தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விவரம் | தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விவரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விவரம்

Updated : மார் 23, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விவரம்

புதுடில்லி: தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசி, பன்னீர் அணிகள் சின்னம் மட்டுமல்ல அ.தி.மு.க. பெயரையே பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


தேர்தல் ஆணையம் அறிவிப்பு விவரம்:

* கட்சியின் பொதுச்செயலர் சசிகலா நியமன சர்ச்சை நீடிப்பதால், இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணைய அறிவிப்புகள் என்ன?

* இனி சசிகலா, பன்னீர் தரப்பினர் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., என்ற கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது.
* இரு அணிகளுக்கும் நாளை(மார்ச் 23) புதிய சின்னம் ஒதுக்கப்படவுள்ளது. * இரு தரப்பும் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதிலிருந்து ஒரு சின்னம் தேர்வு செய்யப்படும்.* தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்களுடன், காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்தை அணுக இருதரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு.* இரு தரப்பும் நியாயமாக நடந்து கொள்வதற்காகவே இரட்டை இலை சின்னம் முடக்கம்.
* இரட்டை இலை சின்னம் முடக்கம் இடைக்கால உத்தரவு தான்.
* இரட்டை இலை சின்னத்தை மீட்க ஏப்.17-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது


27 ஆண்டுகளுக்கு பின் முடக்கம்

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலை, 27 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்.ஜி.ஆர்., மறைந்த போது அ.தி.மு.க., ஜானகி , ஜெ., அணி என பிரிந்த போது முதன்முறையாக சின்னம் முடக்கப்பட்டது. அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க., சசிகலா, பன்னீர் அணி என இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-மார்-201715:24:11 IST Report Abuse
Pugazh V @கணேஷா சென்னை "அது என்ன திராவிட கட்சி? பொன் ரா கி , தமிழிசை எல்லாம் திராவிடர்கள் இல்லையா? அமெரிக்காவினரா? காமராஜ், கக்கன், ஓமந்தூர் ராமசாமி, அண்ணாதுரை, எம் ஜி ஆர், கலைஞர் வரை எல்லாருமே திராவிடர்கள் தானே? சும்மா சும்மா இந்த பி ஜே பி ஆட்கள் மட்டும் தான் இந்த "திராவிடக் கட்சி" என்கிற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகிறீர்கள். மூப்பனார், வாசன் முதலானோர் திராவிடர் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
23-மார்-201712:13:08 IST Report Abuse
Pasupathi Subbian காவேரில தண்ணி இல்ல, மழை பெய்யவில்லை, இலை காய்ந்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-மார்-201711:46:40 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இனிமேலாவது, பொன்னாசையும் பெண்ணாசையும் மண்ணாசையும் கொண்ட கயவர்களைத் தேர்தலில் நிற்க வைக்காதீர்கள். கட்சியைக் காப்பாற்றுங்கள். உதவியாளராக நியமிக்கப்படுபவரைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X