இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Updated : மார் 23, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (195)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இரட்டை இலை, முடக்கம்

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இரட்டை இலை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது


ஆலோசனை:

சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார்..
இதையடுத்து நஜிம் ஜைதி இன்று இரவு (மார்ச், 22) 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
23-மார்-201714:30:12 IST Report Abuse
kowsik Rishi தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்புன்னு தெரியாதவங்க தான் இதுக்கு காரணம் பா.ஜ தான்னு சொல்லி அவுங்களோட வக்கிர புத்தியை காட்டிக்கிறாங்க... என்ன சார் தன்னாட்சி எல்லாம் அரசாட்சி சார் நீதிமன்றம் முதல் நம் ஊர் தெருக்கோடி குப்பை தொட்டிவரை தன்னாட்சி என்று தான் சொல்லுவார்கள் எல்லாரும் அரசு கஜானாவில் இருந்து சம்பளம், பஞ்சபடி, பயணப்படி என்று படி படி யாக சுருட்டும் அரசு ஊழியர்கள் தான் ஆகவே தன்னாட்சி எல்லாம் வெறும் பெயருக்கு தான்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
23-மார்-201713:33:09 IST Report Abuse
N.Purushothaman தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்புன்னு தெரியாதவங்க தான் இதுக்கு காரணம் பா.ஜ தான்னு சொல்லி அவுங்களோட வக்கிர புத்தியை காட்டிக்கிறாங்க...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-மார்-201714:50:56 IST Report Abuse
Agni Shivaஆமாம் சகோதரரே. UP மாநிலத்தில் பிஜேபி கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து முலாயம் மகன் அகிலேஷிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. அது தான் பிஜேபி முக்கிய எதிர் கட்சியாக தேர்தல் களத்தில் விளங்கியது. பிஜேபி நினைத்திருந்தால் அந்த சின்னத்தையும் முடக்கியிருக்க முடியுமே. அங்கேயே செய்யாததையா இங்கு செய்யப்போகிறார்கள்? பிஜேபி எதிரிகள் ஏன் இப்படி அறிவீலிகளாக இருக்கிறார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
அமுதவாணன் - chennai,இந்தியா
23-மார்-201713:11:24 IST Report Abuse
அமுதவாணன் 1984 முதல் அமைச்சர்கள் மகாநாடு டெல்லியில் நடந்தது. அப்போது இந்தியாவில் அணைத்து மாநிலங்களும் 10 ஆண்டில் மின் இணையப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். அப்போது MGR சொன்னது தமிழ்நாட்டில் 1972 அணைத்து கிராமமும் மின் இணையப்பு வழங்கபட்டது என்றார். இதுதான் திராவிட கட்சின் பல சாதனைகளில் ஒன்று. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன் உள்ளது.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-மார்-201719:19:45 IST Report Abuse
Agni Shivaகண்ணா. திண்டுக்கல்லில் இன்று வரை மின் இணைப்பு வசதி இல்லாத கிராமங்கள் எத்தனை உள்ளது என்று அங்குள்ள தண்டிக்குடி பகுதியில் சென்று பார். அப்போது "பிரியும்" நீ சொன்னதில் உண்மையை இருக்கிறா என்று? மட்டுமின்றி குஜராத், கேரளா, சிக்கிம், பஞ்சாபி, ஹரியானா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் என 15 மாநிலங்கள் ஏற்கனவே 100 சதவீத மின்வசதி அடைந்த மாநிலங்கள். தமிழகம் 50 வருடம் முன்னே உள்ளது என்றால் ஏன்யா வருடம் இருமுறை " ஐயா காவேரி தண்ணீர்...அம்மோ காவேரி தண்ணீர் ..அய்யய்யோ பெரிய ஆறு தண்ணீர்" என்று வயற்றில் அடித்து கொள்ள வேண்டி இருக்கிறது? ஒன்றும் மட்டும் உண்மை. அதாவது திருட்டு முன்னேற கழகங்கள் 50 வருடங்கள் கழித்து மற்றைய மாநிலங்கள் அடிக்க வேண்டிய கொள்ளையை ஒரே ஒரு கொள்ளையான "2G " யில் அடித்து இப்போதே சாதனை புரிந்ததை உண்மையென்று தான் சொல்லவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X