குடியரசு தின விளையாட்டு மாணவ, மாணவியர் கலக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தின விளையாட்டு மாணவ, மாணவியர் கலக்கல்

Added : ஜன 25, 2011

தாராபுரம் : தாராபுரம் அருகே கோவிந்தாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் தாராபுரம் ஒன்றியத்தை சேர்ந்த 22 நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி, மாணிக்கசுவாமி நாயுடு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.தாராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட 580 மாணவ, மாணவியர், 100மீ., 200மீ., 400மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் பங் கேற்றனர். தாராபுரம் எம்.எல்.ஏ., பிரபாவதி, போட்டியை துவக்கி வைத் தார். மாணிக்கசுவாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, பள்ளி முதல் வர் கணபதி ஆகியோர் தேசிய, விளையாட்டு கொடிகளை ஏற்றினர். ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.அதன் விபரம்:ஆறாம் வகுப்பு மாணவர் 200மீ., ஓட் டத்தில், சிக்கனாபுரம் பள்ளி ஜீவா முதலிடம், சித்ரபுத்தன் பாளையம் பள்ளி கார்த்திகேயன் இரண்டாமிடம், ஏழாம் வகுப்பு பிரிவில் சித்ரபுத்தன் பாளையம் பள்ளி சரவணகுமார் முதலிடம், ஓ.பி.எஸ்., பள்ளி ஷேக்ஆசிக் இரண்டாமிடம். எட்டாம் வகுப்பு பிரிவில் சிக்கனாபுரம் பள்ளி கார்த் திகேயன் முதலிடம், காளிங்கபாளையம் பள்ளி அஜித்ராஜா இரண்டாமிடம் பெற்றனர்.ஆறாம் வகுப்பு மாணவியர் 100மீ.,ஓட்டத்தில் ஓ.பி.எஸ்., பள்ளி ஜமீனாபானு முதலிடம், அலோசியஸ் பள்ளி தங்கமணி இரண்டாமிடம், ஏழாம் வகுப்பு பிரிவு சிக்கனாபுரம் மாலதி முதலிடம், கொலுஞ்சிவாடி பள்ளி வினோதினி இரண்டாமிடம் பெற்றனர்.ஆறாம் வகுப்பு மாணவருக்கான 400மீ., ஓட்டத்தில் காங்கயம்பாளையம் பள்ளி அரிபிரசாத் முதலிடம், செயின்ட் அந் தோணி பள்ளி உதயகுமார் இரண்டாமி டம். ஏழாம் வகுப்பு கோவிந்தாபுரம் பள்ளி கருப்புசாமி முதலிடம், குமாரபாளையம் பள்ளி மகேஷ்குமார் இரண்டாமிடம், எட்டாம் வகுப்பு பிரிவு செயின்ட் அந்தோணி பள்ளி ரஞ்சித்குமார் முதலிடம், காங்கயம்பாளையம் பள்ளி ராமசாமி இரண்டாமிடம் பெற்றனர். மாணிக்கசுவாமி பள்ளி உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், போட்டியை நடத்தினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X