ஜெயலலிதா மரண விசாரணை: சசி தரப்பு ‛குஷி' - Jayalalitha | Dinamalar

ஜெ., மரண விசாரணை: சசி தரப்பு ‛குஷி'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஜெ., மரணம், சசி, குஷி

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்க, மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக இணைத்து விசாரிக்கக் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில், இந்த வழக்குத் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம்:


ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் விசாரணை குழு அமைக்க வாய்ப்பே இல்லை. மாநில அரசுதான் விசாரணைக்கு விட வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்காக, குழு அமைத்து விசாரிக்க முடியும். அதனால், இந்த வழக்கில் இருந்து மத்திய அரசை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு, இப்படியொரு பதில் மனுவை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதால், அனேகமாக டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்யப்படும். மாநில அரசுக்கு மனு அளித்து, விசாரணைக் குழு அமைக்கக் கேட்டுக் கொள்ளலாம் என்பதோடு, வழக்கை கோர்ட் முடித்து விடும்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., சசிகலா தரப்பு, மூத்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசு, உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணைக் குழு அமைக்க தயாராக இருக்கிறது என்று சொல்லி, அதற்கேற்ற வகையில், கோர்ட் உத்தரவிட்டால், கடும் சிக்கலாகி விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தோம்.

ஆனால், மத்திய அரசு, எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருப்பது, நிம்மதியை அளித்துள்ளது. இந்த விஷயத்தில், இனி, யாரும் கோர்ட்டுக்குச் செல்லவும் வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201723:23:54 IST Report Abuse
தறுதலைஜி ஆன்லைன் ஆர்வ கோளாறுகளே உங்க ஆசைப்படியெல்லாம் கோர்ட் உடனே எதுவும் செய்ய முடியாது,தகுந்த ஆதாரங்கள் சாட்சிகள் வைத்து பண பலம் அதிகார பலம் நுழையாத வழக்குகளே பல்ல காட்டிட்டு போகுது,இந்த நிலைமையில் இவனை உள்ள புடிச்சு போடுங்க யுவர் ஆனர்னு சௌண்டு உடக்கூடாது.போய் டீவில பேய் நாடகம் பார்த்துட்டு பயப்படாம தூங்குங்க.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-மார்-201723:01:25 IST Report Abuse
mindum vasantham கால் எடுத்துட்டாங்க என்று சொல்வதை கூடவா ஒரு போட்டோ ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:53:17 IST Report Abuse
K.Sugavanam சூணா சாணா காப்பாத்திட்டாரு போல..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-மார்-201722:28:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் குவைத்திலிருந்து வந்த கண்டைனர் கை மாறிடுத்து..
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
21-மார்-201719:59:05 IST Report Abuse
Rajinikanth அப்பாடா..தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது ...
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
21-மார்-201719:54:22 IST Report Abuse
Gnanam மர்ம கொலை. மத்திய அரசு மூன்று மருத்துவர்களை அனுப்பி நிலவரத்தை கண்காணித்த நிலையில், மக்களுக்கு சரியான விளக்கம் அளிக்கவேண்டும். நீதி அரசர்கள் இப்படி கையை விரிக்க கூடாது. நீதியை நிலைநாட்ட பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
trer - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201718:37:37 IST Report Abuse
trer அப்போ சசிகலா புச்பாவிற்கு பாதுகாப்பு கொடுத்தது ஏன்
Rate this:
Share this comment
Cancel
tree - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201718:34:27 IST Report Abuse
tree அப்போ யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.