கடுப்பில் மோடி| Dinamalar

கடுப்பில் மோடி

Updated : ஏப் 11, 2017 | Added : ஏப் 08, 2017 | கருத்துகள் (5)
Advertisement
மோடி, தருண் விஜய், ஆர்கே நகர், பா.ஜ., ஜெட்லி, அத்வானி

என்ன தான் நல்ல விஷயங்களை, பிரதமர் மோடி செய்து வந்தாலும், கட்சி யினர் வாய்க்கு வந்தபடி உளறி, பிரச்னையை கொண்டு வந்துவிடுகின்றனர்.முன்னாள், எம்.பி., தருண் விஜய், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் சிலை நிறுவுவது என பேசிக் கொண்டிருந்தார். திடீரென, 'தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கறுப்பர்கள்' என, 'டிவி' பேட்டியில் கூறி, சிக்கலில் மாட்டியுள்ளார்.டில்லியில், வெளிநாட்டைச் சேர்ந்த கறுப்பர் இனத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த தருண் விஜய், 'தென் மாநிலங்களில் வசிப்பவர்களும் கறுப்பாகத்தான் இருக்கின்றனர்; அவர்களுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த நாங்கள் ஒன்றாக வாழவில்லையா' என, பேசியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரிதாகிவிட்டது. இதற்கு, தருண் விஜய் மன்னிப்பு கேட்டாலும் விவகாரம் முடிகிற மாதிரி தெரியவில்லை.மீனவர்கள் பிரச்னை, ஜல்லிக்கட்டு என, தமிழக பிரச்னைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடி தனி கவனம் செலுத்திவருகிறார்.இந்நிலையில், தருண் விஜயின் பேட்டி, தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'பிரச்னைக்குரிய விஷயங்களை பேச வேண்டாம் என, பல முறை கூறியும், பா.ஜ.,வினர் அதை கேட்பதில்லை; தங்கள் இஷ்டப்படி பேசி வருகின்றனர்' என கோபப்பட்டாராம்.'ஒரு பக்கம், நான் நல்லது செய்து வருகிறேன்; மற்றொரு பக்கம், சில, பா.ஜ., தலைவர்கள், இந்த விவகாரத்தை, தங்கள் வாயால் கெடுத்து விடுகின்றனர்' என, அமித் ஷாவிடம் கூறிய மோடி, தருண் விஜயை அழைத்து, 'டோஸ்' விட்டாராம்.அமித் ஷாவும், தன் பங்கிற்கு, தருண் விஜயை எச்சரித்து உள்ளாராம்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து?

தமிழகம் முழுவதும் பரபரப்போடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதைத் தான். ஒரு பக்கம், ஜெயலலிதாவின் சவப்பெட்டியுடன் பிரசாரம்; மற்றொரு பக்கம், வாக்காளர்களுக்கு பணத்தை வீசி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில் வருமான வரித்துறை புகுந்துள்ளது.அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் என, சசிகலாஅணியினர் வீடுகளில் அதிரடிச் சோதனை நடந்துள்ளது.இந்த சோதனையில், இடைத்தேர்தலுக்கு யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் கிடைத்துள்ளதாம். இந்த விபரங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.தினகரன் தரப்பிலிருந்து எப்படி வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டுள்ளது என, அந்த ரகசிய அறிக்கையில் விபரமாக சொல்லப்பட்டுள்ளதாம். எந்தெந்த வார்டுகளுக்கு, யார் மூலமாக பணம் தரப்பட்டது என, வருமான வரித்துறை அறிக்கை சொல்கிறதாம்.பணம் பட்டுவாடா புகார்கள் தேர்தல் கமிஷனில் குவிந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் ரகசிய அறிக்கை, தேர்தல் கமிஷனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகள் மாற்றம், சிறப்பு அதிகாரி நியமனம் என பல முன்னேற்பாடுகளைச் செய்தும், பண வினியோகத்தைத் தடுக்க முடிய வில்லையே என கடுப்பில் உள்ளனர், தேர்தல் கமிஷன்அதிகாரிகள்.ஏற்கனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் இதே பண விவகாரம் தொடர்பாக தேர்தலை ரத்து செய்து, சிறிது இடைவெளிக்கு பின், தேர்தல் நடத்தப்பட்டது. ஆர்.கே.நகரிலும், இதேபோல் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


பா.ஜ., தலைவரால் பிரச்னை!

கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தோல்வியடைந்த போது கட்சியின் முக்கிய பிரமுகர் செய்த ஒரு காரியம் இப்போது, கட்சியை பிரச்னையில் சிக்க வைத்துள்ளது.'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுவதில்லை; பா.ஜ.,விற்கு சாதகமாக செயல்படுகின்றன' என, மாயாவதி குற்றம் சாட்டினார்.இவரைத் தொடர்ந்து கெஜ்ரிவாலும், 'இந்த இயந்திரங்கள் சரியாக செயல்பட்டிருந்தால், பஞ்சாப்சட்டசபை தேர்தலில், நாங்கள் தான் ஆட்சி அமைத்திருப்போம்' என்கிறார்.'தோல்வி விரக்தியில் எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன' என்கிறது, பா.ஜ., மேலிடம். ஆனால், தேர்தல் கமிஷனோ, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை' என, உறுதியாகக் கூறுகிறது.காங்கிரஸ்காரர்கள், 'கடந்த, 2009ல், இந்த இயந்திரம் சரியில்லை என, பா.ஜ., சார்பில் ஒரு புத்தகமே வெளியிடப்பட்டது' என கூறி, அந்த கட்சிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து கொண்டு வந்ததுடன், 'பா.ஜ.,வுக்கு இரட்டை நாக்கு' என்றும் விமர்சிக்கின்றனர். கடந்த, 2009 தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறும் என, அனைவரும் நினைக்க, தோல்வியடைந்தது. கட்சியின் செய்தி தொடர்பாளர், ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், அத்வானியைச் சந்தித்து, 'தோல்விக்கு காரணம், ஓட்டுப்பதிவு இயந்திரம் தான்; இதைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிடுகிறேன்' என்றார்.பிரதமர் கனவு கலைந்த வருத்தத்தில் இருந்த அத்வானியும், அதற்கு அனுமதி அளித்தார். அருண் ஜெட்லி போன்ற தலைவர்கள், 'இதெல்லாம் தேவையில்லாத விஷயம்; இயந்திரத்தின் மீது சந்தேகப்படுவது பைத்தியக்காரத்தனம்' என, கடுமையாகப் பேசி, கட்சி சார்பில் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டனர்.ஆனால், அத்வானி ஆதரவுடன் புத்தகத்தை வெளியிட்டார் நரசிம்ம ராவ். அந்த புத்தகம் தான் இப்போது, பா.ஜ.,விற்கு வில்லனாக வந்துள்ளது!

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201709:12:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் I voted for myself, so did my family and neighbours. The EVM has to be defective. How else can I get zero votes? Shrikant Shirsat, Independent Candidate, Mumbai
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201709:11:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் I was announced as the winner and given the official letter under Section 149 (of the Representation of Peoples Act). Then we were asked to leave. But when we began our victory march, after about an hour, we were told that votes from one EVM were yet to be counted. And then suddenly, the BJP candidate was d the winner. - Manisha Mohite, NCP Candidate, Pune
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஏப்-201709:11:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உ.பி யில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: " எந்த அளவுக்கு நேர்மையாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது என்பதற்கு இந்த தேர்தலே சிறந்த உதாரணம். எனக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்லட்டும். ஏன், என் குடும்பத்தினர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை என சொல்லட்டும். பரவாயில்லை. ஆனால், என்னுடைய ஓட்டு எங்கே போனது? வாக்கு இயந்திரத்தில் எனக்கு பதிவான வாக்கு 0 (பூஜ்யம்)" என்றார். இதற்கு தேர்தல் கமிஷனோ, பாஜகவோ என்ன சொல்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
11-ஏப்-201715:46:45 IST Report Abuse
V Gopalan He was a man to go after Thiruvalluvar and every one praised him without knowing his intention. Normally, the party cadres of BJP are motor mouths and Tharun vijay is of no exception. Of course for the last three years there is no achievements did by BJP but their cadres blabbered more than what they are supposed to do. Any way, they will get answer in 2019.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஏப்-201712:51:36 IST Report Abuse
Nallavan NallavanThere was no bad intention with Tarun Vijay. What you peopele do in Karnataka / Bangalore ???? Any use of you people in Cauvery issue? While Karunanidhi was in power he compromised with Ediyurappa in the same issue. What you had done that time?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை