வில்லன் டூ கதாநாயகன் - அருண்மொழி| Dinamalar

வில்லன் டூ கதாநாயகன் - அருண்மொழி

Added : ஏப் 09, 2017 | கருத்துகள் (1)
Advertisement
வில்லன் டூ கதாநாயகன் - அருண்மொழி

'கூவர் கூட்டம்...' ஒரு குக்கிராமம். 20 குடும்பங்களை சுமந்து இயல்பான மக்கள் வாழும் பகுதி. ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு நல் சாட்சி சொல்லும் கிராமம். இந்த கூவர் கூட்டம் தந்த செம்மொழிதான் வில்லன் நடிகர் அருண்மொழி,27.
பொறியியல் பட்டதாரி. முதுகுளத்துார், இளஞ்செம்பூரை சேர்ந்த கவிஞர் ஞானகரவேல் உதவியுடன் சினிமாத்துறையில் நுழைந்தார். சினிமாவுக்கு ஏற்ற வசீகரம், துருதுரு முக பாவனையுடன் 2014 ல் 'யாத்திரை' என்ற குறும்படத்தில் நடிப்பு திறமையை நிரூபித்தார்.
இதனால், கவுதம் நடிப்பில் உருவான சிப்பாய் படத்தில் தனது முதல் முத்திரை பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அருண்மொழிக்கென அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் பிறகு 'சண்டிவீரன், 'பாண்டியநாடு' படங்களில் நடித்தாலும், 'கொம்பன்' அருண்மொழியை திரை உலகிற்கு அடையாளம் காட்டியது.
அதன்பிறகு, 'ராஜாமந்திரி' படத்தில் வில்லனாகவும், அடுத்து 'பூம்பூம் காளை' படத்திலும் நடித்து பெயர் பெற்றார். அடுத்து பிரபுதேவா நடிக்கும் 'யங் மங் ஜங்' படம், 'பூம்பூம் காளை' இயக்குனர் குஷால்குமார் உட்பட 2 படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கவுள்ளார் அருண்மொழி.
தனக்கு இஷ்டமான சினிமா பட உலகை தேர்வு செய்து, துணை நடிகராக படங்களில் நடித்து அசத்தி வரும் அருண்மொழி, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் படப்பிடிப்பு செட் அமைத்து தருவது, சிறு சிறு கிராமத்து வேடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து தருதல், படத்திற்கு தேவையான இடங்களை கண்டறிவது, என பிசியாக உள்ளார்.
இனி அருண்மொழி...
சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. இதனால் படிப்பு முடிந்ததும் வேலையை தேடாமல் சொந்த காலில் உழைக்கும் முயற்சியில் ஓட்டல்
துவங்கினேன். தொழில் சரியில்லாததால் எனது உறவினர் கவிஞர் ஞானகரவேல் உதவியுடன் குறும்படங்களில் நடித்து, சினிமாவில் என்னை வளர்த்துக்கொண்டேன். இதனால் படங்களில்
வில்லன் நடிகராகும் அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகன் ஆவது கனவு. அது விரைவில் நிறைவேறும். வறட்சி மாவட்டமாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சினிமா ஷூட்டிங் நடக்க
ஏற்பாடு செய்து வருகிறேன்.
இதனால், முதுகுளத்துாரில் 11 படங்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்தது. தினமும் 500 பொதுமக்களுக்கு 500 ரூபாய் வருமானத்திற்கு ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியளித்தது, என்றார்.
வாழ்த்த 99945 14242.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X