கேரளா டூ மதுரை - சுவீட் சவுமியா| Dinamalar

கேரளா டூ மதுரை - சுவீட் சவுமியா

Added : ஏப் 09, 2017
Advertisement
கேரளா டூ மதுரை - சுவீட் சவுமியா

உன் பனிக்கட்டி பார்வையால் சுட்டெரிக்கும் சூரியனும் சுருண்டு விழுகிறது...
இரவுகளில் உன்னை காணாத இருண்ட வானம் நிலவை நிராகரிக்கிறது. அழகானதெல்லாம் உன்னில் இருந்தே அழகை ஈர்த்துக் கொள்கிறது.
உன் இதழ் தொட்ட தென்றலை சுவாசித்தே பூக்கள் உயிர் வாழ்கிறது...
கடவுளின் பூமியில் பிறந்து, 'டெம்பிள் சிட்டி'யில் நடிகையாக அறிமுகமான 'சுவீட்' சவுமியா மனம் திறக்கிறார்...
* சுவீட் சவுமியா?
கேரளா தான் எனக்கு சொந்த ஊர். ஒரு டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தேன். பின், மலையாளத்தில் 'அப்பூப்பன் தாடி', 'அனிஷியா' படங்களில் அறிமுகமானேன்.
* கேரளா டூ மதுரை ?
கேரளாவில் இருந்து நான் முதன் முதலா நடிக்க வந்த ஊர் மதுரை தான். இயக்குனர் குகனின் 'மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி 2' எனக்கு முதல் படம்.
* உங்கள் கேரக்டர்...
படத்தில் நான் பக்கா மதுரை பொண்ணு, அதில் குறும்படம் எடுக்குறாங்க; அதுல நான் நடிகையா வரேன்.
* 'யூ லைக்' மதுரை ?
ரொம்ப பிடிச்சிருக்கு, சினிமாவுல சின்ன கேரக்டர் பண்றவங்களை கூட, மதுரை மக்கள் பெருசா பாராட்டுறாங்க. 'மதுரைக்கு போகாதடி' பாட்டை கூட நான் அடிக்கடி பாடுவேன்... 'ஐ லைக் டெம்பிள் சிட்டி'.
* விரும்பி ருசித்தது ?
மதுரை ஸ்பெஷல் பொங்கல், கறிதோசை, ஜிகர்தண்டா...
* இயக்குனர் குகன்...
'இந்த படத்தின் கதைக்கு நீங்க தான் பொருத்தமா இருப்பீங்க'ன்னு கேரளா வந்து என்னை 'செலக்ட்' பண்ணினாரு. பேச வேண்டிய வசனங்களை 'ஸ்பாட்'ல தான் சொல்வாரு. எழுதி வைக்குற பழக்கம் இல்லை, 'செம டேலன்ட் டைரக்டர்'...
* நெக்ஸ்ட் கோலிவுட் ?
அதிர்ஷ்டம் இருந்தா, ஒரு நாள் 'கோலிவுட்'டில் பெரிய படத்தில் நானும் நடிப்பேன்...
* தமிழில் கேரளா கேர்ள்ஸ்...
நாங்களும் பார்க்க தமிழ் பெண்கள் மாதிரி தான் இருக்கோம். எங்களுக்கும் தமிழ் நல்லா தெரியும். பின்னணி இல்லாம பேசுவோம். அதனால தான் தமிழ் சினிமாவிற்கு கேரளா கேர்ள்ஸ் அதிகம் செலக்ட் பண்றாங்க.
* ஷூட்டிங் ஸ்பாட் ?
பார்க்கும் இடமெல்லாம் மலைகளில் பச்சை புல்வெளிகள் போர்த்திய, கேரளா வாகமண், ஒரு முறை அங்கே ஷூட்டிங் போயிருக்கேன். சூப்பர் ஸ்பாட், சும்மா ஜில்லுனு இருக்கும்.
* பிடித்த ஹீரோயின்ஸ்...
மலையாளத்தில் பார்வதி மேனன், தமிழில் ரம்யா கிருஷ்ணன். இவங்க நடிக்கும் படங்கள் எல்லாம் ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள படங்களா தான் இருக்கும்.
* சோஷியல் மீடியா ?
'சோஷியல் மீடியா'க்களில் ஹீரோயின்களை தப்பு, தப்பா விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு.
*அடுத்த படம், ரசிகர்கள்...
தமிழில் ஸ்ரீமணி இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன். ரசிகர்கள், என்னை மாதிரி புதுமுகங்களை நிறைய சப்போர்ட் பண்ணனும்...

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை