நேர்மை+திறமை+வித்தியாசம்=விக்ரம் வெங்கடேஸ்வரன்.| Dinamalar

நேர்மை+திறமை+வித்தியாசம்=விக்ரம் வெங்கடேஸ்வரன்.

Updated : ஏப் 13, 2017 | Added : ஏப் 13, 2017
Advertisement

நேர்மை+திறமை+வித்தியாசம்=விக்ரம் வெங்கடேஸ்வரன்.

இவர் ஒரு போட்டோகிராபர்,
இவர் ஒரு பத்திரிகையாளர்,

இவர் ஒரு கார்ப்பரேட் வீடியோகிராபர்,
இவர் ஒரு பராம்பரிய உணவு விற்பனையாளர்


இது ஒவ்வொன்றையும் தனித்துவத்துடன் சிறப்பாக நேர்மையாக செய்துவரும் இந்த 33 வயது இளைஞரிடம் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை இம்மியும் குறையாமல் சொல்லித்தர விரும்புவதுதான்.

முதுகலை ஜர்னலிசம் படித்துவிட்டு டில்லியில் உள்ள சிஎன்என்-ஐபிஎன் என்ற ஊடகத்திற்கு வேலை பழக சென்றார்,பிறகு அங்கேயே நல்ல வேலையும் தேடிக்கொண்டார்.டில்லியில் இருந்தவரை பெறாத பிள்ளையாக இவரை பார்த்துக் கொண்டவர்கள் அலோக் வர்மா-நீரஜ் வர்மா தம்பதியினர்.அவர்களிடம் இருந்து பாசத்தையும் நேசத்தையும் மட்டுமின்றி வாழ்வியலையும் கற்றுக்கொண்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வந்தவரை இங்குள்ள சேனல்கள் கம்பளம் விரித்து வரவேற்றது.நிறைய புதுமையான நிகழ்ச்சிகள் செய்தார்.இளைஞர்களை கிராமத்தில் தங்கவைத்து எங்கே நம் நாட்டின் இதயம் இருக்கிறது என்பதை உணரச்செய்து எது நிஜம் என்பதை கற்றுக்கொடுத்து இதழியலின் மேலான தன்மையை அவர்களுக்குள் பதியவைத்தார்.

குறைந்த பட்ஜெட்டில் இவர் எடுத்துக் கொடுத்த பல கார்ப்பரேட் வீடியாக்கள் இன்றளவும் பல கல்லுாரிகளின் விளம்பர துாதுவர்களாக இருந்துவருகிறது.

இன்றைக்கு மொபைல் ஜர்னலிசம்தான் பேசப்படுகிறது இதில் இவர் முன்னோடி மட்டுமல்ல மிக கில்லாடியும் கூட .இதை மூடு மந்திரம் போல வைத்திருப்பவர்கள் மத்தியில் இவர் தனி ரகம்.அனைவருக்கும் எளிமையாக சொல்லிக்கொடுக்கத் தயராகிவருகிறார்.

நல்லதை சொல்ல வேண்டும் அதை நல்லவிதமாக சொல்லித்தரவேண்டும் எதைச் செய்தாலும் அதில் தரமே தராக மந்திரமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இவரிடம் போட்டோ,வீடியோ உள்ளீட்ட எது பற்றியும் விசாரிக்கலாம், விளக்கம் பெறலாம் அவரது எண்:9940376523.
Website: www.shyamacreatives.com
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை