பணம் சம்பாதிப்பதற்காக நடிக்க வரவில்லை - சொல்கிறார் 'செவ்வாழை' ராசு| Dinamalar

பணம் சம்பாதிப்பதற்காக நடிக்க வரவில்லை - சொல்கிறார் 'செவ்வாழை' ராசு

Added : மார் 26, 2017
Advertisement
பணம் சம்பாதிப்பதற்காக நடிக்க வரவில்லை - சொல்கிறார் 'செவ்வாழை' ராசு

தேனியை சேர்ந்த காமெடி நடிகர் செவ்வாழை ராசு, 62. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கு சீமையிலேயே' மூலம் அறிமுகமானார். அடுத்ததாக கஸ்துாரிராஜா இயக்கத்தில் 'தாய்மனசு' படத்தில் நடித்தார். இவர்கள் இருவரது இயக்கத்திலும், 7 ஆண்டுகளில் 21 படங்கள் வரை நடித்துள்ளார்.அவர் கூறுகையில்,“ எனக்கு பெற்றோர் வைத்த பெயர் ராசு. குழந்தையாக இருந்தபோது சிவப்பாக இருந்ததால், என்னை 'செவ்வாழை' என அடைமொழிவைத்து அழைத்தனர். பின்னர் பெயரே 'செவ்வாழை ராசு' என மாறியது.'பருத்தி வீரன்' எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. மைனா, கந்தசாமி, வேலாயுதம், பெரியமனுஷன், உளவுத்துறை, கருத்தம்மா, மலைக்கோட்டை, வல்லமை தாராயோ என 140க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளேன். விஜயுடன் நடித்த வேலாயுதம் எனக்கு 100வது படம். பெயர் வைக்கப்படாத 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 'ஷூட்டிங்' நடந்து வருகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிக்க வரவில்லை. பொழுதுபோக்காகத்தான் நடிக்கிறேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் எதிர்மறையான 'கேரக்டர்' ரில் நடிக்க மாட்டேன். கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்படி வந்த பல வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளேன்,”என்றார்.இவருடன் பேச 98425 66038

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X