இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஏப் 04, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இதே நாளில் அன்று

1908 ஏப்ரல் 5

ஜெகஜீவன்ராம், பீஹார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில், சோபிராம் - வசந்திதேவி தம்பதிக்கு மகனாக, ௧௯௦௮, ஏப்.,௫ல் பிறந்தார். அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், 1931ல் காங்கிரசில் இணைந்தார்.
காந்தியடிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறை சென்றவர், 1936 முதல் 1986 வரை, 50 ஆண்டுகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக இருந்தவர்.மத்திய அரசில், பல்வேறு துறைகளில், கேபினட் அமைச்சராகவும் பணியாற்றியவர். பீஹார் மாநிலம், சசாராம் லோக்சபா தொகுதியில், 1952 முதல், 1984 வரை, எட்டு முறை தொடர்ந்து வெற்றிபெற்று சாதனை படைத்தவர். மத்திய அரசில், 1977 - 1979 வரை, பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், துணைப் பிரதமராக இருந்தார். இவரது மகள் மீராகுமார், லோக்சபா சபாநாயகராக பணியாற்றியவர். ஜெகஜீவன்ராம், ௧௯௮௬, ஜூலை ௬ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X