Give Us EVM, Will Prove Tampering, Says Arvind Kejriwal: | ஓட்டுப்பதிவு இயந்திரத்தை என்னிடம் கொடுங்க,முறைகேட்டை நிரூபிக்கிறேன்: கெஜ்ரிவால் சவால்| Dinamalar

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை என்னிடம் கொடுங்க,முறைகேட்டை நிரூபிக்கிறேன்: கெஜ்ரிவால் சவால்

Added : ஏப் 03, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஓட்டுப்பதிவு, இயந்திரம் ,கொடுங்க, முறைகேடு, நிரூபிப்பு, கெஜ்ரிவால், சவால்

புதுடில்லி: ஓட்டுப்பதிவு இயந்திரத்தை என்னிடம் கொடுங்கள் , அதில் முறைகேடு நடந்துள்ளதை நான் நிரூபிக்கிறேன் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ. சாதனை வெற்றி பெற்றது. இதில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததால் தான் பா.ஜ. வெற்றி பெற்றது. எனவே ஓட்டுசீட்டு முறையை கொண்டு வந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.


மத்தியப்பிரதேச இடைத்தேர்தலுக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரத்தை தேர்தல் அதிகாரிகள் பரிசோதித்தனர்.

திட்டவட்ட மறுப்பு



இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இரு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்காக உ.பி.யில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை . தேர்தல் அதிகாரிகள் , யாருக்கு ஓட்டளித்தோம் என ரசீது பெறும் செயல்முறை செய்து காட்டியபோது அதில் பா.ஜ. சின்னத்திற்கு ஆதரவாக, பதிவானதாக புகார் எழுந்தது. இதன் மூலம் ஒட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுந்துள்ளது.

இந்நிலையில் கெஜ்ரிவால் கூறியதாவது:


ஓட்டுச்சீட்டு முறை வேண்டும்



இயந்திர ஓட்டுப்பதிவு இயந்திரத்தை என்னிடம் கொடுங்கள் அதில் முறைகேடு நடந்திருப்பதை நான் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். அப்படி கொடுக்க தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் துணிவு உண்டா. ஏற்கனவே நான் கூறியது போன்று உ.பி. தேர்தலில் உபயோகித்த இயந்திரத்தை தான் ம.பி. இடைத்தேர்தலிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே இயந்திரத்தை வரப்போகும் டில்லி உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே ஒட்டுப்பதிவு இயந்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு பழைய முறையான ஓட்டுச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
04-ஏப்-201710:19:48 IST Report Abuse
Power Punch அவர் சொல்வது முற்றிலும் சரி.. எதற்கு நேற்று தேர்தல் ஆணையம் தில்லு முல்லு செய்ய முடியாத எந்திரம் வாங்க போவதாக சித்தி தந்தார்கள் ?? அப்போ முன்னடி எண்தோரத்தில் தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று தானே பொருள்.. இந்த விஷயம் நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் .. .அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் சரியான நபர்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-ஏப்-201708:44:18 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ உங்களுக்கு அந்த இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்ய தெரியும்...
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
04-ஏப்-201709:29:10 IST Report Abuse
JOYதிருத்தம், அதனை நிரூபிக்க தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Subhash.U - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201708:37:01 IST Report Abuse
Subhash.U He is one of the worst CM in our country. Yesterday times now debate confirmed that he is default CM... Look for state development and look to pay Delhi corporation payment for cleaning employees but he is interested to loot tax payers money for publicity of his photo Advertisement & defamation cases crores of money spent? How the state will develop always put blames on others? Now blames EVM Machine how he was won in Delhi election and How congress won in Punjab? He wants our India to go back of Old 19th century style not to develop but our PM Modi Ji looks fast development thinking of of 21st century.. People are watching, now he is afraid of Delhi Municipality poll to Win? because he lost in Punjab many votes share and GOA Full sweep of lost.... Next election Delhi people to vote BJP For fast development. Always vote for good people..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X