ஏழைகளுக்கும் மாண்டிசோரி| Dinamalar

ஏழைகளுக்கும் மாண்டிசோரி

Updated : மார் 29, 2017 | Added : மார் 29, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement


ஏழைகளுக்கும் மாண்டிசோரி

-எல்.முருகராஜ்.
நமது கல்விமுறையை வடிவமைத்த மெக்காலே தான் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியர்களுக்கான தண்டனைச் சட்டங்களையும் வகுத்தளித்தார்.

அவரை பொருத்த வரை உடலை அடைத்து வைக்க சிறைச்சாலை, மனதை அடைத்து வைக்க கல்விக் கூடம். வேதனையான விசயம் என்னவென்றால் நாம் இன்னும் மெக்காலே வகுத்தளித்த கல்விமுறையைத்தான் சிறு சிறு திருத்தங்களோடு பின்பற்றிக் கொண்டு வருகிறோம்.
தற்போதைய சமச்சீர் கல்வி இதிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் இன்னமும் தேர்வு , மனப்பாடம், மதிப்பெண் என்று மெக்காலே கல்விக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது.

டாக்டர்.மரியா மாண்டிசோரி, இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. இவர் கண்டுபிடித்த முறையே மாண்டிசோரி கல்விமுறை.
மெக்காலே கல்விமுறை போல் இது கிடையாது,மாறாக குழந்தைகளை உள்வாங்கிக் கொள்ளும் திறன் உடையவர்களாய், புதியதொரு முடிவுக்கு தாமாகவே செல்லும் திறன் படைத்தவர்களாய் பார்க்கிறது.

கல்வியை ஒரு விளையாட்டு போலவே இம்முறை போதிக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் அற்ற ஒரு வகுப்பறையை உருவாக்குகிறது. நோட்டு புத்தகங்களுக்குப் பதில் பொம்மைகளைக் கையில் கொடுக்கிறது. செயல் வழிக் கல்வி என்று அழைக்கப்படும் இம்முறை, எழுதக் கற்றுக் கொடுக்கும் முன் அந்த எழுத்தை உணரக் கற்றுக் கொடுக்கிறது.
குழந்தைகள் தங்களது வீட்டில் தினமும் பார்க்கும் தண்ணீர் ஊற்றுதல், சப்பாத்தி மாவு பிணைதல் , உருட்டுதல், காய்கறி வெட்டுதல் மற்றும் பொருட்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பல செயல்களை உள்ளடக்கியது.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகக் குழந்தைகளை மாற்றுவதற்குப் பதிலாக, சிறகை விரித்து உலகின் ஆச்சரியங்களை அனுபவிக்க அவர்களுக்கு உதவிக்கொண்டிருப்பதே மாண்டிசோரி கல்வியாகும்.
புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய், குழந்தை எழுத்தாளர் ஆன் ஃபிராங்க், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்குவெஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜெய் பிரின் உள்ளிட்டோர் மாண்டிசோரி முறையில் கற்றவர்கள்தான். இவர்கள் மட்டுமில்லை, லட்சக்கணக்கான குழந்தைகள் மாண்டிசோரி முறையில் கல்வி கற்கிறார்கள்.

அமெரிக்கா உள்ளீட்ட பல்வேறு நாடுகளில் மாண்டிசோரி கல்வியே அடிப்படைக் கல்வியாக போதிக்கப்படுகிறது.இந்தியாவில் பல தனியார் பள்ளிகளில் இந்த கல்வி முறை தரப்படுகிறது. ஆரம்ப கல்வியை இந்த முறையில் கற்றுவிட்டால் பிறகு அந்த குழந்தை எந்த பாடத்தையும் எளிதில் படித்துவிடும்.ஆனால் இந்த மாண்டிசோரி கல்விக்கான சாதனங்கள் விலை அதிகமானவை ஆகவே தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே மட்டுமே இது சாத்தியமானது.
சேவாலாயா நிறுவனரும் தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருது பெற்றவருமான முரளிதரன் ,பணக்காரர்களுக்கான இந்த மாண்டிசோரி கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கு தமிழில் இலவசமாக வழங்க முடிவெடுத்து வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறார்.

இந்த இடத்தில் சேவாலாயா பற்றி சில வரிகள்
சென்னைக்கு மேற்கில் திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் கிராமத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இயங்கிவருகிறது சேவாலாயா தொண்டு நிறுவனம்.

இந்த பகுதியில் உள்ள நாற்பது கிராமங்களில் படிக்க வசதி இல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக இருந்தவர்களை மாற்றி அவர்களை படிக்கவைப்பதையே பிரதான நோக்கமாக கொண்டு துவங்கப்பட்டதே சேவாலாயா நிறுவனம்.
இந்த நோக்கத்தை ஆரம்பித்த சில வருடங்களிலேயே சாத்தியமாக்கியதை அடுத்து முதியோர் இல்லம், இயற்கை வேளாண் மையம் ,கறவை நின்று போன மாடுகளுக்கான புகழிடமான கோசாலை,கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் கம்யூனிட்டி கல்லுாரி,நடமாடும் நுாலகம் என்று பலதளங்களில் செயல்பட்டு வருகிறது.

இங்கு படித்த மாணவ மாணவியர் இன்று பல்வேறு இடங்களில் நல்ல வேலையில் இருந்துவருகின்றனர் என்பது சேவாலாயாவிற்கான பெருமை.முழுக்க முழுக்க நன்கொடையாளர்களின் நன்கொடையால் இயங்கிவரும் இந்த சேவாலாயாவின் கூடுதல் சேவைதான் இந்த தமிழ் மாண்டிசோரி பள்ளி.
இந்த மாண்டிசோரி பள்ளி குழந்தைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி சமீபத்தில் நடந்தது விருந்தினர்களும் பெற்றோர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டு பிரமித்து போய் பாராட்டினர்.

நீங்களும் பாராட்ட நினைத்தால் வி.முரளிதரனை தொடர்பு கொள்ளவும் எண்:9444167625.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
12-ஏப்-201706:15:57 IST Report Abuse
K,kittu.MA. நான் பாண்டிச்சேரி ல கதர் இயக்குனராக இருந்த 2000 ல் .ஒரு ரூபா வுக்கு ஒரு இடட்லி 5 ரூபா வுக்கு சாப்பாடு திட்டம் துவக்க பட்டது... அது எள் மாணவருக்கும் தொழிலாளரும்க்கும் பயன் பட்டது..ஜிப்மர் ல் நோயாளிகள் பயன் பெற்றார்கள்...அவர்களை சுரண்டிய ஓட்டல் காரர்களை.மிரளவைத்த திட்டம்..அம்மா உணவகமாக தமிழ்நாட்டில் வந்தது இப்போ தள்ளாடுது..
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
30-மார்-201706:17:05 IST Report Abuse
Rangiem N Annamalai வாழ்த்துக்கள் அய்யா .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
30-மார்-201703:25:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தேவையற்ற சேவை.. பணக்காரனும் அரசு பள்ளியில் படிக்குமளவுக்கு பள்ளியின் தரத்தை மாற்றப்பாருங்கள். அது தான் நல்ல சேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை