ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ... | Dinamalar

ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ...

Updated : ஏப் 11, 2017 | Added : ஏப் 11, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ...

ஆறாயிரம் கிலோ எடை உள்ள தனது பெரிய உடம்பின் அன்றாட குறைந்தபட்ச தேவையான 250 கிலோ தீவனத்திற்காகவும்,90 லிட்டம் தண்ணீருக்காகவும் அந்த யானை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தும் கிடைக்காமல் நாள்பட்ட பட்டினி காரணமாக ஒரு இடத்தில் சாய்ந்து சரிந்து விழுந்தது.
கூடவே உற்சாகமாக நடந்து வந்து கொண்டிருந்த குட்டி யானை தன் தாயின் திடீர் தள்ளாட்டத்தையும், சரிவையும் தாங்கமுடியாமல் தனது அம்மாவிற்கு என்னாச்சோ? ஏதாச்சோ? என்று சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டது.

இந்த சம்பவம் நடந்த இடம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாக்கான்பாளையம் வனமாகும்.குட்டியானையின் சத்தத்தை கேட்டு கிராம மக்களும் வனத்துறையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
முதலில் என்ன நடந்தது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்த வனத்துறையினர் உடனடியாக யானையின் உணவிற்க்கும் தண்ணீருக்கும் ஏற்பாடு செய்தனர்.இரண்டையும் பார்த்த மாத்திரத்தில் குட்டி யானை ஒடோடிப்போய் தன் பசி தாகத்தை தீர்த்துக்கொண்டு தன் தாய்க்கும் கொண்டுவந்து கொடுத்தது.

தாய் யானைக்கோ அருகில் போடப்பட்ட தீவனத்தைக்கூட எடுத்துச் சாப்பிட முடியாத அளவிற்கு களைத்துப் போயிருந்தது.மருத்துவக்குழுவானது ஊசிமூலமாக தெம்பு மருந்து ஏற்றியபிறகு தாய் யானை கொஞ்சம் கண்ணைத்திறந்து பார்த்தது.
கண்ணைத் திறந்ததும் அது தேடியது தனது குட்டியைத்தான், 'அம்மா நான் இங்கேயிருக்கேன்' என்பது போல ஒடோடிப்போய் அம்மாவின் தும்பிக்கைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அன்பை சொரிந்தது.

சுற்றிலும் நல்லவர்களும் நம்பிக்கையானவர்களும் இருப்பதை அறிந்ததாலோ என்னவோ தாய் யானை கொஞ்சம் கொஞ்சமாக தனது உடலை அசைத்து எழ முயற்சித்தது,ஆனால் முடியவில்லை.படுத்த நிலையிலையிலேயே சாப்பாட்டையும் தண்ணீரையும் நிறைய எடுத்துக்கொண்டது.இன்னும் கொஞ்சம் தெம்பு வந்து மீண்டும் எழ முயற்சித்தது, அப்போதும் முடியவில்லை.

பிறகு கிரேன் கொண்டுவரப்பட்டு அதன் உதவியுடன் யானையை துாக்கி நிறுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது.அப்போதெல்லாம் அம்மாவை ஏதோ செய்யப்போகிறார்கள் என்று நினைத்து கிரேனை முட்டி தள்ளுவதும், அது அதன் சின்ன உடம்பால் அது இயலாது போய் திரும்ப அம்மாவிற்கும் கிரேனிற்கும் நடுவில் நிற்பதுமான குட்டி யானை தவித்துப் போனது.

பிறகு குட்டி யானையை ஒரு ஒரமாக தனிமைப்படுத்தி நிறுத்திவைத்துவிட்டு தாய் யானையை துாக்கி நிறுத்தினர்.மீண்டும் உணவுடன் சத்து மருந்துகளும் கலந்து வழங்கப்பட்டது.உடல் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உடல் சூடு தணிக்கப்பட்டது.பெரிய உயிரைக் காப்பாற்ற நடைபெற்ற இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

நான்கு கால்களிலும் நிற்கும் தெம்பு கிடைத்ததும் அடுத்த நொடி கிடுகிடுவென நடந்து சென்று குட்டியை அனைத்துக் கொண்டது, அதன் பிறகு தாயும் சேயும் காட்டுக்குள் வெகு வேகமாக வீறு நடைபோட்டு சென்றன.

ஒரு விலங்கினத்தின் தாய்-சேய் பாசத்தை பார்த்து மக்கள் கண்கலங்கினர்,சுற்றுச்சுழல் கெட்டுப்போய்விட்டதன் துவக்கமே இது என எண்ணி வனத்துறையினர் மனம் கலங்கினர்.

தகவல் தந்து உதவிய அருண் மற்றும் ரேஞ்சர் சிவசுப்பிரமணியனுக்கு நன்றி!

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai Rm - nagapattinam,இந்தியா
16-ஜூன்-201710:42:40 IST Report Abuse
Pillai Rm காப்பாற்றாமல் போனது எத்தனையோ ....
Rate this:
Share this comment
Cancel
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
12-ஜூன்-201715:18:45 IST Report Abuse
மூ. மோகன் தாய்-சேய் போராட்டம் கண்களை குளமாக்கியது. வனத்துறையினரின் செயலை பாராட்ட வார்த்தையில்லை
Rate this:
Share this comment
Cancel
palanivel - madurai,இந்தியா
25-மே-201716:40:00 IST Report Abuse
palanivel கண்களில் ஓரம் நீர் ...வார்த்தை வரவில்லை ...மகிழ்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Murali - DOHA ,கத்தார்
21-மே-201715:55:45 IST Report Abuse
Murali யானையையும் அதன் குட்டியையும் காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி. யாரு சொன்னது மனிதனிடம் மனித நேயம் செத்து விட்டது என்று... அருண், ரேஞ்சர் சிவசுப்பிரமணியனுக்கு மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலதில் உள்ள மக்கள் மனது நிறைய மனித நேயம் கொண்டுள்ளனர்... நன்றி... தாய் சேய் உறவு கண் கலங்க வைத்து விட்டது .8 மணி நேரம் போராடி வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .அந்த பெரிய உயிர்களுக்கு தொடர்ந்து உணவும் நீரும் கிடைக்க அந்த ஆண்டவன் கருணை காட்டுவான் என்று நம்புவோம். கண்களில் ஓரம் நீர் ...வார்த்தை வரவில்லை ...மகிழ்ச்சி ..
Rate this:
Share this comment
Cancel
yuva - tirupur,இந்தியா
20-மே-201713:56:52 IST Report Abuse
yuva உயிரை காப்பாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
17-மே-201714:25:29 IST Report Abuse
balasubramanian தாய் சேய் உறவு கண் கலங்க வைத்து விட்டது .8 மணி நேரம் போராடி வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் .அந்த பெரிய உயிர்களுக்கு தொடர்ந்து உணவும் நீரும் கிடைக்க அந்த ஆண்டவன் கருணை காட்டுவான் என்று நம்புவோம் .
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
10-மே-201704:44:55 IST Report Abuse
Milirvan கண்கள் பனித்தன.. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று மனம் கனத்தது..
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
03-மே-201718:15:49 IST Report Abuse
THINAKAREN KARAMANI யானைக்கு வேண்டிய உணவு தண்ணீர், சக்தி கிடைக்க ஊசிமூலமாக மருந்து என்று ஏற்பாடு செய்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி யானையின் உயிரைக்கைப்பற்றிய வனத்துறையினர், மருத்துவக்குழுவினர்,மற்றும் பொதுமக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள். .THINAKAREN KARAMANI.
Rate this:
Share this comment
Cancel
Nagar Iyer - mumbai,இந்தியா
30-ஏப்-201707:26:49 IST Report Abuse
Nagar Iyer ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவ மாணவியரை தினமும் ஒரு மணி நேரம் 'காடு வளர்ப்பு திட்டத்தில்' கட்டாய பணி செய்விக்கவேண்டும். XII certificate பெறுவதற்கு ஒரு மாணவன் குறைந்தபக்ஷம் 10 மரங்களை வளர்த்து பழம் வரும் நிலைக்கு வளர்த்தி காண்பிப்பது அவசியம் ஆக்கவேண்டும். 10 பேருக்கு ஒரு கிணறு என்ற விகிதத்தில் குடி நீர் கிணறுகளை தோண்டவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
SHEIK WISEL - Chennai,இந்தியா
21-ஏப்-201717:45:23 IST Report Abuse
SHEIK WISEL What a great effort by the officials and the local people who saved the life of a mother elephant who was dying almost. These people are the champions whether we understood or not surely the mother and the child elephants understood the gesture. They will remember these good people till their life time. This is an example how we should help others selflessly. May God bless all in that part of the world.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை