முதல் பெண் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தனுஸ்ரீ பரீக்.| Dinamalar

முதல் பெண் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தனுஸ்ரீ பரீக்.

Updated : மார் 30, 2017 | Added : மார் 30, 2017 | கருத்துகள் (7)
Advertisement

நமது நாட்டின் முதல் பெண் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தனுஸ்ரீ பரீக்.1br@மத்திய பிரதேச மாநிலம் தேக்கன்பூரில் உள்ள பிஎஸ்எப் அகடமியில் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா.

பட்டயம் பெற்ற 67 அதிகாரிகளில் ஒரே ஓருவர் மட்டும் பெண்.51 வருட இந்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் முதன் முதலாக களத்தில் இறங்கும் காமாண்டோ படை பிரிவின்
அதிகாரி அவர்.பெயர் தனுஸ்ரீ பரீத்(25).

நீர் நிலம் வான் வழியான தாக்குதலில் இருந்து நம்மை இருபத்து நான்கு மணிநேரமும் பாதுகாப்பவர்களே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்.நாட்டில் 76 எல்லை பாதுகாப்பு முகாம்களில் 73 இடங்களில் களத்தில் நேரடியாக நிற்பவர்களும் இவர்களே.

1965ம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் பிஎஸ்எப் பிரிவில் இப்போது இரண்டரை லட்சம் பேர் நமக்காக எல்லையை பாதுகாக்கும் புனித பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் பெண்கள் இருந்தாலும் அலுவலகப்பணி மற்றும் உதவியாளர் பணிகளில்தான் அவர்கள் இருக்கின்றனர்.

துப்பாக்கியைத் துாக்கிக் கொண்டு களத்தில் இறங்குவதுடன், தனது படையினரை ஆணையிட்டு வழிநடத்தும் செல்லும் அதிரடி அதிகாரியாக இதுவரை எந்த பெண்ணும் இருந்தது இல்லை.இந்த பெருமையை முதன் முறையாக இப்போது பெற்று இருப்பவர்தான் தனுஸ்ரீ பரீக்.

ராஜஸ்தான் மாநில் பிகானிரை சேர்ந்தவரான தனுஸ்ரீ 2014ம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் 52 வாரங்களாக வழங்கப்பட்ட கடுமையான பயிற்சி மற்றும் சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கான முதல் போஸ்டிங்கே பஞ்சாபில் உள்ள இந்திய-பாக் எல்லைப்பகுதிதான்.

ஒரு புன்னகையுடன் களம் இறங்கப் போகும் வீராங்கனை தனுஸ்ரீக்கான பட்டயத்தை தோளில் அணிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'உனது தோளில் நீ சுமந்து கொண்டிருப்பது எல்லை பாதுகாப்பு படை பிரிவின் பெருமையை மட்டுமல்ல, பெண்ணினத்தை பெருமையும் சேர்த்துதான்' என்றார்.

அதை மெய்யென்று நிருபிக்கும் வகையில் விழா முடிந்ததும் கூடியிருந்த தனுஸ்ரீயில் தோழியர் பட்டாளம் அவர் திணரத்திணர மாலைகள் அணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
harshinikavya - madurai,இந்தியா
01-மே-201711:23:41 IST Report Abuse
harshinikavya வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
11-ஏப்-201702:15:25 IST Report Abuse
mpvijaykhanna god bless u sis
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
10-ஏப்-201714:59:55 IST Report Abuse
Raja வீராங்கனை தனுஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arokiaraj - Trichy,இந்தியா
07-ஏப்-201711:27:47 IST Report Abuse
Arokiaraj வாழ்த்துகள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01-ஏப்-201706:30:11 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்தம்மா இப்பத்தான் எதோ பயிற்சி பாஸ் செஞ்சு வந்திருக்காக. அதுக்கே இம்புட்டு ஆர்ப்பாட்டம்.
Rate this:
Share this comment
Sathiskumar - Boston,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201706:41:23 IST Report Abuse
Sathiskumarஅந்த பயிற்சி மிகவும் கடினம்.இதை கொண்டாடுவதில் தவறு ஏதும் இல்லை. This is called Psychology....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
31-மார்-201711:31:05 IST Report Abuse
Rajendra Bupathi வாழ்த்துகள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை