எங்க சுந்தர் சாகல...| Dinamalar

எங்க சுந்தர் சாகல...

Updated : மார் 22, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


எங்க சுந்தர் சாகல...

பாரதி யுவகேந்திரா நிறுவனம் சார்பில் மதுரையில் மாதம் தோறும் நடக்கும் அனுஷத்தின் அனுகிரஹத்தின் இநத மாத நிகழ்வின் நிறைவில் நிறுவனத்தின் நிறுவனர் நெல்லை பாலு ஒரு அறிவிப்பு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில கலந்து கொண்டவங்க எல்லோருக்கும் வணக்கம், நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தகவலை உங்களோட பகிர்ந்துக்கணும், ஒரு ஐந்து நிமிடம் என்னோட பேச்ச கேட்பீங்களா? என்ற நெல்லை பாலுவின் குரலில் இருந்த உருக்கம் அவையில் இருந்தவர்களை அமைதிகாக்கும் படி செய்தது.சென்னையைச் சேர்ந்தவர் சுந்தர்.

ரைட்மந்திரா.காம் என்ற இணையதளத்தை நடத்துவதன் மூலம் ரைட்மந்ரா சுந்தர் என்று அறியப்பட்டவர்.நான் இதுவரை ஒரு முறைகூட பார்த்தது இல்லை.

சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும்,நேதாஜியின் படையில் இருந்தவர்களை பற்றியும்,ஆன்மீகம் பற்றியும் தனது இணையதளத்தில் விடாமல் எழுதக்கூடியவர்.வயதான பெற்றோர்களின் ஒரே மகன்.

வருடந்தோறும் பாரதி விழா நடத்தி சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர்களை மேடையேற்றி கவுரப்படுத்தக்கூடியவர்.உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவந்தவர்.

இவருக்கு மிகவும் பிடித்த விஷயம் பழமையான கோவில்களில் உழவாரப்பணி செய்வது.பிறகு ஏழை எளியவர்களை வேன் வைத்து கோவில்களுக்கு அழைத்துப் போய் தரிசனம் செய்துவைப்பது.
இப்படி ஒடிக்கொண்டே இருக்கிறாயே உனக்கும் வயது 42 ஆகிவிட்டது ஒரு திருமணம் செய்து கொள்ளேன் என்ற பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தவர்.சதுரகிரிவரை போய்விட்டு வந்துவிடுகிறேன், நீங்கள் சொன்ன பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கடந்த 10/03/2017 ந்தேதி சென்னையில் இருந்து கிளம்பினார்.

வழக்கம் போல தனக்கு தெரிந்த, அந்த பகுதி ஏழை எளியவர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேன் மற்றும் ஒரு ஸ்கார்பியோ காரில் பயணம் துவங்கியது.11 ந்தேதி அதிகாலை மதுரைக்கு முன் மேலுாரில் டீ சாப்பிட்டு இருக்கின்றனர்.அதுவரை வேனில் வந்த சுந்தர் அப்போதுதான் ஸ்கார்பியோ காரின் முன் இருக்கைக்கு மாறுகிறார்.
மீண்டும் பயணம் துவங்கி பத்து நிமிடம் கூட தாண்டியிருக்காது,ஸ்கார்பியோ வாகனம் தட்டுத்தடுமாறி ஒடி சென்டர் மீடியனை இடித்து பல குட்டி கரணங்கள் அடித்து பள்ளத்தில் விழுந்தது.சத்தம் கேட்டு ஒடிவந்து பள்ளத்தில் விழுந்தவர்களை காப்பாற்றி மேலே கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது சுந்தர் இறந்துவிட்டார் என்பது.

தங்களின் ஒரே நம்பிக்கையான மகன் சுந்தர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்றோர்களான வேணுகோபாலும்-சாந்தாவும் நொறுங்கிப்போனார்கள்.அடுத்து என்ன செய்வது என்பது கூட தெரியாமல் தவித்துப் போனார்கள்.மருமகன் ஜெயராம் மட்டுமே பெரும்துணை.

சுந்தரின் உடலை மேலுார் ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்து பெறுவது முதல் அடக்கம் செய்வது வரை நண்பர்களின் பங்கு பெரிதாக இருந்தது அந்த நண்பர்களில் தினமலர் முருகராஜ்ம் ஒருவர்.அவர் சுந்தரைப் பற்றி இன்று ஒரு பதிவு போட்டிருந்தார்.அந்தப்பதிவை பார்த்தது முதல் மனதில் இனம் தெரியாத சோகம் இழையோடுகிறது.இவரைப் போல சமூகத்திற்கு உழைத்தவர்களின் பெற்றோர்களுக்கு வார்த்தைகள் மட்டும் ஆறுதலாக இருக்குமா? இருக்காது ஆகவே நம்மால் முடிந்ததை செய்வோம் என்று முடிவெடுத்துள்ளோம்.

இங்கே உள்ள இந்த வாளியில் உங்களால் முடிந்ததை போடுங்கள் அந்தப்பணத்தை எடுத்துப்போய் சுந்தரின் பெற்றோரிடம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னார்.
நெல்லை பாலு இதைச் சொல்லி முடித்ததும் அவையில் கனமான சோகமான அமைதி நிலவியது.அதைத் தொடர்ந்து ஒருவர் தவறாமல் வந்து வாளியில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர்.வீட்டிற்கு போக வைத்திருந்து பஸ் கட்டணமான பத்து ரூபாய் கூட அதில் உண்டு.

இப்படியாக சேர்ந்த பணம் இருபதாயிரத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்த பாலு அனுஷம் அனுக்கிரகம் அறங்காவலர் வைத்தியநாதனை அழைத்துக்கொண்டு என்னையும் சேர்த்துக் கொண்டு ஐயப்பன் தாங்கலில் உள்ள சுந்தரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று எங்களால் முடிந்த முதல் சிறு உதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினார்.
எங்க புள்ள சுந்தர் சாகல உங்க ரூபத்துல பார்க்குகிறோம்,அப்பப்ப வந்து போங்க, எங்களைப் பத்தி எதுவுமே தெரியாம உதவிய அத்துனை பேருக்கும் நன்றி என்றனர் கண்களில் நீர் தளும்ப...

இந்த முயற்சியை துவங்கியுள்ள திரு.நெல்லை பாலுவுடன் பேச:9442630815.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinath.T - chennai,இந்தியா
23-மார்-201718:55:30 IST Report Abuse
Gopinath.T சுந்தரம் சார் , நீங்கள் ஆற்றிய கோவில் திருப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . தற்போது , நீங்கள் இல்லாததை என்னால் நம்ப முடியவில்லை . தாங்கள் என்னுடன் பணியாற்றியதை என்னால் மறக்க முடியவில்லை . என்றும் உங்கள் நினைவில் . வி - கோபி .....
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
23-மார்-201718:54:23 IST Report Abuse
ravi ramanujam r நல்லவர்களை தனக்கு சேவை செய்ய அழைத்து கொண்டு விட்டானோ, அந்த ஆண்டவன் என்றும் கல்நெஞ்சக்காரனோ என்ற சந்தேகமும் நம்முள் எழுவது தவிர்க்க இயலாதாகி விடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Revathi Archana - madurai,இந்தியா
23-மார்-201711:40:30 IST Report Abuse
Revathi Archana நல்ல மனிதர்களை ரொம்ப நாள் இந்த பூமி தாங்காது .என்று பெரியவர்கள் கூறுவார்கள் ,ஏன் என்ற காரணம் இன்னும் புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
23-மார்-201710:25:16 IST Report Abuse
Stalin நல்ல மனம் உயர்க
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
23-மார்-201709:51:28 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வாழ்த்துக்கள் இறைவன் அருள்புரியட்டும் நல்ல உள்ளங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
22-மார்-201722:53:02 IST Report Abuse
Manian நல்லவர்களை ஆண்டவன் உலகில் வெகு நாள் துன்பப்பட விடுவதில்லை.அவர்கள் வழி காட்டி விளக்கை ஏற்றி விட்டு சென்று விடுகிறா்கள். அதை தொடருவது நமது கடமை. ஆதி சங்கரிக்கு இளவயதே ஆனால்...திரு முருகராஜ் இந்த குடும்பத்திற்கும், இன்னும் பலருக்கும் உதவுகிறார். ஒரு யோசனை-இந்தக் குடும்பம் போன்றவர்களுக்கு உதவி செய்ய ஒரு பவுண்டேசன் ஏற்படுத்தலாம். நல்ல மணமுள்ள பணி மூப்படைந்த ஜட்சு,வக்கீல்,நள்ளி சின்னசாமி செட்டியார் போன்ற 6-10 சமூக அக்கரை கொண்டவர்களை டிரஸ்டியாக்கி,பணம் சேர்க்கலாம். அதை முதலீடு செய்து, அதில் வரும் வட்டியை சந்தரின் பெற்றோ்கள் போன்றவரின் அத்யாவசிய தேவக்கு நேரடியாக செலுத்தலாம். குஜராத்தி நண்பர் சொன்னது: ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒவ்வொரு குடும்பமும்1,000 ரூ கொடுப்போம்.சாமான்கள் எதுவும் கிடையாது. மொத்த வசூலை குஜராத்தி சமாஜம் மூலம் ஒரு நல்ல தொழிலில் 10% சொந்தக்காரராக மொதலீடு செய்வோம். பையன் 18 ஆகும் போது சில லட்சத்துக்கு அதிபதி இந்த அணுமுறையை பின்பற்றலாம். நள்ளி போன்றவர்களுக்கு இதற்குமேலும் தெரியும்.சுந்தர் ஆத்மா சாந்தி அடைய பிராதிக்கிறேன்.
Rate this:
Share this comment
Pillai Rm - nagapattinam,இந்தியா
24-மார்-201712:36:53 IST Report Abuse
Pillai Rmதமிழனுக்கு தங்கத்துல காச முடக்க மட்டுமே தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
புங்கை மரம் - Dharapuram,இந்தியா
22-மார்-201721:22:55 IST Report Abuse
புங்கை மரம் Please share the Account number to transfer my small contribution
Rate this:
Share this comment
palaniappan - madurai,இந்தியா
24-மார்-201710:37:24 IST Report Abuse
palaniappanசுந்தர் சார் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அன்னாரது குடும்பத்திற்கு உதவி செய்ய செய்ய விரும்பும் அன்பு உள்ளங்கள் K VENUGOPALAN , ANDRA BANK , SB ACCOUNT NO : 176210100025547 , IFSC ANDB0001762 , IYYAPPANTHANKAL , CHENNAI -56 என்ற அனுப்பி வைக்கலாம் . அல்லது சென்னை வாசிகள் 2/698 , PLOT NO : 31 FIRST MAIN ரோடு, ASHOK BRINDAVAN NAGAR , IYYAPPANTHANGAL , சென்னை-600056, நேரில் தொடர்பு கொள்ளலாம்...
Rate this:
Share this comment
புங்கை மரம் - Dharapuram,இந்தியா
24-மார்-201723:49:04 IST Report Abuse
புங்கை மரம்@பழனியப்பன், i have transferred 4k to the above account, It will be there in the account by Monday. Please accept my small contribution. Transaction typeTransfer Funds to an account in other bank through NEFT Date of transaction27/03/2017 From ICICI bank account021201559859-SIVAKUMAR SUBRAMANIAN To payee176210100025547-Sundar Transaction amount (INR)INR 4,000.00...
Rate this:
Share this comment
sen - Dallas,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201703:59:19 IST Report Abuse
senCould you please provide, Mr. Venugopal's Last Name, Mobile no and Landline Number.It is required to initiate the money transfer. Thank you Senthil...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை