்படி செய்கிறார் என்பது மக்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்? இந்த தேர்தல் நேரத்து ஸ்டண்டெல்லாம் எடுபடப் போவதில்லை என, தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மார்-201700:33:30 IST Report Abuse
தமிழ்வேல் அதுவும் நல்லதுதானே. அதுக்கும் அடங்களாட்டி அப்புறம் மனுஷன் .......
Rate this:
Share this comment
Cancel
22-மார்-201700:04:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஏய், ஏம்பா, நான் கூட ஒரு பத்து பதினைந்து லெட்டர் பேட் அடித்து வைத்திருக்கிறேன். நம்மளையும் கொஞ்சம் கவனியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201721:42:06 IST Report Abuse
Tamilan தன்மான தமிழர்களின் ஆதரவு இருக்கும்வரை இவராலும் சாதிக்கமுடியலாம். கருணாநிதி சாதிக்கவில்லையா?. இந்துக்கள் இந்தியா முழுமைக்கும், மத்தியில் செய்வதையெல்லாம், தமிழர்கள் தமிழகத்தில் இந்துத்துவாவை, தேவைப்பட்டால் இந்தியாவையே அப்புறப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்துவது ஒரு அரசியல் சட்ட நடைமுறையாகவே இருந்துவந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
21-மார்-201720:47:04 IST Report Abuse
மு. தணிகாசலம் நீதி மன்றமே சொல்லியிருந்தாலும் உங்களுடைய ஒப்புதல் வாக்குமூலம் இந்திய குடிமகன் அல்ல என்பதுதானே மிஸ்டர் தினகரன்? இப்போ மட்டும் எப்படி இந்த மண்ணின் மைந்தர் ஆவீர்கள்? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை, மக்கள் எந்தளவுக்கு தெளிவுடன் இருக்கிறார்கள் என்பதற்கான பரிசோதனை மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy PK - Chennai,இந்தியா
21-மார்-201720:35:22 IST Report Abuse
Palanisamy PK தினகரன் போட்டியிட்டால் ஆர் கே நகரில் யாரும் நோட்டை நீட்டினால் கூட ஒட்டு போட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201723:28:10 IST Report Abuse
தறுதலைஜி அந்த அளவுக்கு தமிழ்நாடு திருந்திடுச்சா நண்பா ? கேட்கவே புல்லரிக்குது,சரி போய் சாப்பிட்டு தூங்குங்க,சாப்பிடாமலே தூங்குனா இப்படி தான் கேட்ட கனவா வரும்....
Rate this:
Share this comment
Cancel
s.sakkaravarthi - sivakasi,இந்தியா
21-மார்-201720:23:26 IST Report Abuse
s.sakkaravarthi இன்னும் மக்கள் காசு கொடுத்தால் ஒட்டு போட்டு விடுவார்கள் என்று நம்புகிறார்கள் அரசியல் வாதிகள்
Rate this:
Share this comment
Cancel
SHANMUGM - Chennai,இந்தியா
21-மார்-201719:56:11 IST Report Abuse
SHANMUGM ஆர் .கே .நகர் தீர்ப்பு தமிழகத்தின் எதிர்காலம் , ஆர்.கே நகர் வாக்காளர்களே , தயவுசெய்து மனசாட்சிப்படி வாக்களித்து நம் தமிழகத்தை காப்பாற்றவேண்டும்.ன் நீங்கள் தான் இப்போது தமிழகத்தின் கடவுள்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மார்-201719:12:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆண்ட கட்சி மற்றும் பார்த்த கட்சிதான் திமுக. புதியவர்களுக்கு வாய்ப்பு தருவதே நல்லது. மேலும் ஆளுங்கட்சி நபர் வந்தால் தொகுதிக்கு நல்லது கிடைக்கும்.>>>>>>>>>>>
Rate this:
Share this comment
Rajah - Chennai,இந்தியா
21-மார்-201720:43:45 IST Report Abuse
Rajahவெகு விரைவில் அந்த ஆளும் கட்சி கிழிந்துவிடும். இருந்தாலும் ஒரு வாக்கிற்கு 10000 படி ஒரு லச்சம் வாக்குகளுக்கு 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாகிவிட்ட்து. பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு நல்லவர்களுக்கு உங்கள் வாக்கை போடவும். மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்கட்டும். அது சரி ஜெயா அம்மையாரின் 100 கோடி அபாரதத் தொகையையை யார் கட்டுவதாக தீர்மானம் எடுத்துள்ளார்கள். கயவர்களோடு உறவு வைப்பது எவ்வளவு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. RK நகர் வாக்காளர்களே தயவு செய்து கயவர்களோடு சேர்ந்து அவர்களுக்கு வாக்களித்து நம் நாட்டை அகல பாதாளத்தில் தள்ளி விடாதீர்கள். தீர்ப்பு உங்கள் கையில் உள்ளது. சிந்தித்து செயல் படுங்கள். அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு உங்களை விற்று விடாதீர்கள்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மார்-201700:35:21 IST Report Abuse
தமிழ்வேல் ஆளும் கட்சி வராத இடத்தில, ஆளும்கட்சி வஞ்சனை செய்தா.... அது எப்படி நல்ல கட்சியாகும் ?...
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
21-மார்-201718:55:33 IST Report Abuse
jaikrish மூன்றாம் இடமே சந்தேகம் தான்.. நேர்மையாக நடந்தால்.
Rate this:
Share this comment
Cancel
mohan -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201718:38:41 IST Report Abuse
mohan ஒப்புகை சீட்டு கையில் கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை