சசி அணிக்கு தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசி அணிக்கு தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம்

Updated : மார் 23, 2017 | Added : மார் 23, 2017 | கருத்துகள் (153)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சசி, அணிக்கு, தொப்பி , ஓ.பி.எஸ்., அணிக்கு, இரட்டை மின்கம்பம், A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா,

புதுடில்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும், ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. கட்சியின் பெயரையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், புதிய கட்சி மற்றும் சின்னத்தின் பட்டியலை இன்று சமர்ப்பிக்கும்படி இரு தரப்புக்கும் உத்தரவிட்டது. இதனையடுத்து, இரு தரப்பினரும், 3 கட்சி பெயர்கள் , 3 சின்னங்கள் கொண்ட பட்டியலை டில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

சசிகலா தரப்பில், கட்சி பெயராக அதிமுக (அம்மா), எனவும் சின்னமாக கிரிக்கெட் பேட், ஆட்டோ, தொப்பி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு கேட்டது. சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க., என ஓ.பி.எஸ்., அணியும், சசிகலா அணியும் சண்டை போட்டதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.

ஓ.பி.எஸ்., தரப்பு, அதிமுக புரட்சித்தலைவி அம்மா, என்றும், சசிகலா தரப்பு அதிமுக அம்மா எனவும் அழைக்கப்படும்.



Advertisement




வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
24-மார்-201700:46:58 IST Report Abuse
truth tofday A1 குற்றவாளி கட்சி ஓகே அதுயென்ன புரட்சி A1 குற்றவாளி கட்சி ஜெயிலுக்கு போனது ஒரு புரட்சியோ
Rate this:
Share this comment
Cancel
24-மார்-201700:41:00 IST Report Abuse
ராமர் இந்த சின்னத்தை இரட்டை விளக்கு என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
24-மார்-201700:37:01 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA மொத்தத்தில் இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X