ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி

Added : மார் 22, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி

மும்பை: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தப் பட்டியலில் ரவிந்திர ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் 'ஏ' கிரேடில் இடம் பிடித்தார். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 2 கோடி வழங்கப்படும்.

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 32 பேர் அடங்கிய வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவிந்திர ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் 'ஏ' கிரேடுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரிவில் கேப்டன் கோஹ்லி, தோனி, அஷ்வின், அஜின்கியா ரகானே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை சம்பளத் தொகை ரூ. 2 கோடி வழங்கப்படும்.

கிரேடு 'ஏ' (ரூ. 2 கோடி): கோஹ்லி, தோனி, அஷ்வின், ரகானே, புஜாரா, ஜடேஜா, முரளி விஜய்.

கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு

கிரேடு 'பி' (ரூ. ஒரு கோடி): ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விரிதிமன் சகா, பும்ரா, யுவராஜ் சிங்.
கிரேடு 'சி' (ரூ. 50 லட்சம்): தவான், அம்பதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, ஆஷிஸ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாகல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷாப் பண்ட்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATARAMANAN - NEW DELHI,இந்தியா
23-மார்-201713:23:54 IST Report Abuse
VENKATARAMANAN விளையாட்டுக்கு பணம் செலவழித்தால்தான் வெற்றி வசப்படும். கிரிக்கெட் வீரர்கள் போல் மற்ற விளயாட்டு வீரர்களும் முயற்சித்தால் அவர்களுக்கும் பணம் கிடைக்கும் . பொறாமை வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
srinivasan - chennai,இந்தியா
23-மார்-201709:57:00 IST Report Abuse
srinivasan இவர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது தேவைதானா...... ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மார்-201708:25:08 IST Report Abuse
Srinivasan Kannaiya பிள்ளைகளுக்கு நெறைய காசு செலவுபண்ணி படிக்க வைத்து வேலை பார்த்து வைப்பதை விட... சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் விட்டுவிட்டால் நெறைய சம்பாரிக்கலாம் போல் உள்ளதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X