தினமலர் செய்தி எதிரொலி: ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி: ஐகோர்ட் நோட்டீஸ்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஈரோடு மாவட்டம், கொமரபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28; மனைவி சுசீலா, 24. இவர்களின் மகன் அன்பரசு, 6; குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அங்கன்வாடி மையத்தில், அம்மை தடுப்பூசி, சிறுவனின் வலது தொடையில் போட்டனர்.
ஊசி போட்ட இடத்தில், சிறிய ரத்தக்கட்டு உருவானது. நாளடைவில் சரியாகி விடும் என, கருதினர். ஆனால், 2 வயது வரை சிறிதாக இருந்த ரத்தக்கட்டு, குழந்தையுடன் சேர்ந்து கட்டியாக வளர்ந்தது. சிறுவனுக்கு தற்போது, 6 வயதாகும் நிலையில், 3 கிலோ எடையில், கேன்சர் கட்டியாக மாறியுள்ளது.
இந்த செய்தி, இன்றைய(மார்ச் 21) தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் தமிழக சுகாதார துறை செயலாளர், ஈரோடு கலெக்டர், எஸ்.பி., மற்றும் குழந்தைகள் நல ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
wellington - thoothukudi,இந்தியா
21-மார்-201719:07:43 IST Report Abuse
wellington தடுப்பு ஊசி என்ற பெயரில் மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கையாகும் ,ஐக்கிய நாட்டு சபையின் திட்டம் தான் இது ,ஆதார் அடையாளங்களை மக்களிடம் இருந்து பெற்ற பிறகு கட்டாய தடுப்பு ஊசி ,கட்டாய குடும்ப கட்டுப்பாடு எல்லாம் வரப்போகிறது ,இப்போதும் கூட பெற்றோர்களின் அனுமதியில்லாமல் தடுப்பு ஊசி போடப்பட்டுவருகிறது WHO என்ற உலக சுகாதார அமைப்பு மூலம் இந்த திட்டம் நடைபெற்றுவருகிறது ,உலகத்தில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த திட்டம் இந்தியாவில் உள்ள விலை போன அரசியல்வாதிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளது ,மக்களுடைய உரிமை பறிக்கப்பட்டு ,நெருக்கடி மூலம் தடுப்பு ஊசி என்ற பெயரில் நோய்களை பரப்பப்பட்டுவருகிறது மக்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது .
Rate this:
Share this comment
Cancel
Antoni Raj - Uthamapalayam,இந்தியா
21-மார்-201719:07:28 IST Report Abuse
Antoni Raj அதெப்படி இன்றைக்குத்தான் செய்தி போட்டு அதை இன்றே உயர்நீதிமன்றம் தானாக எடுத்துக்கொண்டு விசாரித்தது ?
Rate this:
Share this comment
Cancel
bell - coimbatore,இந்தியா
21-மார்-201718:51:46 IST Report Abuse
bell குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க தவறிய எல்லோரையும் பணிநீக்கம் செய்யணும் , பாதிக்கப்படகுழந்தையின் எதிர்காலத்துக்கு அரசு உரிய நிவாரணம் குடுக்கணும், இனி இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க அரசு உத்தரவாதம் தரணும், இல்லைஎன்றால் ரூபெல்லா தடுப்பூசி போட மக்களுக்கு உண்டான அச்சம் உண்மைதான்
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-மார்-201718:16:42 IST Report Abuse
Nakkal Nadhamuni தினமலருக்கு நன்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை