இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

Updated : மார் 23, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (195)
Advertisement
இரட்டை இலை, முடக்கம்

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இரட்டை இலை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.


ஆலோசனை:

சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார்..
இதையடுத்து நஜிம் ஜைதி இன்று இரவு (மார்ச், 22) 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X