போலி அரசியல் வேடதாரிகள்: கொதிக்கிறார் நிர்மலா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலி அரசியல் வேடதாரிகள்: கொதிக்கிறார் நிர்மலா

Added : மார் 21, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 போலி அரசியல் வேடதாரிகள் கொதிக்கிறார் நிர்மலா

சென்னை: அன்பாக, மரியாதையாக நடத்துபவர்களை விட்டு விட்டு, அடாவடியாக மிரட்டல் மூலம் கட்சி நடத்த வேண்டும் என்று நினைப்பவர்களிடம் இருந்து விலகிச் செல்ல நினைக்கிறேன் என, அ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கூறினார்.

அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி நேற்று, கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு வந்திருந்த நிர்மலா பெரியசாமி, 'ஓ.பன்னீர்செல்வம் நமக்கு ஒன்றும் எதிரியில்லையே…' என்று, சக பேச்சாளர் நடிகர் விக்னேஷிடம் தெரிவிக்க… இதை பக்கத்தில் இருந்து கேட்ட, தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, 'பன்னீர்செல்வத்தை எதிரியில்லை என்று சொன்ன நீயெல்லாம், உண்மையான அ.தி.மு.க., தொண்டரா? இங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்றால், அங்கே செல்…' என, ஒருமையில் பேச, 'சொந்தத் தொகுதியையே முழுமையாக வைத்துக் கொள்ள வக்கில்லாமல், ஆயிரம் விளக்கில் தோற்று விட்டு நிற்கும் நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியா? நீயெல்லாம், அ.தி.மு.க.,வின் விசுவாசியா?' என, நிர்மலா பெரியசாமியும் பதிலடி கொடுத்து பேச, தலைமைக் கழக வளாகமே களேபரமாகி இருக்கிறது.

சிறப்பு பேட்டி:

அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணியில் நிர்மலா ஐக்கியம்

இது குறித்து, அவர் அளித்த பேட்டி:

நான், இருந்த ஜெயலலிதாவின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டுத்தான் அரசியலுக்கே வந்தேன். அவர், என்னை நேரடியாக அழைத்து பலமுறை பேசியிருக்கிறார். அந்த அன்பில்தான், நான் அ.தி.மு.க.,வின் முழு விசுவாசியாக இருந்தேன். ஆனால், காலன், ஜெயலலிதாவை அழைத்துக் கொண்ட பின், கட்சியின் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.

குறிப்பாக, சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து ஜெயிலுக்குச் சென்ற பின், கட்சியே தங்களுடையது என்று நினைத்து, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஆட்டம் போடுகின்றனர். வேறு சிலரும் அப்படித்தான் செயல்படுகின்றனர்.

இதையெல்லாம் அறிந்தும், பார்த்தும் நான் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு தான் இருந்தேன். இருந்தாலும், நிலைமைகள் அனைத்தும் கொஞ்ச காலத்துக்குள் மாறி விடும் என்றும் நம்பி இருந்தேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து தொடர்ந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. ஆனாலும், சசிகலாவின் தலைமையிலேயே இருந்து செயல்படலாம். பிளவுபட்டக் கட்சி, எப்படியும் இணைந்து விடும். எதற்காக அங்கும், இங்கும் செல்ல வேண்டும் என நினைத்துத்தான், அதை தவிர்த்து வந்தேன்.


வளர்மதி சத்தம்:


ஆனால், நடப்பதெல்லாம் தவறாகவே நடந்தன. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு வந்து தலைமைக் கழகம் போனேன். அங்கு அஜய் ரத்னம், நடிகர் விக்னேஷ் ஆகியோர் வந்திருந்தனர். 'என்னப்பா விக்னேஷ், ஓ.பி.எஸ்., பக்கம் போனதாகச் சொன்னார்களே…' என்று கேட்டுவிட்டு, 'பரவாயில்லை… அவர்தான் இந்தப் பக்கம் வந்து விடப் போகிறாரே… எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்து செயல்படப் போகிறோம்' என்று சொல்லி கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, குண்டு கல்யாணம் ஆகியோர் அதை கேட்டு விட்டனர்.

உடனே, எழுந்து நின்று என்னை நோக்கி கத்தத் துவங்கினார் வளர்மதி. ஓ.பி.எஸ்., தான் எங்களுக்கெல்லாம் எதிரி. இந்த இயக்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்து விட்டுச் சென்றவர். அவரை, எப்படி திரும்ப சேர்த்துக் கொள்வோம். அவர்தான், பிடிக்கிறதென்றால், அங்கேயே போ… என்றெல்லாம் ஒருமையில் பேசி, காட்டுக் கத்தலாக கத்தினார். இதற்கு ஒத்து ஊதுவது போல, கோகுல இந்திராவும், சி.ஆர்.சரஸ்வதியும் சீறிக் கொண்டு வந்தனர். குண்டு கல்யாணமும் ரொம்பவே சத்தம் போட்டார்.

யோவ் இங்கப் பார். இந்த சவுண்டு விடறது…சீற்றம் காட்டுவதெல்லாம் என் கிட்ட வெச்சிக்காத… நான், ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தவள். மக்கள் பணி செய்யறதுக்காக அரசியலுக்கு வந்தவள். உன்னை மாதிரி பிழைப்பு நடத்தறதுக்கு அரசியலுக்கு வரலை.

எங்க குடும்பமே பாரம்பரியமான அரசியல் குடும்பம். முன்னாள் அமைச்சர்ங்கிறதால, உனக்கு மரியாதை கொடுக்கிறேன். எதுவாக இருந்தாலும், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்க… என்று, வளர்மதியிடம் சொல்லிவிட்டு, வேகமாக கிளம்பி, வாசலுக்கு வந்து விட்டேன். பின், தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் நடந்தது அத்தனையையும் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

நடந்ததெல்லாம் கேள்விப்பட்டு, என்னுடைய குடும்பத்தார் ரொம்பவும் வேதனை அடைந்துள்ளனர். இனி, அங்கு இருப்பது உனக்கு சரிபட்டு வராது. ஓ.பி.எஸ்., அணியில் இணைந்து பணியாற்றுமாக சொல்லி விட்டனர். மரியாதையான இடத்தில் இருந்து பணியாற்றுவது தான் நல்லது என்ற முடிவுக்கு நானும் வந்து விட்டேன். விரைவில் ஓ.பி.எஸ்., அணியில் இணைந்து பணியாற்றுவேன்.

உண்மையிலேயே இந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பிருந்தால், கட்சியின் துணைப் பொதுச் செயலரான தினகரன் என்னை அழைத்து சமாதானம் செய்திருப்பார். செய்யவில்லை. அதனால், இனி, அங்கிருக்க வாய்ப்பில்லை.


அடாவடி:


அங்கு, காசை வைத்து அடவாடித்தனம் செய்து, அரசியல் செய்து, அதில் வெற்றியடையலாம் என்று நினைக்கின்றனர். என்னைப் போன்ற நேர்மையான, வெளிப்படையான அரசியல்வாதிகளுக்கு இனி, அங்கு வேலையில்லை. ஜெயலலிதா இருந்த வரை, அமைதியாக இருந்த வளர்மதி, கோகுல இந்திரா போன்றவர்களெல்லாம், போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. நாட்டை போலியான அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, நல்லவர்களுடன் இணைந்து செயல்படப் போகிறேன்.

போலியான அரசியல் வேடதாரிகளின் முகமுடியைக் கிழிப்பதுதான் என்னுடைய தொடர்ச்சி யான வேலையாக இருக்கும். கோகுல இந்திராவும், வளர்மதியும் சொந்தத் தொகுதியையே காப்பாற்ற முடியாதவர்கள், இந்த இயக்கத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம். அதற்காக, ஒட்டுமொத்த கட்சியில் இருப்பவர்களையும் நான் வெறுக்கவில்லை. என்னுடைய பணி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து, இன்னும் வேகமாக நடக்கும்.இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
22-மார்-201722:08:55 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA நீயும் ...உன் அரசியலும் .... உங்களை மாதிரி ஆட்கள் உடம்பில் கொஞ்சம் கூட நல்ல ரத்தம் ஓடாதா ....?
Rate this:
Share this comment
Cancel
chidhambaram - chennai,இந்தியா
22-மார்-201709:07:09 IST Report Abuse
chidhambaram வாம்மா மின்னல் .... நீங்க இப்ப சொல்லுற போலி வேடதாரிகளுக்காக பல வருடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தீர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Subra - Singapore,சிங்கப்பூர்
22-மார்-201708:55:25 IST Report Abuse
Subra தினகரன் பேசியிருந்தால் அங்கே இருப்பேன் என்று சொல்லும் இந்த அம்மணிக்கு எதுக்கு இவ்வளவு இறுமாப்பு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-மார்-201708:41:21 IST Report Abuse
Srinivasan Kannaiya நேர்மையான, வெளிப்படையான அரசியல்வாதிகளுக்கு எந்த ஒரு கட்சியும் தேவை இல்லை... மக்களுக்கு நேரிடையாக முடிந்த வரையில் எளிமையாக தொண்டு செய்யலாம்...
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
22-மார்-201707:55:46 IST Report Abuse
Appan சொர்ணாக்கா 2 -, சசிகலா ஜெயிலில் உள்ளார்..சொர்ணாக்கா 3 - வளர்மதி இப்போ அதிமுகவின் சொந்தக்காரர் என்று நினைக்கிறார்...சொர்ணாக்கா 4 - கோகுல இந்தியா பார்க்க அழகாயிருந்தாலும் வாயை திறந்தால் தாங்க முடியாது..நேர்மையின் சின்னம் சகாயத்தை அமைசராக இருந்த போது பந்தாடியவர்..அதனால் அண்ணா நகர் தொகுதி மக்கள் இவரை ஒதுக்கினார்கள்.இன்னும் புத்தி வரவில்லை..சொர்ணாக்கா 5 - சரஸ்வதி....சினிமாவிலிவர் ஒரு எக்ஸ்டரா...அது போல் சொர்ணக்காக்களில் இவர் ஒரு எக்ஸ்டரா..இப்போ ஹீரோயின் ஆக பார்க்கிறார்..இவர்கள் தான் சசிகலா அணியின் அதிமுக...கட்சி உருப்படுமா..?.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-மார்-201707:41:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல தான் ஆட்சியே நடக்குது அதுலேயும் ஒப்பெருந்தேவிகளான இந்தமூன்றும் போடும் ஆட்டம் சகிக்கலே அகம்பாவத்தை உச்சம்மா செயல்படுத்துங்க அதுலேயும் வளர்மதிக்கு தான் சி எம் என்று எண்ணம் .அசிங்கம் இப்போது மேக்சிமம் படிச்சவாளே இருக்கா நாட்டிலே அதனால் இதுகளோட கனவுகள் பலிக்கவே சான்ஸ் இல்லே
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
22-மார்-201702:00:43 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA நீயே நல்லா வசனம் பேசுற ..நல்லா நடிக்கிற ....பேசாம நீயும் சினிமாவுல நடிக்க போயிடு..... அண்ணாதிமுக அரசியல் சாக்கடையில் நெளியும் புழுக்களில் நீயும் ஒன்னு ....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
22-மார்-201701:58:09 IST Report Abuse
LAX அக்கா.. நிர்மலா, இப்பக்கூட உங்க முடிவுல ஒரு தெளிவு இல்லைங்கறதையே உங்க பேச்சு காட்டுது.. ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால் வைக்கிறதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது.. புரட்சித்தலைவியால் வெளியேற்றப்பட்டு, அடிப்படை உறுப்பினரே அல்லாத ஒருவர், இன்றைக்கு ஜெ. அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியையும் வீட்டையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கும்பலில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள து.பொ.செ. பதவியேல்லாது என்று ஓ.பி.எஸ். அவர்களின் அணியினரே கூறிவரும் நிலையில், ஓ.பி.எஸ். அணியில் இணைவதாகக் கூறும் நீங்க இன்னமும், ஜெ. கட்சியிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஆளை, து.பொ.செ. என்று அந்த ஆள் பெயரை கூறுவது எந்த வகையில் பொருந்தும்..? பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசணுமல்லோ..?
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
22-மார்-201700:55:19 IST Report Abuse
SANKAR மரியாதை எதிர்பார்த்து அ தி மு க வில் சேர்ந்தார்களா.. இல்லை ஜெயலலிதா தொழில் செய்ய இடையூறு கொடுப்பார் என்று சேர்ந்தார்களா? அது (அ தி மு க)எப்போதும் இப்படித்தான் இருந்தது... இப்போதுதான் புதிதாக கண்டு பிடித்த மாதிரி நிர்மலா பெரியசாமி சொல்லுகிறார்கள்...? நீங்கள் மேல்தட்டு வர்க்கம்... அடித்தட்டு மக்கள் அந்த பக்கமும் (ops)அப்படித்தான் இருப்பார்கள்.... வளர்மதி ஒரு ரகம்... அந்த பக்கம் மதுசூதனன் எல்லாம் பேச்சு எப்படியோ அடிதடி ஆசாமி... உங்களுக்கு எது வேணுமோ அங்கே போங்கோ... வாழ்க வளமுடன்...
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
21-மார்-201722:50:43 IST Report Abuse
Maverick YOU ARE A FIRST CLASS OPPORTUNIST. NO LESS THAN SARASU..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை