உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள் | உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்| Dinamalar

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்

Added : மார் 22, 2017 | கருத்துகள் (117)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், மடம், பணி, முஸ்லிம்

புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தில் உள்ள மடத்தில், பொறியாளர், காசாளர் மற்றும் பசு பராமரிப்பாளர்கள் முஸ்லிமாக உள்ளனர்.

உ.பி., முதல்வராக பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். தீவிர இந்து ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட இவர், கணித பட்டதாரி ஆவார். கோரக்ப்பூரில் மடத்தை துவக்கி நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் பணிபுரியும் பொறியாளர், காசாளர் என ஏராளமான முஸ்லிம்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோரக்நாத் கோவிலில் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் யாசின் அன்சாரி கூறுகையில், ஆதித்யநாத்துடன் நல்ல உறவு உள்ளது. அவர் எப்போது இங்கு வந்தாலும், என்னை அழைத்து, பணிகள் பற்றிய விபரத்தை தெரிவித்து கொள்வார். அவரது குடியிருப்பில் நான், அடுப்படி முதல் படுக்கையறை வரை சுதந்திரமாக சென்று வருவேன். அவருடன் இணைந்து சாப்பிடுவேன். எனது பெரியப்பா இந்த கோயிலுக்கு ஏற்கனவே இங்கு வந்துள்ளார். கோயிலின் சமையலறை பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். எனது மனைவியின் தாயார் சமையல் கண்காணிப்பாளராகவும், அவரது கணவர் தோட்டக்கலைஞராகவும் பணிபுரிந்துள்ளனர். கடந்த 1977 முதல் 83 வரை கோயில் காசாளராக இருந்துள்ளேன். 1984 முதல் கோயிலில் நடைபெறும் புனரமைப்பு பணி கண்காணிப்பாளராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கோயிலில் உள்ள பல கடைகளை முஸ்லிம்கள் நடத்தி வருகின்றனர். அவர்களில், சயத் அன்சாரி என்பவர் கூறுகையில், யோகி, ஜாதி மதம் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவுவதை பார்த்துள்ளேன். எனது வீட்டு திருமணத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அஜிஜூன்னிசா கூறுகையில், கடந்த 35 வருடம் இங்கு கடை நடத்தி வருகிறேன். யோகியிடமிருந்து எந்த பிரச்னையும், இடையூறும் வந்ததில்லை. அவர் உண்மையான துறவி. இவ்வாறு அவர் கூறினார்.

முகமது முடகிம் கூறுகையில், கோயிலில் உள்ளே ஏராளமான முஸ்லிம்கள் பயமில்லாமல் வாழ்கின்றனர் சம்பாதிக்கின்றனர் எனக்கூறினார்.

கோயிலின் முதல் பொறியாளராக பணிபுரிந்த நிசார் அகமது கூறுகையில், கோயிலில் பொறியாளராக பணிபுரிந்துள்ளேன். கோயில் அருகேயுள்ள மண்டபம், கடைகள், ஆசிரமம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளேன். மருத்துவமனை மற்றும் கோயிலுடன் இணைந்துள்ள பல கோயிகளை நான் நிர்மானித்துள்ளேன். தற்போது நான் ஓய்வு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத் பசுக்களை பெரிதம் நேசிப்பவர். 400 மேற்பட்ட கோசாலைகளை அமைத்துள்ளார். அதன் தலைமை ஊழியராக இருப்பவர் முகமது. இவர் கூறுகையில், முன்னர் எனது தந்தை தலைமை ஊழியராக இருந்தார். தற்போது நான் இந்த பணியை செய்து வருகிறேன். எங்கள் அனைவரையும் ஆதித்யநாத் நன்றாக கவனித்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

யோகி ஆதித்யநாத், மடத்தில் உள்ள குடியிருப்பில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது அறையில், அட்டாச்டு பாத்ரூம் உள்ளது. டிவி மற்றும் ரேடியோ ஏதுமில்லை. அவரது அறையில் உள்ள நேரு, மகாத்மா காந்தி முதல் ஆபிரகாம்லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரது புத்தகங்கள் உள்ளன. டிவி மற்றும் கணிப்பொறி ஏதும் அவரது அறையில் இல்லாத நிலையில், தினமும் பத்திரிகைகளை தவறாமல் படிக்கும் வழக்கம் கொண்டவர் யோகி ஆதித்யநாத்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-மார்-201721:11:05 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஏன் இங்கு சௌகார்பேட்டையில், மண்ணடியில், broadwayil ராயப்பேட்டையில் உள்ள அநேக முஸ்லீம் அன்பர்களின் கடைகளில் இந்துக்கள் வேலை செய்கின்றனர். உழைக்கும் ஜாதி மதங்களை பார்ப்பதில்லை மனங்களைத்தான் பார்க்கிறது. இன்னும் சிறு பிள்ளைத்தனமாக இந்து முஸ்லீம் கிருத்துவர் என்று மக்களை இனம் பிரிக்காதீர். ஜாதி இரண்டொழிய வேறில்லை ...... இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர் என்று நம் மூதாதையர்கள் எழுதியதை மறக்க வேண்டாம். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு. வாழ்க ஹிந்து முஸ்லீம் கிருத்துவர் ஒற்றுமை.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
22-மார்-201722:39:44 IST Report Abuse
adalarasan இவார் இஸ்லாமிற்கு எதிரி இல்லை? ஆனால் சிருபான்மியினரை வோட்டு வங்கி ஆக்கி, பிரிவினைவாதத்தை, அதிகரிக்கச்செய்பவர்கள், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்பவர்களை, கடுமையாக சாடுகிறார்? அது பலருக்கு பிடிக்காது?
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-201719:36:17 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மதவாதிகள் மதவாதிகள் என கூறிடும் எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டார் போல் உள்ளது. மதவாத கட்சி என்று கூறுபவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X