பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்க பரிசீலனை: ஏற்ற, இறக்கத்தை சமூக வலைதளத்தில் அறிய வாய்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பரிசீலனை !
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்க...
ஏற்ற, இறக்கத்தை சமூக வலைதளத்தில் அறிய வாய்ப்பு

புதுடில்லி:பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றுவது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இதனால், அரசியல் காரணிகளால், இவற்றின் விலையில் பாதிப்பு இருக்காது. விலை ஏற்ற, இறக்கத்தை, சமூக வலைதளங்களில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விலை,  தினம் ,மாற்றி, பரிசீலனை, பெட்ரோல், டீசல்


சர்வதேச சந்தைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், விலைளை, இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், பெட்ரோல், டீசல், விலையை குறைத்தும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், எண்ணெய்
நிறுவனங்கள் அறிவிக்கின்றன.பெட்ரோல், டீசல், விலை உயர்வு, நாட்டில் அரசியல் பிரச்னையாக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவோ, குறைக்கவோ முடியவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்கள், பெரும் இழப்பை சந்திக்கின்றன.
அதனால், தங்கம், வெள்ளி போல், பெட்ரோல், டீசல் விலையையும் தினமும் மாற்றியமைக்க, எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
இது குறித்து, எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, பெட்ரோல், டீசல் விலையில் தேவைப்பட்டால் மாற்றம் செய்து வருகிறோம். விலையை உயர்த்தினால், கடும் எதிர்ப்பு எழுகிறது. பல நாடுகளில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படுகிறது. அதேபோல்,

இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.
இது தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை, கடந்த, 5ம் தேதி
சந்தித்து ஆலோசித்தனர்.

இப்போது, இதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. அதனால், பெட்ரோல், டீசல் விலையை தினமும்மாற்றியமைப்பதில் பிரச்னை இருக்காது. மேலும், தினமும், மாற்றியமைக்கும் போது, விலை உயர்வும், குறைவும், ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கும்.
இது மக்களுக்கு ஒரு பிரச்னையாக தெரிய வாய்ப்பில்லை. அதனால், விலை உயர்வு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், அன்றாட விலை மாற்றத்தை, சமூக வலைதளங்கள் மூலம், மக்கள் உடனடியாக அறிந்து கொள்ளவும் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

பங்கு விலை உயர்வு



சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்க, உள்நாட்டு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, நேற்று, இந்திய பங்கு சந்தைகளில், எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை விறுவிறுவென அதிகரித்தது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளை, பலரும் போட்டி போட்டு வாங்கியதால், அவற்றின் விலை, கிடுகிடுவென உயர்ந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என, பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

அரசியல் காரணிகள் பாதிக்காது
'பெட்ரோல், டீசல் விலை, தினசரி மாற்றியமைக்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டால்,

Advertisement

அரசியல் காரணிகளால், அதன் விலை நிலவரம் மாற்றியமைக்கப்படுவது பாதிக்காது' என, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் படி, பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் போது, அரசியல் காரணிகளாலோ, வேறு சில காரணிகளாலோ, அதன் விலை நிர்ணயத்தில் பாதிப்பு ஏற்படாது. உதாரணமாக, சில மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அல்லது லோக்சபா தேர்தல் காலங்களில், மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகாமல் இருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுவதில் தாமதம் ஏற்படும்.
தேர்தல் முடியும் வரை, விலையை மாற்றியமைக்க முடியாத சூழல் உருவாவதால், காலதாமதமாக நிர்ணயிக்கப்படும் விலை, சற்று கூடுதலாகவே இருக்கும். இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தினசரி விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், அரசியல் காரணிகள் மட்டுமின்றி வேறு எந்த காரணிகளாலும், இதில் தடங்கலோ, தாமதமோ ஏற்படாது.
தவிர, ஒவ்வொரு நாளும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுவதால், தினமும் ஒரு சில பைசா மட்டுமே உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும். இதனால்,
அதன் விலையில் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Rajan - bangalore,இந்தியா
08-ஏப்-201719:07:50 IST Report Abuse

Rajesh Rajanபெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றுவது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன - அப்படியே பெட்ரோல் பங்க்குகளும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்குமே..........

Rate this:
venkatesan - chennai,இந்தியா
08-ஏப்-201717:46:42 IST Report Abuse

venkatesanபொது மக்களே அவரவர் தேவைக்கு பெட்ரோல் இறக்குமதி செய்ய அனுமதித்தால் வேறு நாடுகளில் இருந்து மலிவான இறக்குமதி செய்ய ஏதுவாக இருக்கும்

Rate this:
mthahir - Kuwait,குவைத்
08-ஏப்-201716:55:35 IST Report Abuse

mthahirமுன்பு 140 USD கச்சா ஆயில் விலைஇல் பெட்ரோல் ரூ 75 . தற்போது 48 USD கச்சா ஆயில் விலைஇல் பெட்ரோல் ரூ 75 . எப்படி சமம்? இனிமேல் 50 பை அல்லது ரூ 1 ஏறும் அல்லது குறையும். இனிமேல் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருபோதும் நஷ்டம் வராது. மக்கள் எல்லோரும் மாக்களாக இருக்கும்வரை இதுபோல் நிறைய எதிர்பார்க்கலாம்.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X