கேன்சரை வெல்வேன், மீண்டும் நெல் ஜெயராமனாக களத்தில் வலம்வருவேன்.| Dinamalar

கேன்சரை வெல்வேன், மீண்டும் நெல் ஜெயராமனாக களத்தில் வலம்வருவேன்.

Added : மார் 25, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கேன்சரை வெல்வேன், மீண்டும் நெல் ஜெயராமனாக களத்தில் வலம்வருவேன்.

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையை ஒட்டியுள்ள சிறிய விடுதி ஒன்றில் கேன்சர் நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார் நெல் ஜெயராமன்.

யார் இந்த நெல் ஜெயராமன்

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து 169 அபூர்வ பராம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவரும்,திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நெல் திருவிழா நடத்தி இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்த்தவருமாவார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் 9ம் வகுப்பு வரை படித்தவர்.நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி இயற்கை வேளாண் விஞ்ஞாணி மறைந்த நம்மாழ்வார் நடத்திய ஒரு மாத கால விழிப்புணர்வு பயணத்தில் அவருடன் பங்கேற்று அவரது அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர்.


நம்மாழ்வார் கொடுத்த 7 நெல் ரகங்கள்பயணத்தின் நிறைவாக காட்டுயாணம் உள்ளீட்ட ஏழு பராம்பரிய நெல் ரகங்களை ஜெயராமனிடம் வழங்கிய நம்மாழ்வார் இதை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்று முதல் பராம்பரிய நெல் ரகங்களை தேடி அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தில் ஜெயராமன் ஈடுபட்டார்.இதுவரை 169 வகையான பராம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்.நரசிம்மன் என்பவர் வழங்கிய ஐந்து ஏக்கர் நன்கொடை நிலம் இப்போதும் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாகத் திகழ்கிறது.


பாரம்பரிய நெல் விழாமேலும் கடந்த 2006ம் ஆண்டு முதல், மே மாதம் கடைசி வாரத்தில் பராம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் நடத்திவருகிறார் இதன் காரணமாக இவர் நெல் ஜெயராமன் என்றே அழைக்கப்படுகிறார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த நெல் திருவிழாவில் அகில இந்திய அளவிலான விவசாயிகள் பங்கேற்கிறார்கள்.இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ பராம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. இதை நான்கு கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தரவேண்டும் அது மட்டுமே வேண்டுகோள்.

கடந்த வருடம் 4500 பேர் கலந்து கொண்டனர் அதில் பெரும்பாலோனார் இளைஞர்கள்,வரக்கூடிய வருடத்தில் இன்னும் நிறைய இளைஞர்களை வரவழைத்து அவர்களிடம் இந்த பாராம்பரிய நெல் விஷயத்தை விதைத்துவிட நினைத்து செயல்பட்டுக்கொண்டு இருக்கும் போதுதான் நெல் ஜெயராமனுக்கு அடிவயிற்றில் ஒரு வலி வந்தது.


அபூர்வமான புற்றுநோய்பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு அது மிக அபூர்வமாக வரக்கூடிய melanoma of pennis என்கின்ற புற்று நோய் என்பது தெரியவந்தது.இதற்கான immuno theraphy உடனே எடுக்கவேண்டிய சூழ்நிலை.

நுாறு மில்லி மருந்து கொண்ட பாட்டிலின் விலை சுமராக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒரு அமர்வுக்கு இரு நுாறு மில்லி மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும் பிறகு இதற்கு இணையான விலை கொண்ட மருந்து மாத்திரை மற்றும் மருத்துவ செலவு தங்கும் செலவு என்று சுமார் மூன்று லட்ச ரூபாய் முதல் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகும் இந்த செலவு ஒரு அமர்வுக்கு மட்டுமே இதே போல மொத்தம் எட்டு அமர்வுகள் வரவேண்டும் என்று மருத்துவ அறிக்கை கூறியது.

ஆரம்பகட்ட சோதனைக்கு தேவைப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாயை புரட்டவே கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும் சென்னை வந்த ஜெயராமனுக்கு இந்த மருத்துவ செலவு மிரட்டியது.


அரசு உதவுமாமருத்துவரும், நண்பருமான கு.சிவராமன் உதவியால் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ கேன்சர் மருத்துவமனையில் ஜெயராமன் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் ஜெயராமனைப் பற்றி கேள்விப்பட்டு மருத்துவர்கள் கட்டணம் தங்கும் கட்டணம் வாங்கிக்கொள்வது இல்லை, பொதுமக்கள் அளித்துவரும் நன்கொடையால் இதுவரை மூன்று அமர்வுகளை முடித்து விட்டார். மிச்சமிருக்கும் அமர்வுகளுக்கும் கடவுள் வழிகாட்டுவார் என்று நம்புகிறார்.

இவரது நோய் குறித்தும் தேவைப்படும் பணம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கை தலைமைச் செயலகத்தில் துறை அமைச்சர் கையெழுத்திற்காக காத்திருக்கிறது அந்த தொகை மருத்துவமனைக்கு வந்துவிட்டால் பொதுமக்களிடம் போகவேண்டியிருக்காது என்று சம்சாரிக்கே உண்டான விசனத்தோடு சொன்னவர் மேற்கொண்டு தன் நோய் பற்றி பேச விரும்பாமல் விஷயத்தை பராம்பரிய நெல் பக்கம் திருப்பினார்.


கைகொடுக்கும் பாரம்பரிய நெல்இப்ப நாடே வறட்சியில் இருக்கிறது, காவிரி டெல்டா பகுதியில் சுத்தமா விவசாயம் போச்சு ஆனால் இத்தனை வறட்சியிலும் பராம்பரிய நெல் விதைத்த எங்கள் திருத்துறைப்பூண்டி பகுதியில் நெல் எல்லாம் பிழைச்சுக்குச்சு, அதை இப்ப போனாலும் பார்க்கலாம். காரணம் நம்ம பாராம்பரிய நெல் பஞ்சம் தாங்கும் குறைந்த தண்ணீர் இருந்தாலும் பிழைச்சுக்கும் விவசாய மக்களை கைவிடாது குறிப்பா எந்த விவசாயியையும் சாகவிடாது என்றார்.

நமது மண்ணில் பல ஆண்டுகளாக பாரம்பரிய நெல்தான் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வந்தது.உரக்கம்பெனிக்காரர்களின் சுயலாபம் காரணமாக பாரம்பரிய நெல்லை மறந்தோம் இப்போது மண்ணும் மலடாகிவிட்டது, தீட்டப்பட்டு பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை சாப்பிடும் நாமும் பலவித இன்னலுக்கு உள்ளாகிவருகிறோம்.


மீண்டு வருவேன்நான் நிச்சயம் நல்லாயிருவேன் மீண்டும் பழைய நெல் ஜெயராமனா களத்துல இறங்குவேன் வரக்கூடிய ஜூன் மாதம் 11 வது நெல் திருவிழா நடத்த தயராகிட்டேன், இந்த நெல் திருவிழா விவசாயத்தை விரும்பும் இளைஞர்களின் திருவிழாவாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா? பத்தாம் வகுப்பு வரை படித்த விவசாயிகள் கோவை வேளான் கல்லுாரியில் சேர்ந்து இளநிலை பண்ணைத் தொழில் என்ற பட்டயப்படிப்பை எந்த வயதிலும் படிக்கலாம்,பட்டதாரி ஆகலாம்.இது நம்மாழ்வாரால் நடந்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

எங்கள் அனுபவ அறிவும், கல்லுாரியில் வழங்கப்படும் அறிவியல் அறிவும் இணையும் போது நிச்சயம் இயற்கை வேளாண் விவசாயம் மேம்படும். எனக்கு இது மூன்றாமாண்டு இதுவரை எந்த அரியர்ஸ்ம் இல்லை வருகிற மேமாதம் கடைசி தேர்வு அதற்குதான் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றவர் கையில் கொஞ்சம் கனமான விவசாய புத்தகம்.

ஆகவே நண்பரே என்னைப்பற்றி என் கஷ்டத்தைப்பற்றி எல்லாம் சொல்ல வேண்டாம், இந்த பாரம்பரிய நெல் விவசாயத்தை சிக்கிம்,ஒரிசா உள்ளீட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன நம் தமிழகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும் அவர்கள் கையில்தான் பாரம்பரிய நெல் விவசாயம் இருக்கிறது என்ற செய்தியை விதையுங்கள் அது போதும் என்றவர் பழையபடி விட்ட இடத்தில் இருந்து பாடத்தை படிக்க தொடர்கிறார்.

ஜெயராமனின் உதவியாளர் ராஜூவின் போன் எண்:9952787998.

- எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inAdvertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-ஏப்-201722:40:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //நண்பரே என்னைப்பற்றி என் கஷ்டத்தைப்பற்றி எல்லாம் சொல்ல வேண்டாம் // மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.. நீங்கள் புதுப்பொலிவுடன் வந்து உங்கள் பணியை தொடர அந்த மகாசக்தி அருள்புரியட்டும்.. நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
visweswaran a. subramanyam - Edmonton,கனடா
26-மார்-201715:42:28 IST Report Abuse
visweswaran a. subramanyam எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய சித்த வைத்தியர் கு. சிவராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அனைவரின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்... மேலும், இந்தக் கட்டுரை ஆசிரியர், சகோ. முருகராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும் மற்றும் நல்வாழ்த்துகளும் சகோ. நெல் ஜெயராமன் விரைவில் குணமடைய அருட் பேராற்றலை மனமார வேண்டுகிறோம்....
Rate this:
Share this comment
Cancel
kngopal - chennai,இந்தியா
25-மார்-201722:17:19 IST Report Abuse
kngopal இந்த அரசு இவர்க்கு வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்தால் மிகவும் நன்று
Rate this:
Share this comment
Cancel
vazhipokkan - Muscat,ஓமன்
25-மார்-201717:21:55 IST Report Abuse
vazhipokkan Sir i have spoken to given number. I have contributed some amount and i have refered to few of my friends and let us hope for the Best. I am praying to alimighty to Get Well Soon Sir.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
25-மார்-201715:25:19 IST Report Abuse
muthu Rajendran உயரிய நோக்கத்தை கொண்டு அதற்காக தன வாழ்நாள் முழுவதையும் உழைப்பது ஒரு சிலரால் தான் செய்ய முடியும் அப்படி பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் விதைகளை கண்டறிந்த உழவர் போராளி தான் ஜெயராமன் .அவரின் மருத்துவ செலவினை இந்த செய்தி மூலம் அறிந்து தமிழக அரசு முழுவதுமாக ஏற்கவேண்டும்.அவர் வாழ்ந்தால் இன்னும் பல பாரம்பரிய நெல் விதைகளை இந்த சமூகத்திற்கு தருவார் ஒவ்வொரு தமிழனும் இது குறித்து தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுப்போம் நல்லதே நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
sivakumar - cbe  ( Posted via: Dinamalar Windows App )
25-மார்-201712:45:32 IST Report Abuse
sivakumar இந்த நல்ல மனிதர் நலம் பெற்று மீண்டும் பணியாற்ற இறைவன் அருளட்டும்
Rate this:
Share this comment
Cancel
s.palanisamy - TIRUPUR,இந்தியா
25-மார்-201711:40:38 IST Report Abuse
s.palanisamy இவர்கள் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் கொஞ்சம் மழை பெய்கிறது , நீங்கள் முழு உடல் நலத்துடன் திரும்பி வருவீர்கள், வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை