உத்தம பிரதேசமாக மாறும் உ.பி.,- யோகி| Dinamalar

உத்தம பிரதேசமாக மாறும் உ.பி.,- யோகி

Added : மார் 21, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தம பிரதேசம், உ.பி,.- யோகி, Yogi, UP CM

புதுடில்லி: மோடியின் ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என உ.பி.,முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் லோக்சபாவில் இன்று பேசுகையில் குறிப்பிட்டார்.

லோக்சபா எம்.பி.,யான ஆதித்யநாத், உ.பி., முதல்வராக பதவியேற்றுள்ளார். எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும் முன், லோக்சபாவில் இன்று அவர் பேசியதாவது: மோடி உலகம் அறிந்த தலைவராக உருவெடுத்துள்ளார். உ.பி.,யில் சாதி, மத கலவரத்தை அனுமதிக்க மாட்டோம். ஊழலுக்கு இடம் அளிக்க மாட்டோம். நான் தற்போது உ.பி., மாநில வளர்ச்சிக்காக பாடுபட போகிறேன்.

ராகுலை விட இளையவன் :

நான், அகிலேஷ்சை விட ஒரு வயது மூத்தவன்; ராகுலை விட வயதில் இளையவன். என்னால் நல்ல வளர்ச்சியை தர முடியும். உத்தரபிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றப்போகிறேன். உ .பி., மக்கள் வளர்ச்சிக்காக ஓட்டு அளித்துள்ளனர். மோடியின் கனவை உ.பி.,யில் நிறைவேற்றுவோம். இங்கு அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும். சிறந்த நிர்வாகமே எனது குறிக்கோள். ஏழை மக்களின் நலனுக்கே முதலிடம் கொடுப்போம். இவ்வாறு யோகி பேசினார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் யோசனை வரவேற்கத்தக்கது. இப்பிரச்னை நல்ல முறையில் முடிவுக்கு வர நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
22-மார்-201709:55:24 IST Report Abuse
kadhiravan நண்பர்களே..,நான் சவுதிஅரேபியாவில் வேலைபார்த்தபோது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இஸ்லாமிய நண்பர்கள்தான்..,நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம்..,நமக்குள் சண்டை மூட்டி விடுபவர்கள்..,பொறாமை உள்ளவர்களும்..,சகிப்புத்தன்மை இல்லாதவர்களும்..,நாம் பிரிந்து இருந்தால் அவர்களுக்கு ஆதாயம் கிடைப்பவர்கள் மட்டுமே..,அப்போது என் உயிர் இஸ்லாமிய நண்பன் ஒரு கருத்தை கூறியது மிகவும் சந்தோஷமாக இருந்தது..,பாபர் மசூதி இடிக்கப்பட்டுவிட்டது..,வழக்கு முடியும்வரை பொறுத்திருந்து..,அது முஸ்லிம்களுக்கு சாதகமானால்.,முஸ்லிம்கள் இந்துக்களுக்கு விட்டு கொடுத்து..,அதன் அருகிலேயே ஒரு மசூதியும் கட்டிக்கொள்ளவேண்டும்..,இந்துக்களுக்கு சாதகமானால் இந்து கோவிலின் அருகிலேயே ஒரு சிறிய மசூதி கட்டி கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.மசூதி அங்குதான் கட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை..,இந்துசகோதர்கள் அனுமதித்தால் மட்டுமே..,எப்படி என் நண்பனின் கருத்து நண்பர்களே??ஆம்..,நாமெல்லாம் இந்த மனநிலையில் தான் உள்ளோம்..,ஆனால் நம்மை பிரித்து வைப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்..,உ.பி முஸ்லிம்களும் இந்த மனநிலையில்தான் உள்ளனர் என்பது பா.ஜ.க வுக்கு முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதியில் வெற்றி தெரிவிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Body soda - Bishan,சிங்கப்பூர்
22-மார்-201709:04:10 IST Report Abuse
Body soda வாழ்த்துக்கள், உபியை உங்கள் நிர்வாக திறமையால் சிறந்த மாநிலமாக மாற்றி இந்தியாவுக்கு சிறப்பு சேருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
22-மார்-201701:42:46 IST Report Abuse
விருமாண்டி இந்து மக்கள் 80 % பேர் வாழும் நாட்டில் ராமர் கோவில் கட்ட யாரிடமும் பேச்சு வார்த்தை தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel
Mariadoss E - Trichy,இந்தியா
21-மார்-201723:50:01 IST Report Abuse
Mariadoss E அயோக்கிய பிரதேசமாக ஆக்காமல் இருந்தா சரி....
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
21-மார்-201722:43:40 IST Report Abuse
grg இவரின் பழய பேச்சு பாராளு மன்றத்தில் யூ டீயுபூ மூலம் கேட்டேன். மிக நன்றாக இருந்தது. இவர் தொகுதி இஸ்லாமியர்கள் அனைவரும் இவரின் நண்பர்கள். தமிழக முஸ்லிம்கள் நிறைய கேட்டு விட்டார்கள் - குறிப்பாக கடந்த 30 வருடங்களில். முன்பெல்லாம் என்ன ஒரு பாச உணர்வுடன் இருந்தார்கள் ஹ்ம்ம்
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
21-மார்-201720:57:33 IST Report Abuse
Rajathiraja எப்படியும் மோடி அரசால் ராமர் கோயில் கட்டமுடியாது. RSS வாயை அடைப்பதற்கே இவரை முதல்வர் ஆக்கியுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201720:27:11 IST Report Abuse
balakrishnan இவர் ஒரு மத வெறியராக காட்சிப்படுத்த பட்டாலும், தனிப்பட்ட முறையில் இவர் அனைவருடனும் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் பழகக்கூடியவர் என்றே தெரிகிறது, இவர் தொகுதியில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்களும் இவருக்கு அமோக ஆதரவை வழங்கி உள்ளார்கள், யாரிடம் என்ன திறமை இருக்குது என்பதை நாம் பொறுப்புகளை கொடுக்கும்போது தான் தெரிந்து கொள்ள முடியும்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-மார்-201720:12:00 IST Report Abuse
mindum vasantham இவரது ஹிந்து யுவ வாணி அமைப்பில் பொறுப்பில் இருக்கும் பெரும்பாலும் தலித்துகள் ,அவர்களுக்கு வரலாறு எல்லாம் உண்டு அதை இவர் பெருமைப்படுத்தியுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201719:01:33 IST Report Abuse
ரங்கன் இதே மாதிரி தான் இங்கே ஒரு சு.சாமி மதுரையை ஒரு குட்டி ஜப்பான் ஆக்கி காட்டுறேன்னுட்டு ஓட்டு வாங்கினார்... மருதை மேலும் வீணாப் போனதுதான் மிச்சம். இருந்து பாக்கத்தானே போறோம்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-மார்-201718:39:45 IST Report Abuse
A.George Alphonse I think this young, energetic, noble and humble person may give Good rule to the people of U.P in coming days. May God bless him with good health and long live to serve for the betterment of people of U.P in future.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை