இசைக்கவி ரமணனின் ராஜாங்கத்தில்...| Dinamalar

இசைக்கவி ரமணனின் ராஜாங்கத்தில்...

Updated : மார் 31, 2017 | Added : மார் 31, 2017 | கருத்துகள் (1)
Advertisement

இசைக்கவி ரமணனின் ராஜாங்கத்தில்...

இசைக்கவி ரமணன்


சென்னையில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அரங்குகளில் இவரது சொற்பொழிவுகள் வாரந்தோறும் நடந்தவண்ணம் இருக்கிறது.
அவர் தன் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் கவிதை கேளுங்கள் என்ற தலைப்பில் வித்தியாசமாக ஒரு நிகழ்வை நடத்தினார்.

அவருக்கு மிக நெருங்கிய நண்பரும் பேச்சாளருமான சுகி.சிவம்,கிருஷ்மா ஸ்வீட்ஸ் முரளி,நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளீட்டோர் கலந்து கொண்ட அற்புதமான விழா அது.

ரமணின் ராஜாங்கம் என்றும் அந்த நிகழ்வினை சொல்லலாம்.நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்கையை, கவிதையை அனு அனுவாக ரசித்து வாழ்ந்த நங்கநல்லார் நண்பர்களின் கவிதைக் கச்சேரி என்றும் சொல்லலாம்.


அப்போது நடந்த சம்பவத்தையும் கவிதை பிறந்த சூழ்நிலையையும் சொல்லி தங்கு தடையின்றி அவர் கவிதையில் பொங்கியதை பார்த்து அரங்கம் அடிக்கொருதரம் கைதட்டிக்கொண்டே இருந்தது.

இப்படி எப்போதும் கவிதை பாடிக்கொண்டே இருக்கிறீர்களே கொஞ்ச நாள் நிறுத்தி ஒரு சிறு ஒய்வு கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் கவிதை படிக்கலாமே என ஒரு நண்பர் சொன்னதுதான் தாமதம் அக்னிக்குஞ்சாக மாறி ஒரு ஆவேச கவிதையை படித்தீர்களே!அதை இப்போது சொல்ல முடியுமா? என்று கேட்டதும் ஒ..முடியுமே என்று சொல்லிவிட்டு இருக்கையைவிட்டு எழுந்தவர் கண்கள் சிவக்க, வார்த்தையில் கனல் தெரிக்க, அவயங்கள் யாவும் ஆவேத்தில் களிநடனமாட அவர் அந்த கவிதையை சொல்லிமுடித்தபோது அரங்கம் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்தது.

இதோ அந்த கவிதை

நிறுத்தவா வெள்ளம்?
நினைக்கவா கொள்கை?
அலுக்குமா வார்த்தை?
அடங்குமா வேட்கை?

களைத்தே மனத்தே கவித்தேர்
நினைத்தால் கற்பனைக் கை
விட்டுப் போமோ?பகல்
இளைத்தே கழன்றேகு
முன்னமொரு கைபார்த்
திழுத்துநிலை
சேர்க்கவேண்டாமோ!

நினைத்தால் புயல்கள்
நிமர்ந்தால் புனல்கள்
நெருப்புக் கலங்காரம் செய்து
புவி தனைத்தேன் வனத்தே
நனைத்தேன் எனக்கொரு
தள்ளாட்டம் வந்தடப் போகுமோ?

நெஞ்சென்ன பேச்சாளானா
நான் நிறுத்த?நினைவென்ன
பாதாளமா நான் மருள
கெஞ்சும் வசந்தம்
கிரணங்களில் சாந்தம்
கிண்டலா நான் நிறுத்த ?

கால்நனைக்கும் கடல்தானே
எனத்துணிந் தக்கரைக்கே நடப்பாரோ?
பால்நனைக்கும் மலர்
பவளவாய் மூடினால்
பாடிய கதை முடிப்பாரோ?

யாரை நினைத்தங்கு
தாண்டவம் செய்தனன்
யமனைச் சினந்த ஈசன்?அட
கார்முகிற் கெதுநாடு?
கவிஞனுக் கெது கோடு?
காலமே தாளம் போடு!

உண்மையிலேயே உச்சி மீது வைத்து மெச்சக்தக்க கவிஞர்தான் ரமணன்...அவரிடம் பேச பாராட்ட தொடர்பு எண்:9940533603.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
01-ஏப்-201711:10:57 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வெல்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை